என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர் விபத்து"

    • தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர் இழந்தது.
    • ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி அதில் இருந்த 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அதில் விமான உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவன ஊழியர்கள் உள்பட 7 பேர் சென்றனர்.

    காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள அச்சிசு என்ற இடத்துக்கு அருகே தரையிறங்க முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை ஹெலிகாப்டர் இழந்தது. இதனால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி அதில் இருந்த 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.

    படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ரஷிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பசிபிக் கோஸ்ட் நெடுஞ்சாலை மற்றும் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் தெரு அருகே பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
    • மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கம் நடைபெற்றது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று, டயமர் மாவட்டத்தின் சிலாஸில் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • அங்கு ஹெலிகாப்டரில் அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்பியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், சாங்கி பண்டா பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அங்கு ஹெலிகாப்டரில் அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்பியது.

    ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது மோசமான வானிலை காரணமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் விமானிகளைக் காப்பாற்றினர். அதற்குள் எதிர்பாரா விதமாக விமானம் வெடித்ததில் விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    • கானா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
    • இதில் மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    கானா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கானாவும் ஒன்று. தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்கச்சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது.

    அதில் பாதுகாப்புத்துறை மந்திரி எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் மந்திரி அல்ஹாஜி முர்தாலா முகமது உள்பட 8 பேர் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து,கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து விபத்து பகுதிக்குச் சென்ற ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அந்த நாட்டின் மந்திரிகள் உள்பட 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட கானா அரசு, தேசிய துக்க தினமாகவும் அறிவித்தது.

    • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உயிரிழந்தார்.
    • கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றவர்.

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் ராஜ்வீர் சிங்கின் புகைப்படத்தை அவரது கையில் பிடித்தபடியே நடந்து வந்தார்.

    ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

    கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றார். கடைசியாக அவர் பதான்கோட்டில் உள்ள ராணுவ விமானப் படையில் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, லெப்டினன்ட் கர்னல் ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்தார்.

    ராஜ்வீர் சவுகான் 2011 இல் தீபிகாவை திருமணம் செய்தார். தீபிகா சவுகான் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். 14 வருட திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது
    • சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.

    உத்தரகாண்டில் பருவ நிலை சரியில்லாத நேரங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பக்தர்கள் பலியானர்கள்.

    கடந்த 7-ந் தேதி கடுமையான பனிப்பொழிவு காரணமாக கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த ஹெலிகாப்டர் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதால் 5 பக்தர்கள் உயிர் தப்பினார்கள்.

    இந்த நிலையில் உத்தரகாண்டில் மீண்டும் ஒரு ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குப்தகாசிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் இருந்தனர்.

    கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கவுரிகுன்று என்ற பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்ல முடியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாமல் விமானி திணறினார்.

    சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் சிறிய மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அந்த ஹெலிகாப்டர் விழுந்து தீ பிடித்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலியானார்கள்.

    சம்பவ இடத்துக்கு உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சென்று உடல்களை மீட்டனர்.

    • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது.
    • இன்று அதிகாலை குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது.

    உத்தரகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் இந்த மாதம் 3-ந்தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது. இன்று அதிகாலை குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. அதில் விமானி (5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை) உட்பட ஆறு பயணிகள் இருந்தனர்.

    ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் அடங்குவதாக தகவல் வெளியானது.
    • சிஇஓவும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயினில் இருந்து அமெரிக்கா வந்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

    இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் அடங்குவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் உயிரிழந்தவர்கள் Siemens நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மொண்டல் மற்றும் 4, 5 மற்றும் 11 வயதுடைய அவர்களது மூன்று குழந்தைகளுடன் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

     சம்பவத்தில் 36 வயதான விமானியும் உயிரிழந்தார். சீமென்ஸ் உலகளவில் கிளைகள் கொண்ட பிரபல ஜெர்மானிய பொறியியல் நிறுவனம் ஆகும். கொல்லப்பட்ட சிஇஓவும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயினில் இருந்து அமெரிக்கா வந்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த தருணத்தின் கடைசி நிமிட வீடியோவும் வெளியாகி உள்ளது.

    • அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்தது.
    • இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

    இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • நாகசாகி மாகாணத்தில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
    • விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர்

    ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில், ஒரு நோயாளி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று நாகசாகி மாகாணத்தில் உள்ள  விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் மருத்துவர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

    • ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கினார்.
    • 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்டு கோஸ்டிலுள்ள கேளிக்கை விடுதி அருகே தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்து கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது.

    ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

    அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×