என் மலர்
இந்தியா

சவுந்தர்யா முதல் அஜித் பவார் வரை... விமான, ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள்
- கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் தனது சகோதரருடன் பயணம் செய்த நடிகை சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்தார்.
- இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
* 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி, சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள மவுண்ட் பிளாங்கில் ஏர் இந்தியா விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் முன்னோடி அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா உயிரிழந்தார்.
* 1973-ம் ஆண்டு மே 31-ந் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் எம்.பி. சுரேந்திர மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார்.
* 1980-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி, டெல்லியில் விமான சாகசத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கோர விபத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும், ராஜீவ்காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.
* 2001-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மோசமான வானிலை காரணமாகத் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் ரெயில்வே மந்திரி மாதவ்ராவ் சிந்தியா உயிரிழந்தார்.
* 2002-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி, ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெல் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், பாராளுமன்றத்தின் 12-வது சபாநாயகராக இருந்த ஜி.எம்.சி.பாலயோகி மரணமடைந்தார்.
* 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் தனது சகோதரருடன் பயணம் செய்த நடிகை சவுந்தர்யா விபத்தில் உயிரிழந்தார்.
* 2005-ம் ஆண்டு மார்ச் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அரியானா முன்னாள் மின்துறை மந்திரி ஓ.பி.ஜிண்டால் மற்றும் முன்னாள் வேளாண் மந்திரி சுரேந்தர் சிங் ஆகியோர் பலியாகினர்.
* 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி, ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, நல்லமலா வனப்பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
* 2011-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முன்னாள் முதல்-மந்திரி டோர்ஜி காண்டு இறந்தார்.
* 2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ந் தேதி, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் இருந்து சென்றபோது நீலகிரியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 11 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
* 2025-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்தார்.
* 2026-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் விமானம் வெடித்துச் சிதறியதில் மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.






