search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "dubai"

  • நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
  • எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்

  1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).

  30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.

  இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.

  இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

  அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது. 


  அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:

  நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.

  எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.

  மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.

  ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.

  என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • 2717 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாதான் தற்போது உலகின் உயரமான கட்டிடம்
  • ஜெட்டா டவரின் 157-வது தளத்தில் மிக பெரிய பார்வையாளர் அரங்கம் அமைய உள்ளது

  மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE). இதன் தலைநகரம் அபு தாபி (Abu Dhabi). அமீரகத்தில் உள்ள முக்கிய நகரம், துபாய்.

  துபாய் நகரில், 2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) உள்ளது. 2004ல் கட்ட தொடங்கப்பட்ட இது 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர்.


  இந்நிலையில், "உலகின் உயரமான கட்டிடம்" எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா (Jeddah).

  ஜெட்டாவின் வடக்கே, ஜெட்டா எகனாமிக் சிடி (Jeddah Economic City) எனும் திட்டத்தின்படி உருவாகும் நகர மேம்படுத்தலில் கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது. இதுவரை உலகில் இல்லாத கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் இது கட்டப்பட்டு வருகிறது.

  சவுதி அரேபிய இளவரசர் அல்-வலீத் பின் தலால் (Al-Waleed bin Talaal) மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்காக இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் கட்டிட வடிவமைப்பாளர்.

  புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் ஏட்ரியன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

  சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழிமுறைகளை கையாண்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

  இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.

  திட்டமிட்டபடி இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் "1 கிலோமீட்டர் உயர கட்டிடம்" எனும் புகழை பெறும்.

  • தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.
  • கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.

  இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

  கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.

  ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • மனைவி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட வேண்டும் என கோரினார்.
  • ஆனால் மனைவி கோரிக்கையை கணவர் ஏற்கவில்லை.

  மும்பை:

  மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வனாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் நிகில் கண்ணா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

  இந்நிலையில், நிகில் கண்ணாவை ரேணுகா தாக்கி கொன்றதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் போலீசார் கூறியது வருமாறு:

  தனது பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துச் செல்ல வேண்டும், விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கித்தர வேண்டும் என ரேணுகா கணவரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத நிகில் கண்ணா, டெல்லியில் உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடலாம் என்றார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா, கணவர் மூக்கின் மேல் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் அவரது சில பற்கள் உடைந்தன. நிலைதடுமாறி கீழே விழுந்த நிகில் கண்ணா சுய நினைவை இழந்து உயிரிழந்தார் என தெரிவித்தனர்.

  இதையடுத்து, டெல்லி போலீசார் ரேணுகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட மறுத்த கணவரை கையால் அடித்துக்கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் துபாயில் தனது முதல் பறக்கும் கார் சோதனையை நடத்தியது.
  • முதற்கட்ட சோதனையில் பறக்கும் கார் ஆளில்லாமல் 90 நிமிடங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

  சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பெங் இன்க் (Xpeng Inc) ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது முதல் பறக்கும் காரை வெளியிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் பறக்கும் காரை வெளியிட பெங் இன்க் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பெங் இன்க் உருவாக்கிய X2 பறக்கும் கார் செங்குத்தாக டேக்-ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

  இதில் உள்ள எட்டு ப்ரோபெல்லர்கள் வாகனத்தின் மூலையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை முயற்சியாக துபாயில் இந்த பறக்கும் கார் 90 நிமிடங்கள் ஆளின்றி இயக்கப்பட்டது. அடுத்த தலைமுறை பறக்கும் கார்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடல் இது என பெங் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

  "சர்வதேச சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். உலகில் புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முன்னோடியாக துபாய் விளங்குகிறது. இதன் காரணமாகவே பறக்கும் கார் சோதனையை இங்கு மேற்கொள்ள முடிவு செய்தோம்," என பெங் இன்க் நிறுவனத்தின் பொது மேலாளர் மிங்குவான் கியூ தெரிவித்துள்ளார்.

  • கடந்த 2020 ஆண்டு கோவில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • அனைத்து மதத்தினருக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

  துபாய்:

  துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின்  சகிப்புத்தன்மைத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். 

  இதை புதுப்பிக்கும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், மற்றும் பிற பார்வையாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான மணிகளும் அங்கு தொங்க விடப்பட்டுள்ளன.

  காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலுக்கு வருவதற்கு முன்பு பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. QR-குறியீடு அடிப்படையில் முன்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை பெற்றுள்ளார். #GlobalTeacherPrize2019 #Kenyateacher
  துபாய்:

  துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் நடைபெற்றது. இதனை ஹாலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார். சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.  

   

  அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி(36) வென்றார். இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பள்ளியில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஆவார். இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.

  சர்வதேச அளவில் விருது வென்றது குறித்து பீட்டர் கூறியிருப்பதாவது:

  ஆப்பிரிக்காவில் தினந்தோறும் புதிய பக்கத்தையும், புதிய அத்தியாயத்தையும் சந்திக்கிறோம். இப்போது நான் பெற்ற விருது எனக்கானது அல்ல. எனது நாட்டின் மாணவர்களுக்கானது. என் மாணவர்களின் சாதனைகளாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த விருது அவர்கள் மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பாக அமையும். சர்வதேச அளவில் 10 இறுதிப்போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இதில் நான் இவ்விருதினை பெற்றுள்ளேன். இதுவே மிகப்பெரும் உத்வேகம் தருகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  விருது பெற்ற ஆசிரியரை கென்யா பிரதமர் உகுரு கென்யட்டா பாராட்டியுள்ளார். 'உங்கள் சாதனை சரித்திரம், ஆப்பிரிக்காவின் சரித்திரமாகும். இளம் சாதனையாளர்களால் இந்த நாடு முன்னேறும்' என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #GlobalTeacherPrize #Kenyateacherwon

  ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  புஜேரா :

  ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

  பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை.

  ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக ஒரு ‘கோல்ப்’ பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர்.

  இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.
  நியூசிலாந்து மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலை கொண்டாடிய துபாய் நிறுவனத்தின் ஊழியர் பணிநீக்கம் செய்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
  துபாய்:

  நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

  துப்பாக்கி சூடு குற்றவாளி  "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி,  73 பக்கத்தில் தனது நோக்கங்களை  தெரிவித்திருந்தான்.  இந்த மனித தன்மையற்ற செயலுக்கு பல்வேறு நாட்டினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில், நியூசிலாந்து தாக்குதல் குறித்து கொண்டாடும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

  முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் இதனை அறிந்த அந்த நிறுவனத்தின் தலைவர் அவரை பணியில் இருந்து நீக்கினார்.  மேலும் அந்த ஊழியர் துபாயை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
  ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
  புதுடெல்லி:

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

  இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மாற்றப்படுகிறது) மற்றும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. ஆனால் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு நடைபெறுகிறது. இரு நாடுகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முடிவு அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகளை பெறும். அதிக புள்ளிகளை பெறும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன. அத்துடன் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்படாது என்று தெரிகிறது. அதேநேரத்தில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

  பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் ஆட்டங்களில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் விகிதாச்சாரம் குறித்து கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் நிர்வாகிகள் விவாதிக்க இருக்கிறார்கள்.