search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "cardiac arrest"

  • நண்பரிடமிருந்து ஷேக் முஸமில் அகமது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முஸமில் அகமது (வயது 25). இவர் கனடா நாட்டில் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டி கோனெஸ்டோகா கல்லூரியில் முதுகலை ஐ.டி. படித்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


  இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷேக் முஸம்மில் அகமது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு அவரது மாமாவும், தெலுங்கானா மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சி தலைவரான அம்ஜத் உல்லா கான் 'எக்ஸ்' இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் , இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் மாணவனின் உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • மும்பை வழியாக பயணித்த சீன கப்பலிலிருந்து உதவி கோரி இந்த மையத்திற்கு ஒரு செய்தி வந்தது
  • அன்றிரவு முழுவதும் வானிலை சாதகமாக இல்லை

  இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது.

  இப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது மும்பையிலுள்ள கடற்சார் மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையம் (Mumbai Rescue Coordination Centre).

  அரபிக்கடலில் மும்பை வழியாக பயணித்த எம்வி டாங் ஃபேங் கான் டான் நம்பர் 2 (MV Dong Fang Kan Tan No 2) எனும் சீன ஆராய்ச்சி கப்பலிலிருந்து இவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த கப்பல் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் போது இன் வெய்க்யாங் (Yin Weigyang) எனும் ஒரு மாலுமிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியுடன் கூடிய மாரடைப்பு ஏற்பட்டது.

  இதனால் அவருக்கு உடனடி மருத்துவ உதவி வேண்டி, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது.

  அந்த சீன கப்பல், அரபிக்கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. முழு இருளில் இருந்த அன்றிரவு முழுவதும் வானிலையும் சாதகமாக இல்லை.

  இருப்பினும் அந்த பயணியை காக்க இந்திய கடலோர காவல்படை தீவிரம் காட்டியது. இதனைத்தொடர்ந்து, மும்பையிலுள்ள மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையத்தை சேர்ந்த நிபுணர்கள், நேரத்தை வீணாக்காமல் அவரை காப்பாற்ற வான்வழியாக விரைந்தனர்.

  ஸிஜி ஏஎல்ஹெச் எம்கே-3 (CG ALH MK-III)எனும் ஹெலிகாப்டரில் கப்பலுக்கு விரைந்து சென்று அவரை கப்பலிலிருந்து தூக்கி அவசரகால மருத்துவ உதவிகளை செய்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதும் அவரை மீண்டும் அந்த கப்பலின் மருத்துவ நிர்வாக முகவரிடம் ஒப்படைத்தனர்.

  இந்த பேருதவிக்கு சீனா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  "நாங்கள் காக்கிறோம்" (We Protect) எனும் குறிக்கோளுடன் செயலாற்றும் இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சவாலான வானிலையில் கடும் இருள் சூழ்ந்த இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

  சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும் ஆபத்தான நேரங்களில் உதவி செய்யும் நண்பனாக வாழும் இந்தியர்களின் பண்பை இது பறைசாற்றுவதாக வைரலாகும் வீடியோவை காண்பவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.


  • அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன.
  • இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

  பெங்களூரு:

  கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசில், உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி (வயது 61). நேற்றிரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தமது வீட்டின் கழிவறையில் உமேஷ், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

  அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சுகாதார அமைச்சர் கே சுதாகர் மற்றும் பல பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.   


  உமேஷ் கட்டியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன், அவர் எனக்கு சகோதரராக இருந்தார்.  அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாகேவாடியில் அரசு மரியாதையுடன் உமேஷ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

  எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் உமேஷ் மறைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

  பெலகாவி மாவட்டத்தில் உள்ள பாகேவாடியில் பிறந்த உமேஷ் கட்டி, ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஜே.எச்.படேல், பி.எஸ். எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார். 

  ×