மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு- கோவை செல்வராஜ் உயிரிழப்பு

மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜின் உயிர் பிரந்துள்ளது.நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு- கோவை செல்வராஜ் உயிரிழப்பு
Published on

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.

திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.

ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே செல்வராஜின் உயிர் பிரிந்துள்ளது.

நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுகவில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாக இருந்த செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார்.

இதைதொடர்ந்து, கோவை செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com