என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துபாய்"

    • அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.
    • இந்த நேர்காணல் இணையத்தில் வைரலானது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார்தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    அண்மையில் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். இந்த நேர்காணல் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், அஜித்தை நேர்காணல் செய்த அனுபமா சோப்ரா அந்த நேர்காணல் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    மற்றொரு நேர்காணலின் இடையே அஜித்தின் நேர்காணல் குறித்து பேசிய அனுபமா சோப்ரா, "துபாயில் அஜித்திடம் நேர்காணல் எடுத்தேன். அவர் அங்கு தனியாக வந்தார். ஆனால், என்னுடன் ஒப்பனையாளர் இருந்தார். அஜித் மேக்கப் செய்து கொள்ளவே இல்லை. அவர் ஒரு சூப்பர்ஸ்டார், அவரது செயல் எனக்கு அது சங்கடமாக இருந்தது. மேலும் மற்றவர்களுக்கு அவர் அறை கதவை திறந்துவிடுகிறார். அவரின் எளிமையை கண்டு நான் கூச்சப்பட்டேன்" என்று தெரிவித்தார்.

    • விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • தேஜஸ் போர் விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது. விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    முந்தைய நாள் தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தேஜஸ் போர் விமான்ததில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் இல்லாத பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    • துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
    • துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    துபாய்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 18). இவர் துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைஷ்ணவ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது என நிதின் கட்கரி பேசினார்.
    • அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன என நிதின் கட்கரி பேசினார்.

    இந்தியா ஏப்ரல் 2023 இல் நாடு தழுவிய அளவில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை (E20) அறிமுகப்படுத்தியது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய படியாக மத்திய அரசு இந்த கொள்கையை முன்வைத்தது.

    இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் மைலேஜ் பாதிக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.

    குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் 2 மகன்கள் நாட்டின் 2 முன்னணி எத்தனால் உற்பத்தி ஆலையை நடத்துவதால் அவர்களின் சொந்த ஆதாயத்துக்காக எத்தனால் கலந்த பெட்ரோல் ஊக்குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இதுகுறித்து விளக்கம் அளித்த நிதின் கட்கரி, "எனது மூளை மாதம் ரூ. 200 கோடி சம்பாதிக்கும் மதிப்புடையது. எப்படி நியாயமாக சம்பாதிக்க வேண்டும் என எனக்கு தெரியும். எனக்கு எந்த பணப் பிரச்னையும் இல்லை. இதையெல்லாம் என் சொந்த நலனுக்காக செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "துபாயின் சாலைகளை மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரியை 6 மாதங்கள் அனுப்புங்கள் என அந்நாட்டு இளவரசர் பிரதமர் மோடியிடம் கேட்டார். அந்த அளவுக்கு இந்தியாவின் சாலைகள் சிறப்பாக உள்ளன" என்று தெரிவித்தார்.

    துபாய் சாலைகளை விட இந்தியாவின் சாலைகள் தரமாக உள்ளதாக நிதின் கட்கரி பேசியது இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    • தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • புகைமூட்டம் பரவ தொடங்கியதில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.

    தொடங்கியதில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர்.

    தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    67 மாடிக் கட்டடத்தில் வசித்த 3820 குடியிருப்பு வாசிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் உயிர்ச்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
    • இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன்.

    தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள சோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் (வயது 35).

    இவரும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வாலிபர் வாளால் 3 இந்தியர்களையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். சாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துபாயில் 2 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள், துபாயில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், உடலை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், இந்த விஷயத்தில் விரைவான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் பாடுபடும் என்றார்.

    கொல்லப்பட்ட பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    • மனைவி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட வேண்டும் என கோரினார்.
    • ஆனால் மனைவி கோரிக்கையை கணவர் ஏற்கவில்லை.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வனாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் நிகில் கண்ணா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

    இந்நிலையில், நிகில் கண்ணாவை ரேணுகா தாக்கி கொன்றதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் போலீசார் கூறியது வருமாறு:

    தனது பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துச் செல்ல வேண்டும், விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கித்தர வேண்டும் என ரேணுகா கணவரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத நிகில் கண்ணா, டெல்லியில் உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடலாம் என்றார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா, கணவர் மூக்கின் மேல் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் அவரது சில பற்கள் உடைந்தன. நிலைதடுமாறி கீழே விழுந்த நிகில் கண்ணா சுய நினைவை இழந்து உயிரிழந்தார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ரேணுகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட மறுத்த கணவரை கையால் அடித்துக்கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.
    • கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.

    இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.

    ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • 2717 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாதான் தற்போது உலகின் உயரமான கட்டிடம்
    • ஜெட்டா டவரின் 157-வது தளத்தில் மிக பெரிய பார்வையாளர் அரங்கம் அமைய உள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE). இதன் தலைநகரம் அபு தாபி (Abu Dhabi). அமீரகத்தில் உள்ள முக்கிய நகரம், துபாய்.

    துபாய் நகரில், 2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) உள்ளது. 2004ல் கட்ட தொடங்கப்பட்ட இது 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர்.


    இந்நிலையில், "உலகின் உயரமான கட்டிடம்" எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா (Jeddah).

    ஜெட்டாவின் வடக்கே, ஜெட்டா எகனாமிக் சிடி (Jeddah Economic City) எனும் திட்டத்தின்படி உருவாகும் நகர மேம்படுத்தலில் கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது. இதுவரை உலகில் இல்லாத கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் இது கட்டப்பட்டு வருகிறது.

    சவுதி அரேபிய இளவரசர் அல்-வலீத் பின் தலால் (Al-Waleed bin Talaal) மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்காக இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் கட்டிட வடிவமைப்பாளர்.

    புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் ஏட்ரியன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழிமுறைகளை கையாண்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.

    திட்டமிட்டபடி இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் "1 கிலோமீட்டர் உயர கட்டிடம்" எனும் புகழை பெறும்.

    • நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
    • எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்

    1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).

    30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.

    இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.

    இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது. 


    அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:

    நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.

    எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.

    மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.

    ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.

    என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்.
    • உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்.

    யூடியூப் நேர்காணல் ஒன்றில் தன்னை பற்றி தெரிவிக்கப்பட்ட அவதூறு கருத்துக்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனக்காக அதிகளவில் பணம் செலவிடப்படுவதாக பொய் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக பேசுவோர், ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்குவதற்கு முன்பு அவர்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மை தானா என்று உறுதிப்படுத்துவர் என்ற நினைப்பில் நான் அமைதி காத்தேன்."

    "எனது குடும்பமும், நானும் கடந்த சில நாட்களாக அளவில்லா மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இதுபோன்ற போலி செய்திளை பரப்பும் முன் தயவு செய்து யோசியுங்கள். நான் மிகவும் ஒழுக்கமான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். எனது 16 வயதில் இருந்தே எனக்கான செலவீனங்களை நானே பார்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன். எனது குடும்பம் இப்போதும் துபாயில் தான் வசிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் துபாயில் வசித்து வருகிறோம்."

    "திரைத்துறையில், நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ அல்லது கதாநாயகனிடமோ படத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்றோ பட வாய்ப்புகளை கொடுங்கள் என்றோ உதவி கேட்டதில்லை. நான் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பணியாற்ற வேண்டும் என்றோ அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ நான் எப்போதும் பேராசை கொண்டதில்லை."

    "இதுவரை என்னை தொடர்புப்படுத்தி பேசப்பட்ட விவரங்கள் எதிலும் உண்மையில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002-ம் ஆண்டில் இருந்து துபாயில் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். 2013-ம் ஆண்டில் இருந்து எனக்கு ரேசிங் மீது ஆர்வம் அதிகரித்தது. மேலும் சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பந்தயங்கள் பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது."

    "நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் மிக முக்கியமானவர் அல்ல. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மேலும் எனது வாழ்க்கையில் நானும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறேன். மனரீதியாக நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். உங்கள் குடும்பங்களில் இருக்கும் பெண்களை போன்றே, நானும் கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்."

    "அவர்கள் இதுபோன்று மேலும் என்மீது அவதூறு பரப்ப மாட்டார்கள் என்றும் ஊடகத்துறையில் இன்னமும் மனிதநேயம் மிஞ்சி இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த விவகாரத்தை நான் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கிறேன்."

    "ஒரு குடும்பத்தின் நன்மதிப்பை கெடுப்பதற்கு முன்பு நீங்கள் பெறும் தகவல்களை உறுதிப்படுத்துமாறு ஊடகத்தினரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். உண்மை ஜெயிக்கட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.
    • சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார்.

    'ஏஜிஎஸ்' பட நிறுவன தயாரிப்பில் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இது விஜய் க்கு 68- வது படமாகும். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மோகன், மீனாட்சி சௌத்ரி,சினேகா, லைலா, ஜெயராம்,யோகிபாபு, ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகை திரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்தது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் படமாக்கப்பட இருந்தது. இதற்கான 'ஷூட்டிங்' லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டார்.




    மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் விஜய் பங்கேற்று நடித்தார். அப்போது விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் 'கோட் 'படம் குறித்த முக்கிய 'அப்டேட்' இன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் 'கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தற்போது துபாய் சென்றுள்ளார். இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தன்னை காண காத்திருந்த குட்டி குழந்தை ஒன்றை பார்த்து விஜய் கையசைத்தார். அந்த குழந்தையுடன் விஜய் கொஞ்சி விளையாடினார்.இந்த வீடியோ இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×