search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burj Khalifa"

    • குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் துபாய் சென்றனர்.

    புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் வாழ்வின் ஏற்படும் திருப்பங்களே இப்படத்தின் கதை என இந்த ட்ரைலரை பார்த்தால் தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம்
    • 'மகாராஜா' படத்திற்கு துபாயில் உள்ள அதி உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற டிரைலர் திரையிடப்பட்டது.

    பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது.

    தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மாவீரன்', 'போர் தொழில்', 'ஃபர்ஹானா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', கார்த்தியின் 'ஜப்பான்' உள்ளிட்ட படங்களுக்கு அமீரகத்தில் புரோமஷனல் நிகழ்ச்சிகளை நடத்தி கொடுத்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளிவரவிருக்கும் 'மகாராஜா' படத்திற்கு துபாயில் உள்ள அதி உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் நடைபெற்ற டிரைலர் திரையிடல் மற்றும் அமீரகத்தின் சிலிகான் மாலில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஆகியவற்றையும் பலரும் பாராட்டும் வகையில் மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்தது.

     

    உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான 'மகாராஜா' டிரைலர் வெளியிடப்பட்டது. இதில் விட் ஈவன்ட்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோ நிறுவனங்கள் ஏற்பாட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்பட நிகழ்வுகள் புர்ஜ் கலீபாவில் அரிதாகவே நடைபெறும் நிலையில், இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் முன்னோட்டம் திரையிடப்பட்ட இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'மகாராஜா' பெறுகிறது. இதற்கு முன் 'விக்ரம்' படத்தின் முன்னோட்டம் இங்கு வெளியானது. இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     

    முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் சுதன், ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஜய் சேதுபதி, ஒரு காலத்தில் நான் இந்த நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தேன். அதே ஊரில் இன்று பாராட்டு கிடைக்கிறது என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

    முன்னோட்ட வெளியீட்டை தொடர்ந்து துபாய் லூலூ சிலிகான் சென்டிரல் மால் வளாகத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்களின் முன்னிலையில் தந்தை-மகள் இடையே பாசத்தை கூறும் தாயே தாயே பாடலுக்கு W.I.T குழுவை சேர்ந்த தந்தை-மகள் என 10 ஜோடி பங்குபெற்று பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

    தமிழின் பெருமையை சொல்லும் கலை நிகழ்ச்சிகளையும், பல முன்னனி நடிகர்களின் படங்களுக்கு புரோமோஷன் நிகழ்ச்சிகளையும் அமீரகத்தில் தொடர்ந்து நடத்த விட் ஈவன்ட்ஸ் திட்டமிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்
    • மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

    படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டு ஜொலித்தது. இதைக்காண படக்குழுவினர் நேற்று துபாய் சென்றனர்.

    புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமீபத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் , இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவில் நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி துபாயில் அக்கவுண்டண்ட் வேலை செய்தார், ஆனால் தற்பொழுது அவரது வளர்ச்சியால் துபாயின் சொத்தான புர்ஜ் கலீஃபாவில் அவரது முகம் கொண்ட போஸ்டர் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே சேதுபதியின் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 2717 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாதான் தற்போது உலகின் உயரமான கட்டிடம்
    • ஜெட்டா டவரின் 157-வது தளத்தில் மிக பெரிய பார்வையாளர் அரங்கம் அமைய உள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE). இதன் தலைநகரம் அபு தாபி (Abu Dhabi). அமீரகத்தில் உள்ள முக்கிய நகரம், துபாய்.

    துபாய் நகரில், 2717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) உள்ளது. 2004ல் கட்ட தொடங்கப்பட்ட இது 2009ல் கட்டி முடிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்து பலர் தினமும் இதை காண துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர்.


    இந்நிலையில், "உலகின் உயரமான கட்டிடம்" எனும் அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா (Jeddah).

    ஜெட்டாவின் வடக்கே, ஜெட்டா எகனாமிக் சிடி (Jeddah Economic City) எனும் திட்டத்தின்படி உருவாகும் நகர மேம்படுத்தலில் கிங்க்டம் டவர் என்றும் அழைக்கப்படும் ஜெட்டா டவர் (Jeddah Tower) கட்டப்பட்டு வருகிறது. இதுவரை உலகில் இல்லாத கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் இது கட்டப்பட்டு வருகிறது.

    சவுதி அரேபிய இளவரசர் அல்-வலீத் பின் தலால் (Al-Waleed bin Talaal) மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ள இத்திட்டத்திற்காக இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் (Adrian Smith) எனும் கட்டிட வடிவமைப்பாளர்.

    புர்ஜ் கலிஃபா கட்டிடத்தையும் வடிவமைத்த ஆர்க்கிடெக்ட் ஏட்ரியன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழிமுறைகளை கையாண்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

    இதன் 157-வது தளத்தில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், ஊரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கம் அமைய உள்ளது.

    திட்டமிட்டபடி இது கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் "1 கிலோமீட்டர் உயர கட்டிடம்" எனும் புகழை பெறும்.

    • ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது
    • இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது

    பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒன்றுபட்ட இந்தியா, 1947 ஆகஸ்ட் மாதம், சுதந்திரத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிவினை செய்யப்பட்டது.

    இதனையொட்டி வருடாவருடம் ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், மறுநாளான ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    சென்ற வாரம் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் மிக விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியா சமீபகாலமாக பல நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதில் முயற்சி எடுத்து வருகிறது. இதில் அரபு நாடுகளும் அடங்கும்.

    அரபு நாடான துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக கட்டிட வெளிப்புறம் முழுவதும் பல்வேறு அலங்கார ஒளி வடிவங்களால் இந்திய மூவர்ண கொடியை அழகாக பரவ விட்டிருந்தது. இது காண்போரை பரவசப்படுத்தியது.

    இக்காட்சி உலகெங்கும் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை குறிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபா அலங்கார மின்னொளி காட்சிகளை வெளிப்படுத்தவில்லை என ஒரு வீடியோ பரவியது.

    இதனை பரவலாக்கியவர்களில் ஒரு பயனர், "பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று அதனை ஏமாற்றிய புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஒளிர செய்திருக்கிறது. ஒரே சுதந்திர போர்தான், ஒரே சுதந்திரம்தான். ஆனால் இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது" என இந்தியாவை பாராட்டும் விதமாக ஒரு குறுஞ்செய்தியையும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.

    உண்மையில் நடந்தது என்னவென்றால், புர்ஜ் கலிஃபாவில் ஆகஸ்ட் 14 -ம் தேதி மாலை 07:50 மணிக்குத்தான் பாகிஸ்தான் கொடி ஒளிர செய்யப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்திற்கருகே பாகிஸ்தானியர்கள் ஆகஸ்ட் 14 அன்று, நாள் தொடங்கும் நள்ளிரவு நேரத்தில் கூடியிருந்தனர்.

    அவர்களில் ஒரு பெண் "மணி 12:01 ஆகிறது. ஆனால் பாகிஸ்தான் கொடி கட்டிடத்தில் ஒளிரப்படவில்லை" என ஒரு வீடியோவை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனை நம்பிய ஒரு சில இந்தியர்கள், மறு நாள் இந்திய மூவர்ண கொடியால் ஒளிரும் புர்ஜ் கலிஃபாவையும், அப்பெண்மணி பரப்பிய செய்தியையும் இணைத்து தவறுதலாக ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கின்றர்.

    அந்த வகையில், புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி தாமதமாக ஒளிர செய்ததே, இந்த தகவல் பரவ காரணமாகி விட்டது. உண்மையில், இந்திய தேசிய கொடியை போன்றே, பாகிஸ்தானின் கொடியும் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மூவர்ண கொடி ஒளிபரப்பானது.
    • வெளிநாடுகளிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன

    துபாய்:

    சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.

    124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

    இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான நேற்று காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. #GandhiJayanti #BurjKhalifa
    இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் முக்கியமானவர் மகாத்மா காந்தி. வன்முறையில் ஈடுபடாமல், சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டதால், மகாத்மா என்று அழைக்கப்பட்டார். இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாடு முழுவதும் நேற்று (அக். 2) கொண்டாடப்பட்டது. காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினார்கள். நாடு முழுவதும், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 


    இந்த நிலையில் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டிமான புர்ஜ் கலிஃபா நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலிஃபா கோபுரத்தில் இந்திய மூவர்ண கொடி மற்றும் காந்தியின் புகைப்படம் மற்றும் வாசகங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. #GandhiJayanti #BurjKhalifa

    ×