search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Independence Day"

    • ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது
    • இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது

    பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒன்றுபட்ட இந்தியா, 1947 ஆகஸ்ட் மாதம், சுதந்திரத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிவினை செய்யப்பட்டது.

    இதனையொட்டி வருடாவருடம் ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், மறுநாளான ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    சென்ற வாரம் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் மிக விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியா சமீபகாலமாக பல நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதில் முயற்சி எடுத்து வருகிறது. இதில் அரபு நாடுகளும் அடங்கும்.

    அரபு நாடான துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக கட்டிட வெளிப்புறம் முழுவதும் பல்வேறு அலங்கார ஒளி வடிவங்களால் இந்திய மூவர்ண கொடியை அழகாக பரவ விட்டிருந்தது. இது காண்போரை பரவசப்படுத்தியது.

    இக்காட்சி உலகெங்கும் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை குறிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபா அலங்கார மின்னொளி காட்சிகளை வெளிப்படுத்தவில்லை என ஒரு வீடியோ பரவியது.

    இதனை பரவலாக்கியவர்களில் ஒரு பயனர், "பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று அதனை ஏமாற்றிய புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஒளிர செய்திருக்கிறது. ஒரே சுதந்திர போர்தான், ஒரே சுதந்திரம்தான். ஆனால் இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது" என இந்தியாவை பாராட்டும் விதமாக ஒரு குறுஞ்செய்தியையும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.

    உண்மையில் நடந்தது என்னவென்றால், புர்ஜ் கலிஃபாவில் ஆகஸ்ட் 14 -ம் தேதி மாலை 07:50 மணிக்குத்தான் பாகிஸ்தான் கொடி ஒளிர செய்யப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்திற்கருகே பாகிஸ்தானியர்கள் ஆகஸ்ட் 14 அன்று, நாள் தொடங்கும் நள்ளிரவு நேரத்தில் கூடியிருந்தனர்.

    அவர்களில் ஒரு பெண் "மணி 12:01 ஆகிறது. ஆனால் பாகிஸ்தான் கொடி கட்டிடத்தில் ஒளிரப்படவில்லை" என ஒரு வீடியோவை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனை நம்பிய ஒரு சில இந்தியர்கள், மறு நாள் இந்திய மூவர்ண கொடியால் ஒளிரும் புர்ஜ் கலிஃபாவையும், அப்பெண்மணி பரப்பிய செய்தியையும் இணைத்து தவறுதலாக ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கின்றர்.

    அந்த வகையில், புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி தாமதமாக ஒளிர செய்ததே, இந்த தகவல் பரவ காரணமாகி விட்டது. உண்மையில், இந்திய தேசிய கொடியை போன்றே, பாகிஸ்தானின் கொடியும் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இவர்கள் ஹர்விந்தர் ரிண்டா மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்கள்
    • இலக்கு வைத்து கொலைகளை செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்

    இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதலோ, நாசவேலைகளோ நடைபெறாமல் இருக்க ராணுவமும், அனைத்து மாநில காவல்துறையினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    தேச எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது.

    "மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பஞ்சாப் காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. பயங்கரவாதிகளாக கருதப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்விந்தர் ரிண்டா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டி ப்ரார் ஆகியோரின் செயல்பாட்டாளர்களாக இந்த 5 பேரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் முழுவதும் இலக்கு வைத்து கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளோம்" என இந்த நடவடிக்கை குறித்து பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.

    சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று பஞ்சாபின் டர்ன் டரன் பகுதியில் தீவிரவாத குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் கமலும் சுருதியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் மேற்கு இந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்டும் பங்கேற்க இருக்கிறார். #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடித்துவருகிறார். இருவரும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி அணிவகுப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 ந்தேதி இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடைபெறும். இதில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.



    இந்த ஆண்டு இந்தியா சார்பில் கமலும் சுருதியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் மேற்கு இந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்டும் பங்கேற்க இருக்கிறார். #KamalHaasan #Shruti #VivianRichards
    ×