search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "கணவன்"

  • மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கியது ஐகோர்ட்.
  • பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.

  போபால்:

  மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதிக்கு கடந்த 2006-ல் திருமணம் நடைபெற்றது. கணவர் வெளிநாடு செல்லும் வரை மனைவி உடலுறவுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.

  எனவே கணவர் கீழமை நீதிமன்றத்துக்கு போய் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

  இந்நிலையில், மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது மத்திய பிரதேச ஐகோர்ட்.

  இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில், மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும். கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

  பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.

  • மனைவி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட வேண்டும் என கோரினார்.
  • ஆனால் மனைவி கோரிக்கையை கணவர் ஏற்கவில்லை.

  மும்பை:

  மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வனாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் நிகில் கண்ணா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

  இந்நிலையில், நிகில் கண்ணாவை ரேணுகா தாக்கி கொன்றதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் போலீசார் கூறியது வருமாறு:

  தனது பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துச் செல்ல வேண்டும், விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கித்தர வேண்டும் என ரேணுகா கணவரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத நிகில் கண்ணா, டெல்லியில் உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடலாம் என்றார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா, கணவர் மூக்கின் மேல் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் அவரது சில பற்கள் உடைந்தன. நிலைதடுமாறி கீழே விழுந்த நிகில் கண்ணா சுய நினைவை இழந்து உயிரிழந்தார் என தெரிவித்தனர்.

  இதையடுத்து, டெல்லி போலீசார் ரேணுகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட மறுத்த கணவரை கையால் அடித்துக்கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.
  • சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார்.

  திருச்செங்கோடு:

  ஈரோடு மாவட்டம் கருக்கம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.

  தொழிலாளர்கள்

  இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர் குத்திப் பாளையம் சங்கங்காடு பகுதியில் வசித்து வந்தனர். சோமசுந்தரம் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். மகேஸ்வரி கோன் அட்டை மில்லில் ேவலைப்பார்த்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று மாலை சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு அவர்தனது மனைவிக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டு இருந்தார்.

  தண்ணீரில் மூழ்கினர்

  அப்போது மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கிணற்றில் அடுத்தடுத்து மூழ்கி பலியானார்கள். இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் மற்றும் திருச்ெசங்கோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

  பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பலியான சோமசுந்தரம் மற்றும்அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

  சோமசுந்தரத்துக்கு நீச்சல் தெரிந்த நிலையில் அவரும், அவரது மனைவியும் எப்படி இறந்தார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர்.
  • கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பரமத்திவேலூர்:

  ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (55). இவரது மனைவி வளர்மதி (48). இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தனர்.

  இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்கம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவரும் பரமத்தியில் உள்ள அவர்களது உறவினர் வீடு கிரகப் பிரவேசத்திற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி அருகே நல்லூர் மின்வாரிய அலுவலகம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(34) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து லாரி குழந்தைவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் குழந்தைவேல் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைவேலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்மதி திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதனிடையே குழந்தைவேலுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குழந்தைவேலின் மகன் கவுதம் (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  இந்த நிலையில் கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வளர்மதி சிகிச்சை பலனின்றி வளர்மதி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியும் இறந்த சம்பவம் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
  • ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார்.

  கள்ளக்குறிச்சி:

  சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50) கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜேஷ் (22) பி.ஏ. பட்டதாரியான இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த ஜெய வர்ஷினி (20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பின்னர் கணவன் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த மனைவி ஜெயவர்ஷினி வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

  இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார். எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து சின்னசேலம் போலீசார் காணாமல் போன ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமலை:

  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  இந்நிலையில் அவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களது தகராறு நீடித்து வந்தது. இவர்களது சண்டை கிராமத்திலும் பிரபலமாக இருந்தது.

  வழக்கம்போல் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனியாக அமைதியாக இருந்தனர்.

  சிறிது நேரம் கழித்து தாராசந்த் நாயக் அவரது மனைவியை சமாதானம் செய்ய முடிவு செய்தார்.

  குடும்பத் தகராறு குறித்து மனைவியிடம் அமைதியாக பேசினார். அப்போது மவுனமாக இருந்த மனைவி புஷ்பாவதி அருகில் சென்று உதட்டோடு முத்தம் கொடுக்க முயன்றார்.

  இதனை அவர் தடுத்தார். ஆனாலும் தாராசந்த் நாயக் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதால், தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்தார்.

  இதில் வலி தாங்காமல் தாராசந்த் நாயக் அலறினார். ஆனாலும் புஷ்பாவதி விடாமல் நாக்கை கடித்தார். இதில் நாக்கு துண்டாகி தொங்கியது.

  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்றனர். பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக், வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கதறியபடி இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதற்கிடையில் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.

  மேலும் தாராசந்த் நாயக்கும் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார். அதில் தனது நாக்கை வேண்டு என்றே மனைவி கடித்தார்.

  என் மனைவி கொன்று விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
  • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

  நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

  எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

  அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

  இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

  எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

  ×