search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "neyveli"

    • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.

    தற்போது 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதில் உற்பத்தியாகிற மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 70 சதவிகிதம் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. அரசின் லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தனது 7 சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 2,000 கோடி முதல் ரூபாய் 2200 கோடி வரை மார்ச் 7-ல் இருந்து 11-ந்தேதிக்குள் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

    குறைந்தபட்ச பங்குகளின் விலையாக ரூபாய் 212 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விற்பனைக்கு வழங்கவுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 6 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரத்து 830. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 93.5 சதவிகித பங்குகள் இருந்தன. அது தற்போது 79.2 சதவிகித பங்குகளாக குறைந்து வருகின்றன.


    கடந்த டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூபாய் 250 கோடி பெற்றுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூபாய் 30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

    என்.எல்.சி நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை பொருட்படுத்தாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.

    இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இக்கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நெய்வேலியில் ரூ.4,400 கோடி மதிப்பில் பழுப்பு நிலக்கரியில் மெத்தனால் உற்பத்தி ஆலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
    • அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது.

    கடலூர்:

    பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திரவத்தை பழுப்பு நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதற்கான ஆய்வுப் பணிகளை, எள்எல்சி இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கானஆய்வு அறிக்கைக்கு அந்நிறு–வனத்தின் இயக்குனர் குழுவால் ஒப்புதல் வழங்கப்ப–ட்டுள்ளது.

    அதன் அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது. நாட்டில் முதல் முறை சுரங்கம் மற்றும் மின்னுற்பத்தி பணிகள் மட்டுமின்றி. பல்வேறு துறைகளில் தனது வர்த்த–கத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற நோக்க–த்தில், என்.எல்.சி. இந்தியா அமைக்கப்படவிருக்கும் புதிய முயற்சியாகும். வரும் 2027-ம் ஆண்டில் இந்த புதிய ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.

    மேலாளண்மைப் பணிகள்இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்று வதற்கான மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள, ETCHETEUA இந்தியா நிறுவனத்திற்கு ஆலோச னைகள் வழங்கும் பொருட்டு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமை–ச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தை. என்எல்சி. இந்தியா நிறுவனம் பணி யமர்த்தியுள்ளது.

    நிதிஆயோக்பரிந்துரை மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிதி ஆயோக் அமைப்பு. இத்திட்டத்தினை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து திருப்தியடைந்து, மிக விரைவாக இதனை நிறைவேற்றப் பரிந்துரைத்து–ள்ளது குறிப்பிடத்தக்கது. ஊக்கத்தொகைஇத் திட்டத்தினை, உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களுக்கான பட்டியலில் இணைக்குமாறு, என்.எல்.சி. இந்தியா நிறு–வனம் மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    அதன்படி இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் மெத்தனால் திரவத்திற்கு டன்னிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைமத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார். (வயது 55). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் என்.எல்.சி. மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் அசோக்குமாரின் அண்ணன் சப்‌ஷன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது மாயமான அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

    அவர் மாயமான பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்திருப்பது தொடர்பாக அசோக்குமாரின் நண்பர்களான நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் (38), வடலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) ஆகிய 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    அசோக்குமாரை கடத்தி கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார். அசோக்குமாரின் உடலை குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தான்குப்பத்தில் உள்ள இளங்கோ என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மீன்குட்டையில் புதைத்துள்ளதாக கூறினார்.

    மேலும் அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டை எடுத்து அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு அவரது வங்கி கணக்கில் பணம் எடுத்ததையும் ஒப்புக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுரேஷ், ராஜேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.அதன் பின்னர் சுரேசை அழைத்து கொண்டு அசோக்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு இன்று சென்றனர்.

    அங்கு சென்றதும் அசோக்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுரேஷ் அடையாளம் காட்டினார். அதன் பின்னர் வருவாய் அதிகாரிகள் அனுமதியுடன் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அசோக்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    பின்னர் அந்த உடலை புதுவை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

    என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பணிநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சுரங்கம் 1ஏயில் பல ஆண்டு காலமாக பணியாற்றி வந்த சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    மேலும் பணிநாட்கள் 26 நாட்களுக்கு பதிலாக 15 நாட்கள் பணி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று என்.எல்.சி.சுரங்கம் 1ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் போராட்டம் நடத்த வந்தனர். பின்னர் 25 பேர் திடீரென்று வி‌ஷத்தை குடித்து கீழே மயங்கி விழுந்தனர்.

    உடனே அவர்களை மீட்டு என்.எல்.சி.ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்தது. அவர்களை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் 700 பேர் சுரங்கம் 1ஏ பகுதிக்கு வந்தனர். பின்பு அவர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    வேலைநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், பணிமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே இடத்துக்கு பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே இன்று மாலை மாவட்ட கலெக்டர் தண்டபாணி என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். #Tamilnews
    நெய்வேலியில் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
    நெய்வேலி:

    நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களில் சிலரை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்ததை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு அதே இடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று சுரங்கம் 1ஏ முன்பு மறியல் செய்ய வந்தனர். அப்போது சுமார் 25 தொழிலாளர்கள் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொழிலாளர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.


    ஒப்பந்த தொழிலாளர்களை வேறு சுரங்கத்திற்கு பணி மாற்றம் செய்திருப்பது ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஆரம்பம் என்று தொழிலாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒரே இடத்தில் அதிக ஊழியர்கள் பணியில் இருந்ததால் மாற்றப்பட்டதாக நிர்வாகம் கூறியுள்ளது. #NLCProtest #WorkersSuicideAttempt
    காவிரி மேலாண்மை வாரிய செயல் அலுவலகத்தை கர்நாடகத்தில் அமைக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
    நெய்வேலி:

    தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பல்வேறு காரணங்களை காட்டி காலம் தாழ்த்தி வருகிறது.

    இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில் நாளை (17-ந் தேதி) மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அமைப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை வரவேற்கிறோம்.

    தமிழக அரசு தங்களது நியாயமான காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் பெறுவதற்கு அழுத்தம் தர வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் கொண்ட செயல் அலுவலகத்தை கர்நாடகாவில் அமைக்கக்கூடாது.

    இதனால் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். தமிழக அரசு உறுதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இந்த ஆணையம் அரசியலமைப்புக்கு மாறாக அதிகாரம் பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும்.

    தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசுக்கு இணங்கி செயல்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்.எல்.சி. அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 69). ஓய்வு பெற்ற என்.எல்.சி. அதிகாரி.

    நேற்று இரவு 9 மணி அளவில் வேணுகோபால் அருகில் உள்ள கடைக்கு அரிசி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது பண்ருட்டியில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வேணுகோபால் கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் வேணுகோபாலின் மகள் விஜயகுமாரி புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    ×