என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "என்எல்சி"
- எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனித வளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
- அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாட்டாளி மக்கள் வழங்கிய நிலங்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 2023-24-ம் ஆண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,787 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,846 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வருவாய் ரூ.3,376 கோடியாகவும், லாபம் ரூ.559.42 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.
எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனித வளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதிக லாபம் ஈட்டி உள்ள என்.எல்.சி நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. என்.எல்.சி நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு காரணமாகத் திகழும் அதன் தொழிலாளர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்குக் கூட என்.எல்.சி நிறுவனம் மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்யாமல், அவர்களை ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருந்து அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட பாதிக்கும் குறைவான ஊதியத்தை வழங்குவது, ஓய்வுக்குப் பிந்தைய உரிமைகளை வழங்க மறுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது ஆகியவற்றின் மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது. என்.எல்.சி.யின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலும் ஒரு காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், காமராஜரால் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி என தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது.
தற்போது 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகிறார்கள். அதில் உற்பத்தியாகிற மின்சாரத்தில் தமிழ்நாட்டிற்கு 70 சதவிகிதம் வழங்கப்படுகிறது. பா.ஜ.க. அரசின் லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தனது 7 சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 2,000 கோடி முதல் ரூபாய் 2200 கோடி வரை மார்ச் 7-ல் இருந்து 11-ந்தேதிக்குள் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
குறைந்தபட்ச பங்குகளின் விலையாக ரூபாய் 212 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விற்பனைக்கு வழங்கவுள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 6 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரத்து 830. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 79.2 சதவிகித பங்குகள் உள்ளன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 93.5 சதவிகித பங்குகள் இருந்தன. அது தற்போது 79.2 சதவிகித பங்குகளாக குறைந்து வருகின்றன.
கடந்த டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமாக ரூபாய் 250 கோடி பெற்றுள்ளதாக பதிவுகள் கூறுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூபாய் 30,901 கோடியாக உள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்குகளை பா.ஜ.க. அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ.க. அரசு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. அப்படி விற்குமேயானால், அந்த பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.
என்.எல்.சி நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை பொருட்படுத்தாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 7 சதவிகித பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக கடிதம் எழுத வேண்டும்.
இதன்மூலம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்ப்பது தடுத்து நிறுத்த முடியும். இக்கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது.
- நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ்.
ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இன்று பேரணியாக செல்ல முயன்றனர்.
இதைதொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஆனால், என்எல்சி தொழிலாளர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விரைவில் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இருப்பினும், நாளை கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குடியரசு தினத்தன்று கருப்புக்கொடி ஏந்தி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் சேதம்.
- தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் அறிவிப்பு.
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கன்வேயர் பெல்ட் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது.
சுரங்கம் 2ல் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் தீப்பற்றியது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்தால் யாருக்கும் ஆபத்து இல்லை எனவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார்.
- வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், திருவான்மீயூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எனக்கு சொந்த ஊர் நெய்வேலி அருகே உள்ள உய்யகொண்டரவி கிராமம் ஆகும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால், சென்னையில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். என் தாயார், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் அந்த கிராமத்தில்தான் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், என்.எல்.சி., விரிவாக்கத்துக்காக எனக்கு சொந்தமான விவசாய நிலம், வீடு இருந்த நிலம் ஆகியவற்றை 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தை கொடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு, மாற்று வீட்டு மனை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதற்காக சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, எனக்கு மாற்று வீட்டு மனை கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு வழங்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி என் விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி உத்தரவிட்டார். இதன்பின்னர், கடலூர் மாவட்ட கலெக்டராக பதவி ஏற்ற கலெக்டர், நான் உள்ளூரில் வசிக்காததால், மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறி, வீட்டு மனை வழங்க மறுத்து கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, வீட்டு மனை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பெயரில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தேசிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் சட்டத்தின்படி, உள்ளூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே மாற்று வீட்டு மனை வழங்கப்படும், மனுதாரருக்கு உள்ளூரில் நிரந்தர முகவரி இல்லை. வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கே.சக்திவேல், ''மனுதாரர் சொந்த ஊரை விட்டு, வேலைக்காகத்தான் சென்னை வந்துள்ளார். அதற்காக அவருக்கு உரிமை இல்லை என்று கலெக்டர் கூறுவதை ஏற்க முடியாது'' என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.வேல்முருகன், ''சென்னையில் வேலைக்காக வந்து வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு போகக்கூடாதா? சொந்த ஊரில் உள்ள சொந்தங்கள் வீட்டுக்கு போக மாட்டார்களா? தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்று கொண்டாடாமல், கலெக்டர் அலுவலகத்திலா கொண்டாட முடியும்?'' என்று சரமாரியாக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 3 மாதங்களுக்குள் மனுதாரருக்கு மாற்று வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
- நெய்வேலி என்.எல்.சி. 3-ம் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
- நிலம் கையகப்படுத்தப்பட்டதால், மனுதாரருக்கு பாதிப்பு இல்லை.
சென்னை:
நெய்வேலி என்.எல்.சி. 3-ம் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நிலம் கொடுத்த உரிமையாளர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கக்கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதா? இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் மனுவில் இடம் பெறவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்டதால், மனுதாரருக்கு பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஐகோர்ட்டை அணுகினால் சட்டப்படி பரிசீலிக்கப்படும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
- ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.
- தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆணையிடக் கோரி அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 'ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது' என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் என்.எல்.சிக்கும் பொருந்தும். எனவே, இனியும் தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.
- ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.
கடலூர்:
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 20 நாட்களாக நடைபெற்றது.
இப்போராட்டத்தில் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த ஜிவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும்போது, போராட்டத்தை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி தீர்ப்பு வரஉள்ளது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.
பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.
அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.
- தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
விருத்தாசலம்:
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனையும் மீறி இன்று விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார், ஆனந்தகோபால், பிரபா, மாவட்ட இளைஞரணி ஜானகிராமன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வசந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் புருசோத்தமன், நாராயணன், ராசவன்னியன், சிவகுரு, ராமச்சந்திரன், பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
- நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி.2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பூவுலக நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் அதிக அளவு பாதரசம், செலினியம் மற்றும் புளோரைடு இருப்பது தெரியவந்தது. வடக்கு வேலூர் தொல்காப்பியர் நகரில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு நீரில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கபட்ட வரம்பை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் குடிநீரில் அதிகஅளவு கொந்தளிப்பு மற்றும் செலினியம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பொதுமக்களுக்கு சீறுநீரக பிரச்சனைகள், சுவாச மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி தூசி மற்றும் சாம்பலின் மாசுபாடுகள் வீடுகளில் இருப்பதை ஆய்வு கண்டிறியப்பட்டுள்ளது.
கரிக்குப்ப கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மாசுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உள்ளுர் நீர்நிலைகளில் சாம்பலை கொட்டுவதை நிறுத்தவும் சாம்பலை எடுத்து செல்லும் ஓடைகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. பகுதிகளில் குடியிருப்போருக்கு வருடத்திற்கு 2 முறை இலவச சுகாராத முகாம் நடத்த வேண்டும். சுகாதார பிரச்சனைகள் உள்ள கிராமங்களை என்.எல்.சி. பொதுமருத்துவமனை கண்காணிக்க வேண்டும். நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மண் வாழ்வியலாளர் சுல்தான் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
- இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11ம் தேதி தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
- ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு.
சென்னை:
என்.எல்.சி. தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்எல்சி நிர்வாகத்திற்கும் ஒப்பந்த தொழிலாளர்களுககும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியத்தை நியமிக்கலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.
அப்போது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்கனவே இருப்பதாக என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தீர்வை விரும்புகிறீர்களா? பிரச்சனையை விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விஷயத்தில் இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11ம் தேதி தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
அதேசமயம், ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு பிறப்பித்தார். அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தார்.
- உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில், அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது.
- ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும்.
என்.எல்.சி சுரங்க நீரை வெளியேற்ற புதிய பரவனாற்றுக் கால்வாய் அமைப்பதற்காக, ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் ஜூலை 26-ம் தேதி வேலையை தொடங்கியது என்.எல்.சி நிர்வாகம். அதற்காக அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விவசாயப் பயிர்கள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கால்வாய் தோண்டப்பட்டது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் பாதுகாப்புடன் பணியை தொடர்ந்தது என்.எல்.சி நிர்வாகம். அதையடுத்து என்.எல்.சி நிர்வாகத்துக்கு எதிராக பா.ம.க சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் என்.எல்.சிக்கு நிலத்தை வழங்கிய முருகன் என்பவர், "கடந்த 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட என் நிலத்தை இதுவரை என்.எல்.சி சுவாதீனம் எடுக்கவில்லை. அதனால், அதில் நெல் பயிரிட்டிருந்தேன். தற்போது அறுவடைக்கு இரண்டு மாதங்களில் உள்ள நிலையில், பயிர்களை என்.எல்.சி நிர்வாகம் சேதப்படுத்திவிட்டது. புதிய சட்டத்தின்படி கையகப்படுத்திய நிலங்களை ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தவில்லை என்றால், நில உரிமையாளர்களிடமே அதை திருப்பித் தர வேண்டும். அதன்படி 2007-ல் கையக்கப்படுத்திய எங்கள் நிலத்தையும் என்.எல்.சி நிர்வாகம் பயன்படுத்தாததால் அதை திருப்பித் தர வேண்டும். மேலும் நாங்கள் அறுவடை செய்யும் வரை என்.எல்.சி நிர்வாகம் நிலத்தில் குறுக்கிட தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 6-ந்தேதிக்குள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க உத்தரவிட்டது.
இவ்வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது. மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில், அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது.
ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்