என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கி வீரமணி"

    • பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
    • ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு #DravidianModel நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்தவர் தந்தை பெரியார்.
    • தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் "பெரியார் உலக"த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு @AsiriyarKV அவர்களிடம் வழங்கினேன்!

     

    பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘உலகெங்கும் கலைஞர்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
    • நூலை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார்.

    'உலகெங்கும் கலைஞர்' எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. சென்னை வளர்ச்சி கழகம் சார்பில் சட்டக் கதிர் ஆசிரியர் எழுதிய இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    அதனை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிந்த பிறகு, திராவிடர் கழக தலைவர் வீரமணி நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    துணைவேந்தர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது, திட்டமிட்ட ஏற்பாடு.

    முறையற்ற அரசியல் எனவும் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் விரோதமாக 2 பேர் திட்டமிட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தைவிட உயர்நீதிமன்றம் உயர்ந்தது என்ற தவறான சட்ட விரோதமான ஒரு தடை யானை கொடுக்கப்பட்டு உள்ளது. அவசரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல.

    அந்த வழக்கை குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரித்து கடைசி நாளில் தடை வழங்க வேண்டும் என ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    மாலை 6 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டு நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்வோம் என்று சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

    முற்றிலுமாக நீதிபதிகளின் போக்கு கெட்ட எண்ணத்தில் ஆனது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தமிழகத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது.

    ஒரு அரசாங்கத்தை ஒரு வாரத்திற்குள் பதில் சொல்ல வேண்டும் என சொல்லுவது, நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செயல்படுவோம் என்பது போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கி.வீரமணியின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
    • திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்குகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் பாராட்டுரை வழங்குகின்றனர். நிறைவாக கி.வீரமணி ஏற்புரையாற்றுகிறார்.

    முன்னதாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்ற, துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி நன்றி கூறுகிறார்.

    • பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு வயது 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன்.
    • சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் - வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் கி.வீரமணி நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    'திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர்' என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் லட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளையோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு வயது 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன்.

    திராவிட மாடல் அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் - வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் கி.வீரமணி நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

    இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

    வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.

    தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும்.
    • இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது.

    திருச்சி:

    தந்தை பெரியாரின் 49-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க.வின் சார்பாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை காட்டூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தி.க.தலைவர் வீரமணி, தி.மு.க. முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீரமணி கூறியதாவது:- தற்போதைய தி.மு.க. அரசு பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக உள்ளது. குறிப்பாக பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தை நிறைவேற்றி பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியது இந்த அரசு. அவருடைய ஒவ்வொரு கொள்கையையும் நிறைவேற்றி வருகிறது. சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முயற்சி செய்தார். அதற்கு அனுமதியும் பெற்று பணிகள் தொடங்கின.

    அப்பொழுது சுப்ரமணிய சாமி, ஜெயலலிதா போன்றோர் அந்த இடத்தில் ராமர் கட்டிய பாலம் உள்ளது எனக்கூறி அந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். அதனால் அது முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சேது சமுத்திர திட்டப் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்.

     இந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கும். இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது. 

    எனவே தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திராவிடர் கழகம் சார்பில் வைக்கிறோம்.

    சேது சமுத்திர திட்டத்திற்காக யார் யாரெல்லாம் அப்பொழுது குரல் கொடுத்தார்களோ அவர்கள் மீண்டும் குரல் கொடுத்து அதற்காக போராட வேண்டும். இனி யாரும் ராமர் பாலம் இருந்தது என்கிற கதையை கூற முடியாது அதற்கு ஆதாரமாக பா.ஜ.க. அமைச்சரின் கருத்தே உள்ளது. பெரியாரின் நினைவு நாளில் சேது சமுத்திர திட்டத்தை தொடங்க வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்கு கட்சிகள் அனைத்தும் வற்புறுத்தி வந்த திட்டமாகும்.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர நமது முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும். இத்திட்டம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்கு கட்சிகள் அனைத்தும் வற்புறுத்தி வந்த திட்டமாகும்.

    மீண்டும் அந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர நமது முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தோம். சட்டமன்றத்தில் முதல்-அமைச்சரால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி கொடுத்ததற்கு முதல்-அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
    • மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மதச்சார்பற்ற ஜனநாயகத்தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரது கட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணம் ஈரோட்டில் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.
    • அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பயணம் ஈரோட்டில் நாளை (3-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.

    இந்த பரப்புரை பயணத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    குமாரபாளையத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கப்படுகின்ற பரப்புரை பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஈரோட்டில் மாலை 7 மணிக்கு நடக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாலை 5 மணி மற்றும் 7 மணிக்கு கூட்டங்கள் நடக்கின்றன. குன்னூரில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு பரப்புரை கூட்டம் நடக்கிறது.

    கட்சி, ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நடைபெறும் இந்த பரப்புரை பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
    • ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறி இருப்பதாவது:

    தமிழக கவர்னர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் .

    என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது.
    • முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று தி.க. தலைவர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சட்ட மாமேதை அம்பேத்கரும், பெரியாரும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு குறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    பட்டுக்கோட்டை தாலுகா ஆழம்பள்ளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் மூலம் தீண்டாமை ஒழிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது. முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.

    சில இடங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சுடுகாட்டுக்கு கூட பாதை கிடையாது. தற்போது தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி மூலம் தீண்டாமை கொடுமை படிப்படியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அம்பேத்கர் வகுத்த கொள்கை மற்றும் அவரை நாம் புரட்சியாளராக தான் பார்க்கிறோம். ஆனால் பா.ஜ.க.வோ அம்பேத்கர் பெயரை அரசியல் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×