என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "husband wife"
- முத்துகிருஷ்ணன், சீதா லெட்சுமியிடம் மாடு வாங்க தங்க செயினை தருமாறு கேட்டுள்ளார்.
- காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
திருக்குறுங்குடி அடுத்துள்ள தளவாய்புரம், யாதவர் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 30). இவரது மனைவி சீதாலெட்சுமி (26). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகிருஷ்ணன், சீதா லெட்சுமியிடம் மாடு வாங்க தங்க செயினை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து முத்துகிருஷ்ணனின் தாயார் லெட்சுமி, சகோதரர் செல்வம், செல்வத்தின் மனைவி உமா ஆகியோரது தூண்டுதலின் பேரில் முத்துகிருஷ்ணன், சீதாலெட்சுமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சீதாலெட்சுமி சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் இது தொடர்பாக சீதா லெட்சுமியின் கணவர் முத்து கிருஷ்ணன், மாமியார் லெட்சுமி, செல்வம், உமா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் சரவெடி பட்டாசுகள் தள்ளுபடி விலையி்ல் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சரவெடி பட்டாசுகள் வேண்டும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பர செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களும் சிவகாசி அருகே மீனம்பட்டிக்கு வரும்படி கூறியுள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், அனுமதி பெறாத குடோனில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
சரவெடி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது40). அவரது மனைவி அழகு லட்சுமி (32) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராசாத்தி தனது குடும்பத்தினர்களுடன் மதுரை, பகலவன்நகரில் வசித்து வருகிறார்.
- வீடு விற்பனை செய்வது தொடர்பாக ராசாத்திக்கும் அவரது சகோதரரான பரோபகர் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள வடக்கு காடன்குளத்தை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 42). இவர் தனது கணவர் அருள்ஜோதி மற்றும் குடும்பத்தினர்களுடன் மதுரை, பகல வன்நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு காடன்குளத்தில் உள்ளது. இதனை விற்பனை செய்ய ராசாத்தி ஏற்பாடு செய்து வந்தார். இதுதொடர்பாக அவருக்கும், அவரது சகோதரரான வடக்கு காடன்குளத்தை சேர்ந்த பரோபகர் (49) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தியின் கணவர் அருள்ஜோதி வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த பரோபகர், அவரது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோர் அருள்ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த பரோபகர், அவரது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோர் சேர்ந்து அருள்ஜோதியை கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த ராசாத்தியும் தாக்கப்பட்டார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி மூலைக்கரை ப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரோபகர் அவரது மனைவி மற்றும் மகன் சுபாஷ் கோபி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
- ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும்.
கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.
ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும்.
மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம். மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.
தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும். பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும்.
அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.
சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.
அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
- செல்வகுமாருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது.
- விஷம் குடித்த செல்வகுமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது53). விவசாயி. இவருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது. இதனை அவர் விற்பனை செய்தார்.
இதுசம்பந்தமாக அவருக்கும், அவரது மனைவி மாரியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த செல்வகுமார் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்தார். இதனால் மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று ஐகோர்ட்ராஜா தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
நாங்குநேரி ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கந்தையா மகன் ஐகோர்ட்ராஜா (வயது38). கார் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மஞ்சம்மா தேவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி-நாகர்கோவில் நான்குவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, எதிரே தேனி மாவட்டம், வடுகப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஐகோர்ட் ராஜா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஐகோர்ட் ராஜாவும், அவரது மனைவி மஞ்சம்மா தேவியும் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
- உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும்.
பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.
எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் – மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் – மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.
கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.
கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.
பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.
- கணவன் இறந்து 4 மணி நேரத்தில் மனைவி திடீரென்று இறந்தார்.
- கணவன் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவனுக்கும் தெரியவில்லை.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலீம்(வயது 60).
இவரது மனைவி மும்தாஜ்(59).
இருவரும் எல்லாவற்றையிலும் விட்டுக்கொடுக்காத தம்பதியாக ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் மும்தாஜ் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மும்தாஜ்க்கு மருந்து வாங்க அப்துல் சலீம் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றார்.
போகும் வழியில் அப்துல் சலீம் மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை மீட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்துல் சலீமின் உடலை முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்திருந்தனர்.
நோய்வாய்ப்பட்ட மனைவி மும்தாஜ் அருகில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்தார்.
இவருக்கு அதர்ச்சி கொடுக்க கூடாது என்பதற்காக இவரிடம் குடும்பத்தினர் கணவர் இறந்த செய்தியை கூறாமல் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4மணிநேரம் கழித்து நேற்றிரவு மனைவி மும்தாஜும் திடீரென்று இறந்தார்.
ஏற்கனவே கணவர் இறந்த அதர்ச்சியில் இறந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் மனைவியும் திடீரென்று இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் கணவர் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவருக்கும் தெரியாமல் போன நிலையில், தம்பதி சாவிலும் இணைபி ரியாத இச்சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.
- தங்களின் பெண் துணையிடம் தேடும் அந்த குணங்கள் குறித்து இங்கு காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் தற்போது ரிலேஷன்ஷிப்பில் இருப்பது பெரிய விஷயமல்ல. பெண்கள் தங்கள் துணை தங்கள் மீது அக்கறை உள்ளவராகவும், புத்திசாலித்தனமிக்க ஆளுமையுடையவராகவும் நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் துணையிடம் என்ன குணங்களைத் தேடுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதுகுறித்து இங்கு காணலாம். அதாவது, பெண்களிடம் உள்ள இந்த 5 குணங்களை தான் ஆண்கள் விரும்புகின்றனர். மேலும். திருமணத்திற்கு முன் காதலிக்கும்போது இதனை ஆண்கள் தேடுகின்றனர். இதுகுறித்து இங்கு முழுமையாகதெரிந்துகொள்ளலாம்.
பெண்கள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்பவராக இருந்தால், அவர்கள் மிகவும் தைரியமாக வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தனது கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் தாங்களாகவே பெரிய முடிவுகளை எடுக்க வல்லவர்கள். அத்தகைய பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள், அவர்களுடன் நட்புக்கொள்ளவும், காதலிக்கவும் கொள்ள விரும்புகிறார்கள்.
ஆண்களைப் போல சத்தமாக சிரித்து, ஃபன் செய்ய விரும்பும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால், சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி போன்று இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய பெண்களிடம் ஆண்கள் மிக விரைவாக ஈர்க்கப்படுகிறார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் கலகலப்பான பெண்களுடன் நட்பு கொள்ள விரும்புகிறார்.
ஒரு சிலரை பார்த்தவுடன் ஈர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், அவர்கள் உடற்தகுதியை பராமரிக்கும் பெண்களாக இருந்தால் ஆண்கள் அவர்களை விரும்புகின்றனர். உண்மையில், ஆண்களின் முதல் கவனம் பெண்களின் உடல் தோற்றத்தில் மட்டுமே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தங்கள் உடலைப் பராமரிக்கும் பெண்கள் ஆண்களின் இதய ராணியாக மாறுகிறார்கள்.
நம்பிக்கையுள்ள பெண்கள் ஆண்களை அதிகம் ஈர்க்கிறார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் சீக்கிரம் பதறாத பெண்ணை ஆண்கள் விரும்புகிறார்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரம் செலவழிக்கும் பெண்கள் குறித்து ஆண்கள் பெருமைப்படுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் திறமையால் விரைவில் அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவார்கள்.
சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். அத்தகைய பெண்களுடன் நட்பு கொள்ள ஆண்கள் தயங்குவதில்லை. அத்தகைய பெண்கள் தானாகவே ஆண்களின் கவர்ச்சிகரமான பட்டியலில் சேர்ந்துவிடுவர்கள். பெண்மை என்பதை விட விரைவான புத்திசாலித்தனமான பெண்களையும் ஆண்கள் விரும்புகிறார்கள்.
- பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.
- சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும்.
தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து, வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம். இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.
இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று வள்ளலார் சொல்லியுள்ளார். ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும்.
960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 60 நாழிகை என்பது ஒரு நாள். 960 நாழிகை என்பது 16 நாளாகும். இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.
சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இரத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது.
ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம் தளர்ந்து, முகம் வெளுத்து, கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து, மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடை தளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான். எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.
-சிவசங்கர்