மூலைக்கரைப்பட்டி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல்

ராசாத்தி தனது குடும்பத்தினர்களுடன் மதுரை, பகலவன்நகரில் வசித்து வருகிறார்.வீடு விற்பனை செய்வது தொடர்பாக ராசாத்திக்கும் அவரது சகோதரரான பரோபகர் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.
மூலைக்கரைப்பட்டி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல்
Published on

களக்காடு:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள வடக்கு காடன்குளத்தை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 42). இவர் தனது கணவர் அருள்ஜோதி மற்றும் குடும்பத்தினர்களுடன் மதுரை, பகல வன்நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு காடன்குளத்தில் உள்ளது. இதனை விற்பனை செய்ய ராசாத்தி ஏற்பாடு செய்து வந்தார். இதுதொடர்பாக அவருக்கும், அவரது சகோதரரான வடக்கு காடன்குளத்தை சேர்ந்த பரோபகர் (49) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ராசாத்தியின் கணவர் அருள்ஜோதி வீட்டில் இருக்கும் போது, அங்கு வந்த பரோபகர், அவரது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோர் அருள்ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பரோபகர், அவரது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோர் சேர்ந்து அருள்ஜோதியை கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த ராசாத்தியும் தாக்கப்பட்டார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி மூலைக்கரை ப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரோபகர் அவரது மனைவி மற்றும் மகன் சுபாஷ் கோபி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com