என் மலர்
நீங்கள் தேடியது "Meghalaya"
- நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்தவர் 44 வயது ஷியாம் பாபு சின்ஹா.
மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி டைனமைட் வெடிபொருள் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44 வயது ஷியாம் பாபு சின்ஹா உயிரிழந்ததாக கருதப்பட்டது.
அவரது குடும்பத்தினரும் விபத்தில் சிதைந்திருந்த ஒரு சடலத்தை அடையாளம் கண்டு, அதைத் ஷியாம் பாபு சின்ஹா என்று கருதி சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.
குடும்பத்தினரும் உறவினர்களும் துக்கத்தில் இருந்த நிலையில் ஷியாம் பாபு சின்ஹா திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரை பார்த்து அனைவரும் முதலில் அச்சமடைந்தாலும், பின்னர் அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்தக் குழப்பத்திற்கு சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
ஷியாம் பாபுவின் பெயரில் யாருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
- இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஷில்லாங்:
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்தது.
இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தார்.
மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேகாலயா முதல் மந்திரி கான்ராட் சங்மா இரங்கலை தெரிவித்ததுடன், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டது.
- உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்
- சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் பயன்படுத்தி வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆங்கில ஊடகங்கள் 16 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடுகின்றன.
மேகாலயாவின் கிழக்கு ஜெய்ந்தியா மலை மாவட்டத்திலுள்ள தஷ்காய் பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் படுகாயமடைந்து ஷில்லாங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாம் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. சுரங்கத்தில் சட்டவிரோதமாக டைனமைட் (Dynamite) பயன்படுத்தி வெடி வைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிப்பு மிகவும் பெரிதாக இருந்ததால் அருகிலுள்ள மலைகளும் அதிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மீட்பு பணி கடினமாக இருப்பதாகவும், மேலும் இந்த இடர்பாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
"மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மீட்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இருப்பினும், தொலைதூர இடம், இடிபாடுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை தங்கள் மீட்பு பணிகளுக்கு தடையாக இருப்பதாக" அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தடை விதித்துள்ள போதிலும், இதுபோன்ற சட்டவிரோத சுரங்கச் செயல்பாடுகள் தொடர்கின்றன.
- குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
- மேகாலயாவின் ஆகாஷ் குமார் அதிவேகமாக அரை சதம் கடந்து சாதனை படைத்தார்.
அகமதாபாத்:
குஜராத்தின் சூரத் நகரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'பிளேட் குரூப்' போட்டி நடந்து வருகிறது. இதில் மேகாலயா, அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 386/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேகாலயா அணிக்கு அர்பித் படேவாரா (207), கேப்டன் கிஷான் லின்தோ (119), ராகுல் தலால் (144) கைகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி முதல் 3 பந்தில் 2 ரன் (0, 1, 1) மட்டுமே எடுத்தார். அதன்பின், அடுத்த 8 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார்.
வரிசையாக 8 சிக்சர்களை விளாசிய இவர் 11 பந்தில் அரைசதம் எட்டினார். முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 8 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 628/6 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆகாஷ் 50 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்நிலையில், முதல்தர போட்டியில் அதிவேகமாக (11 பந்து) அரைசதம் விளாசிய வீரரானார் ஆகாஷ் குமார் சவுத்ரி. முன்னதாக, லீசெஸ்டர்ஷையர் அணியின் வெய்ன் ஒயிட் 12 பந்தில் (2012) இச்சாதனை படைத்திருந்தார்.
முதல் தர போட்டியில் வரிசையாக 6 சிக்சர் பறக்கவிட்ட 3வது வீரரானார் ஆகாஷ் குமார். வெஸ்ட் இண்டீசின் சோபர்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகியோர் இப்படி சாதித்துள்ளனர்.
- கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம்.
- நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்
மேகாலயாவில் சுரங்கங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்பட்ட 4,000 டன் நிலக்கரி மழையால் அடித்துச் செல்லப்பட்டதாக அமைச்சரின் கருத்து இப்போது மேகாலயாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள இரண்டு நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது. அது சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய மாநில உயர் நீதிமன்றம், அரசாங்கத்தை கண்டித்தது. நிலக்கரி காணாமல் போனதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அம்மாநில ஆளும் பாஜக- என்பிபி கூட்டணி அமைச்சர் கீர்மென் ஷில்லா, நாட்டில் அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்யும் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம். கிழக்கு ஜெயின்டியா மலைகளிலிருந்து வெள்ள நீர் வங்கதேசத்திற்குள் பாய்கிறது. இந்தச் செயல்பாட்டில், நிலக்கரி சேமிக்கப்பட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.
நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
- ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி கண்டெடுக்கப்பட்டது .
- மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார்
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது .
இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அசாம் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 32 பேர் உயிருலந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாமின் கவுகாத்தி மேகலயாவின் துரா நகரங்களை இணைக்கும் இந்த முக்கிய சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சாலை துண்டிப்பால் இரு பகுதிகளிலும் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. துண்டிக்கப்பட்ட சாலையை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது
- பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
புதுடெல்லி:
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுயேட்சை எம்எல்ஏ மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியின் பெரிலின் சங்மா, பெனடிக் மரக் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சாமுவேல் சங்மா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எச்.எம்.ஷாங்க்லியாங் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 4 முக்கிய தலைவர்களின் வருகை பாஜகவிற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், "மேகாலயாவில் முக்கியமான நான்கு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பாஜக வலுவடையும் என்றும், மேகாலயா மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.
- கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரஞ்சி டிராபி தொடரில் இன்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மேகாலயா அணிக்கு தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி 2 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பிரிங்சாங் சங்மா- ஆகாஷ் சவுத்ரி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
பிரிங்சாங் 19 ரன்னிலும் ஆகாஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனிஷ் சரக் 17, ஹிமான் புக்கான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் ஷர்துல் தாகூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 5-வது மும்பை வீரராக ஷர்துல் சாதனை படைத்துள்ளார்.
மும்பைக்காக ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த வீரர்கள்:-
ஜஹாங்கீர் கோட் (மும்பை) vs பரோடா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1943-44)
உமேஷ் குல்கர்னி (மும்பை) vs குஜராத் - ஆனந்தில் சாஸ்திரி மைதானம் (1963-64)
ஏ.எம். இஸ்மாயில் (மும்பை) vs சவுராஷ்டிரா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1973-74)
ராய்ஸ்டன் டயஸ் (மும்பை) vs பீகார் - பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் (2023-24)
ஷர்துல் தாக்கூர் (மும்பை) vs மேகாலயா - மும்பையில் பி.கே.சி மைதானம் (2024-25)
- மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது.
- மணிப்பூரில் இன்று மதியம் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. அடுத்ததாக மதியம் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டது.






