என் மலர்
நீங்கள் தேடியது "Girlfriend"
- ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர்
- ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் - ரொனால்டோ ஜோடிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்துகொண்டனர்.
2026 கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் கோப்பையுடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.
- விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
- இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும் அப்பெண்ணை விவாகரத்து செய்யமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது. ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்கவைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழவைத்தனர்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கொண்டுருள்ளார்.
தீயில் கருகிய உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகிறார்.
ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
- இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் பகிர்ந்துள்ளார்.
- இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார்.
இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
- ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன.
- கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் வழக்கில் கூறினார்.
கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.
அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார்.
இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.
ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.
இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் காம்ப்பெல் குற்றம் சாட்டியுள்ளார்.
கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் தெரிவித்தார்.
வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டார்.
- அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் மௌ மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவரை காதலித்த ராம் ஜனம் சிங் படேல், வேறொரு ஆணுடன் அவரது திருமணம் உறுதி செய்யப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வியாழக்கிழமை, பெண் வங்கியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது நண்பனுடன் பைக்கில் வந்த ராம் பெண் மீது ஆசிட் ஊற்றினான். "நீ எனக்கு கிடைக்காவில்லை என்றால் யாருக்கும் கிடைக்க கூடாது" என்று கூறிக்கொண்டே ராம் அந்த பெண் மீது ஆசிட் வீசினான்.
இதில் பெண்ணின் முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் 60 சதவீத தீக்காயங்களுடன் அசாம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணுக்கு மே 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
பெண்ணின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் இருவரை கைது செய்தனர்.
- சூரியதேவ் என்ற இளைஞர் 2 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.
- இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சூரியதேவ், ராஜ் கோண்ட் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி என்ற 2 பெண்களை ஒரே நேரத்தில் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது 2 காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து சூரியதேவ் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சூரியதேவின் திருமண வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- மதுரையில் மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார்.
- அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை கீழமுத்துபட்டடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சதீஷ்குமார், வீட்டுக்கு தெரியாமல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார் காதலியுடன் பிடிபட்டார். அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
- எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,
மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
- இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் செய்து வந்தனர்.
- பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடலை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது23). இவர் சென்னையில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் வசித்து வரும் சரவணன் மகன் வினோத் குமார்(27). இவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இருவரும் கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காதல் செய்து வந்த நிலையில் வினோத்குமார், பாக்கிய லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாக்கியலட்சுமி கர்ப்பிணியானார். தற்போது 5மாத கர்ப்பிணியான பாக்கியலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி வினோத்குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். திரு மணம் செய்து கொள்வதை மறுத்த வினோத்குமார் கருவை கலைத்து விடு மாறு கூறியுள்ளார். பாக்கிய லட்சுமி அதனை மறுக்கவே தனது பெற்றோரிடம் தான் 5 மாத கர்ப்பமாக இருப்ப தாக கூறியுள்ளார். மேலும் காதலன் வினோத் குமார்தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோத்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் வினோத்குமார், பாக்கியலட்சுமியை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வினோத்குமாரிடம் பாக்கியலட்சுமியை திரு மணம் செய்து கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்ற வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் உள்பட இருவீட்டார் சம்ம தத்துடன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவீட்டார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.






