என் மலர்
நீங்கள் தேடியது "scam"
- கோமதி நாயகம் என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா, கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.
நெல்லை:
பாளை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது42), வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான 246 பவுன் தங்க நகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து கே.டி.சி. நகரை சேர்ந்த கோமதி நாயகம் (41) என்பவரிடம் நகைகளை மீட்க பண உதவி செய்யுமாறு ரமேஷ்குமார் கேட்டார். இதனால் கோமதி நாயகம் நகைகளை மீட்டு ரமேஷ்குமாரிடம் கொடுக் காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
பலமுறை ரமேஷ்குமார் தன்னிடம் நகைகளை தருமாறும், அதற்குரிய பணத்தை தருவதாக கூறியும் அவர் கொடுக்கவில்லை. மேலும் நகைகளை கொடுக்க மறுத்த கோமதி நாயகம் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையாவிடம் விவரம் கூறினார்.
பின்னர் சகோதரர்கள் சேர்ந்து ரமேஷ்குமாரை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தர வின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் அவரது சகோதரர் கோமதி நாயகம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணை யாவை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
- ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லாலு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ் மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தபோது வேலைக்கு நிலம் என்ற மோசடியில் ஈடுபட்டு இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி தகவல்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 4 ஆயிரம் பேரிடம் நிலம் பெற்றுக் கொண்டு ரெயில்வேயில் வேலை வழங்கியதாக லல்லு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவான விசாரணைக்கு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து வருகிறது.
- பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார்.
- கணவன்-மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு
கோவை, பிப்.28-
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் அழகர் ராஜா(வயது30). இவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அழகர் ராஜாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார். அவர் உள்பட 5 பேர் தங்களுக்கு அரசு துறையில் அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அவர்களிடம் பேசி உங்களுக்கு ராணுவத்தில் உயர் பதவி வாங்கி தர முடியும். அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய அழகர் ராஜா அவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்தார். மேலும் தனது பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களுக்கும் வேலை பெற்று தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதல் தவணையாக 4 பேரிடமும் கடந்த ஆண்டு ரூ. 19.50 லட்சத்தை மனோஜ் குமார் உட்பட 5 பேர் வாங்கியதாக தெரிகிறது. மேலும் பல கட்டங்களாக ரூ.30.85 லட்சம் பெற்றுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் ராணுவத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 30.85 லட்சம் மோசடி செய்ததாக கோவையை சேர்ந்த மது மோகன், அவரது மனைவி சுஜாதா, மனோஜ் பிரபாகர், ரவி, மற்றும் ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை வெள்ளலூர் திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது54). இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையை சேர்ந்த இளங்குமரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் தான் கனடா உட்பட பல நாடுகளில் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுத்துள்ளதாகவும், உங்களது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் பெற்று தருவதாக கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நாகராஜ் தனது மகனுக்கு கனடாவில் படிக்க சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ரூ. 16 லட்சத்து 43 ஆயிரத்து 933 பணத்தை இளங்குமரனின் வங்கி கணக்கில் செலுத்தினார்.
ஆனால் அவர் சொன்னபடி சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நாகராஜ் இது குறித்து நாகராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் இளங்குமரன் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்.
- ரூ. 6 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன்.
கோவை,
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரசிம். இவரது மனைவி மும்தாஜ் (வயது 30).
இவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் ஒரு நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். எனக்கு கோவை செட்டி வீதியை சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அவர் என்னிடம் ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் வரும் என்றார்.
அதனை நான் உண்மை என நினைத்து என்னிடம் இருந்த ரூ. 6 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர் எனக்கு எந்த பணமும் தறவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஆன்லைனில் இருந்து இன்னும் பணம் வரவில்லை வந்தவுடன் தருவதாக கூறினார்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் கேட்டபோது பணம் தராமல் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார். அப்போது தான் அவர் என்னை ஏமாற்றி வருவது தெரியவந்தது. உடனே நான் எனது பணத்தையும், நகையையும் திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அதையும் அவர் தராமல் ஏமாற்றி வந்தார்.
எனவே ஆனந்த் பாபு மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும், நகையையும் அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிதி நிறுவன காசாளர் கைது செய்யப்பட்டார்.
- 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார்.
கோவை,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). என்ஜினீயர். இவருக்கு பணத்தேவை ஏற்பட்டது. அதனால் தங்க நகையை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார். அதன் பின்னர் மாதாமாதம் பணத்திற்கு வட்டியை செலுத்தினார். இந்தநிலையில் நேற்று பணத்தை திருப்பி செலுத்தி நகையை மீட்க அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.அப்போது அந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் நிதி நிறுவன காசாளருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பல முறை அைழத்தும் அவர் போனை எடுக்காததால் பிரான்சிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் அந்த நிதி நிறுவனத்தை குறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் விசாரித்தார். அப்போது அவர்கள் அந்த நிதி நிறுவனத்தினர் மோசடியில் ஈடுப்படுவதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நிதி நிறுவன காசாளர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
- இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிச்சிப்பாளையம் பகுதியை சேர்த்த 2 பேர் கடந்த 10 ஆண்டுகளாக நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனர். இவரிடத்தில், கிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் சீட்டு என சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் கட்டியுள்ளோம்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சீட்டு பணம் தருவதாக கூறியதால், அவர்களை சந்திக்க சென்றபோது, அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், இதுகுறித்து கிச்சிபாளையம் மற்றும் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கூலி வேலை செய்து நாங்கள் சிறுக சிறுக சேமித்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வாலிபர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
- தனியார் டிரேடிங் நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி அறிவிப்பு வெளியிட்டனர்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மசூதி வீதியை சேர்ந்தவர் சல்மான் கான்(வயது 23). இவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி அறிவிப்பு வெளியிட்டனர். இதனை பார்த்து நான், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தோம்.
ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் குறைந்த விலைக்கு நகைகள் தரவில்லை. முதலீட்டு தொகையையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர்.
பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் அளிக்கவில்லை. நிறுவனத்தினர் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டனர். தற்போது சில தினங்களுக்கு முன்பு செல்போனில் அழைத்து பேசிய போது அந்த மோசடி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நான் தற்போது என்.ஐ.ஏ விசாரணையில் உள்ளேன்.
நீங்கள் அடிக்கடி எனக்கு போன் செய்தால் உங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என மிரட்டல் விடுக்கிறார். எனவே எங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
- பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.
- மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் பல்வேறு வகையான மோசடிகளில் இழந்த பணம் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டது.அவ்வகையில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஜன்னத் என்பவர் 32 லட்சம் ரூபாய், ஊத்துக்குளியை சேர்ந்த பாலாஜி என்பவர் டிரேடிங்கில் 36 ஆயிரத்து 500 ரூபாய், பல்லடத்தை சேர்ந்த மோகன் என்பவர் விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்தி 7 ஆயிரத்து 999 ரூபாய் மற்றும் இணையவழி வேலைவாய்ப்பில் உடுமலையை சேர்ந்த விசாலி என்பவர் 5 ஆயிரத்து 100 ரூபாய் இழந்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி 4 வழக்குகளில் மொபைல் போன் எண்களை கண்டறிந்து, மோசடி நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிட்காயின் திட்டத்தில் ரூ. 3 கோடி மோசடி செய்ததாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
- வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.3 லட்சம் முதலீடு செய்ததுடன் எனக்கு தெரிந்த நபர்களையும் முதலீடு செய்ய வைத்தேன்.
விழுப்புரம்:
விழுப்புரம், திருமலை நகரைச் சேர்ந்த முகமது அக்பர்(52) என்பவர் தலைமையில்ஸ்டாலின் நகரைச் சேர்ந்த கங்காதரன் மற்றும் சந்தோஷ்குமார் உள்ளிட்ட திரளானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது:- நான் டெய்லர் தொழில் செய்து வந்தேன். கடந்த 2018 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த மகன் வேணுகோபால் என்பவர் அறிமுகமானார். அவர் தான் 'கிரிப்டோகரண்சி பிட் காயின்' போன்று 'ரேடான்' என்னும் திட்டத்தில் முதலீடு செய்து பல லட்சங்கள் சம்பாதித்ததாகவும், இதில் முதலீடு செய்தால் மிக விரைவில் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறினார். இதனை நம்பி வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.3 லட்சம் முதலீடு செய்ததுடன் எனக்கு தெரிந்த நபர்களையும் முதலீடு செய்ய வைத்தேன். விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் மட்டும் ரூ.80 லட்சம் வரை கட்டியுள்ளனர். ஆனால் கட்டிய பணம் திரும்பவும் வரவில்லை. அவரிடம் கேட்டபோது விரைவில் பணத்தை தருவதாக கூறிவந்தார். ஆனால் தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதேபோன்று திருக்கோவிலூர், செஞ்சி, புதுவை உள்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த வேணுகோபால் ரேடான் திட்டத்தில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வேணுகோபாலை கைது செய்து பணத்தை மீட்டு தர மாவட்ட எஸ்பி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பலருக்கு பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார்.
- சம்பந்தப்பட்ட மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பலருக்கு பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார்.
மேலும் கலெக்டர் செந்தில்ராஜ் அனுப்பியது போன்று போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தகவல் அனுப்பினார்.
இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் யார்? எத்தனை பேருக்கு இது போன்ற தகவல் அனுப்பி உள்ளார் ? யாரிடமாவது மோசடியாக பணம் பெற்றுள்ளாரா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தனது புகைப்படத்தை மர்மநபர் ஒருவர் மோசடியாக வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பணம் கேட்டு பலருக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக தெரிகிறது.
இதனால் யாரும் ஏமாற வேண்டாம். அது போன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யுங்கள் என கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.