என் மலர்
நீங்கள் தேடியது "official arrested"
- கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
- நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் விற்பனையில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, நெய் விற்பனையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 100 கிராம் அளவுள்ள 13 ஆயிரத்து 679 பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்டு திருவிதாங்கூர் தேவஸ்தான கருவூலத்திற்கு வர வேண்டிய ரூ.13 லட்சத்து 67 ஆயிரத்து 900 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. நெய் விற்பனை மோசடி தொடர்பாக உதவி அர்ச்சகர்கள் உள்பட 33 பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக நெய் விற்பனை பொறுப்பில் இருந்த அதிகாரி சுனில்குமார் போற்றியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்திருந்தது.
இந்த நிலையில் கேரள ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுனில்குமார் போற்றியை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
வேளச்சேரியை அடுத்த கீழ்கட்டளை எஸ்.ஆர். வி.எஸ். காலனியை சேர்ந்தவர் சுனில்குமார். தொழில் அதிபர்.
இவர், மரம் அறுக்கும் தொழிற்சாலைக்காக ரூ.20 லட்சம் மதிப்புள்ள நவீன எநதிரம் வாங்க ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட தொழில் மையம் மூலம் இந்த எந்திரத்தை வாங்கினால் ரூ.2 லட்சம் மானியம் கிடைக்கும்.
எனவே மானியம் பெறுவதற்காக சுனில்குமார், காஞ்சீபுரம் மாவட்ட தொழில் மையத்தில் மனுதாக்கல் செய்தார். தொழில் மைய உதவி இயக்குனர் அருள் இதுகுறித்து விசாரணை செய்தார்.
அப்போது, தனக்கு ரூ.33 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் மானியம் பெறுவதற்கான உத்தரவை வழங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுனில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்களுடைய ஆலோசனைப்படி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அருள் குடியிருக்கும் அம்பத்தூர் வெங்கடாபுரத்திற்கு சுனில்குமார் சென்றார். பணம் தருவதாக கூறி அவரை அழைத்தார்.
அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அருள் வந்தார். அவரிடம் சுனில் குமார் ரசாயனம் தடவிய 33 ஆயிரம் ரூபாயை கொடுத்தார்.
அப்போது அங்கு ஆட்டோவில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து லஞ்ச பணத்துடன் தொழில் மைய உதவி இயக்குனர் அருள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.






