என் மலர்
நீங்கள் தேடியது "Ronaldo"
- நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
- தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காக BICYCLE கிக்கில் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
- அர்மேனியா வுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை
2026 கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அர்மேனியா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் போர்ச்சுகல் அணியில் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகல் அணி அர்மேனியாவை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது இதன் மூலம் 6வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.
- கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன்.
- அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்.
2026 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வுபெறுவேன் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியோனோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'வரும் 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்கும்போது எனக்கு 41 வயதாகி இருக்கும். அதுதான் எனது கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். அதற்கு பின், அடுத்த உலகக் கோப்பை போட்டியில் கண்டிப்பாக ஆட மாட்டேன். கடந்த 25 வருடங்களாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக, பல்லாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை ரொனால்டோவின் ஆறாவது உலகக் கோப்பை போட்டியாகும்.
ரொனால்டோ இதுவரை நாட்டுக்காகவும், கிளப் அணியாகவும் 950-க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.
- ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
- அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், சவுதி கால்பந்து லீக்கில் அல் நசார் க்ளப்காக 100 கோல்கள் பங்களிப்பு (83 கோல்கள் + 17 Assists) செய்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.
இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
- விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.
மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார்.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் - ரொனால்டோ ஜோடிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்துகொண்டனர்.
2026 கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் கோப்பையுடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.
- 40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார்.
- மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.
புடாபெஸ்ட்:
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். இதுவரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கண்டத்துக்கான எப் பிரிவு தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல்-அங்கேரி அணிகள் மோதின. இதில் போர்ச்சுக்கல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 58-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார்.
இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ சமன் செய்தார். அவரும், கவுத மாலா நாட்டை சேர்ந்த கார்லோஸ் ரூயிசும் தலா 39 கோல்கள் அடித்துள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 36 கோல்கள் அடித்துள்ளார்.
40 வயதான ரொனால்டோ ஒட்டு மொத்தமாக 943 கோல்கள் அடித்துள்ளார். அவர் ஆயிரம் கோல்களை அடிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.
போர்ச்சுக்கல் நாட்டுக்காக 223 போட்டியில் 141 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் ரொனால்டோ தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். மெஸ்சி 114 கோல்களுடன் (194 ஆட்டம்) 2-வது இடத்தில் இருக்கிறார்.
- போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
- கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.
கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்ச்சுகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜோட்டாவின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். .
- அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை தோற்கடித்து அல் நசார் க்ளப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .
- அரையிறுதி போட்டியில் ரொனால்டோ ஜாவோ ஃபெலிக்ஸ்க்கு கொடுத்த Assist-ஆல் வெற்றி கிடைத்தது.
சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் அல் நசார் க்ளப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சவுதி சூப்பர் கப் இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி மோதியது.
இறுதிப்போட்டி 2-2 என சமன் ஆனதால் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில், 3-5 என்ற கோல் கணக்கில் அல் ஆலி சவுதி அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் அல் ஆலி சவுதி அணியிடம் அல் நசார் க்ளப் அணி தோல்வி அடைந்ததால் ரொனால்டோ ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அல் நசார் க்ளப்-காக ரொனால்டோ Major கோப்பைகளை இதுவரை வென்றதில்லை என அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை அல் நசார் க்ளப் எதிர்கொண்டது.
- 2-1 என்ற கோல் கணக்கில் அல் நசார் க்ளப் வெற்றி பெற்றது.
சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோவின் அல் நசார் க்ளப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை அல் நசார் க்ளப் எதிர்கொண்டது. அப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அல் நசார் க்ளப் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்கவில்லை என்றாலும், 61வது நிமிடத்தில் ஜாவோ ஃபெலிக்ஸ்க்கு அவர் கொடுத்த Assist-ஆல் வெற்றி கிடைத்தது.
அல் நசார் அணிக்காக முதல் கோப்பையை ரொனால்டோ வெல்வாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
- தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகிறார்.
ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
- பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப் அணியில் இடம்பிடித்துள்ளார்.
- பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டெய்ன் தனது எக்ஸ் பதிவில், "போர்ச்சுகல் அணியில் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ தான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம். அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துகொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். எனக்கு இது குழப்பமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.






