என் மலர்
மேகாலயா
- இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
- ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேகாலயவின் சோஹ்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 790 பக்க குற்றப்பத்திரிகையை SIT சமர்ப்பித்தது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
இருப்பினும், சோனம் ஏற்கனவே தங்கள் குடும்பத்தின் தளபாடங்கள் தொழிலில் கணக்காளராக பணிபுரியும் ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த இந்த ஜோடி, மே 23 அன்று ஒரு ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.
ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அதுவரை தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 8 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் போலீசில் சரணடைந்தார். அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் முன்னதாக கைது செய்தனர்.
ஜூன் 11 ஆம் தேதி, விசாரணையில் சோனம் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
- கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம்.
- நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்
மேகாலயாவில் சுரங்கங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு கிடங்குகளில் சேமிக்கப்பட்ட 4,000 டன் நிலக்கரி மழையால் அடித்துச் செல்லப்பட்டதாக அமைச்சரின் கருத்து இப்போது மேகாலயாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள இரண்டு நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது. அது சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய மாநில உயர் நீதிமன்றம், அரசாங்கத்தை கண்டித்தது. நிலக்கரி காணாமல் போனதற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அம்மாநில ஆளும் பாஜக- என்பிபி கூட்டணி அமைச்சர் கீர்மென் ஷில்லா, நாட்டில் அதிக மழைப்பொழிவைப் பதிவு செய்யும் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. கனமழை மற்றும் வெள்ளத்தால் எதுவும் நடக்கலாம். கிழக்கு ஜெயின்டியா மலைகளிலிருந்து வெள்ள நீர் வங்கதேசத்திற்குள் பாய்கிறது. இந்தச் செயல்பாட்டில், நிலக்கரி சேமிக்கப்பட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். நிலக்கரி வங்கதேசத்திற்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.
நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம்.
ஷில்லாங்:
மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும்."
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாநில துணை முதல்-மந்திரி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி கலந்துகொண்டார். கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை ஒரு சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- தன்னுடைய பழகிய பெண் தோழி திடீரென பேச்சை நிறுத்தியதால் கொலை செய்ய முடிவு.
- மார்க்கெட்டில் தந்தையுடன் வரும்போது, கழுத்தை அறுத்துக் கொலை.
மேகாலயா மாநிலத்தில் பெண் தோழி, தன்னுடன் பழகுவதை திடீரென நிறுத்தியதால் கோபத்தில் தந்தை கண் முன்னே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலம் மவ்காப் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபிர்னைலின் கார்சின்டிவ். இவருடன் வாலிபர் ஒருவர் பழகி வந்துள்ளார். நாட்கள் ஆக ஆக, அந்த நபரின் செயல்களால் வெறுப்படைந்த ஃபிர்னைலின் கார்சின்டிவ், அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
அந்த நபர் தொடர்ந்து வற்புறுத்திய போதிலும், ஃபிர்னைலின் கார்சின்டிவ் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். இதனால் அந்த நபருக்கு கோபம் தலைக்கேறியுள்ளது. பெண் தோழியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
நேற்று ஃபிர்னைலின் கார்சின்டிவ் தனது தந்தையுடன் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த நபர் ஃபிர்னைலின் கார்சின்டிவ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஃபிர்னைலின் கார்சின்டிவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று அவரது தந்தை செய்வதறியாமலம் நிற்க, அந்த நபர் ஓட முயன்றுள்ளார். ஆனால் மார்க்கெட்டில் உள்ள மக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
துடிதுடித்துக் கொண்டிருந்து தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணிற்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி கண்டெடுக்கப்பட்டது .
- மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார்
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மேகலாயாவுக்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில், மே 23ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனிடையே ராஜா ரகுவன்சியின் சடலம் ஜூன் 2ம் தேதி , வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது .
இதனையடுத்து, மனைவி சோனம் உத்தரப்பிரதேசத்தில் போலீசிடம் சரணடைந்தார். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பெண் பொது இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்படுகிறார்.
- சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
மேகாலயாவில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறி ஒரு பெண்ணை சுற்றி கும்பல் ஒன்று கட்டைகளால் தாக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்க்ரே பகுதியில் பெண் பொது இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்படுகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் குறித்து மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து மேகாலயா சட்டமன்றக்குழு தலைவர், மகளிர் அமைப்பு தலைவருமான சான்டா மேரி ஷைலா, இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை காவல் துறையிடம் கேட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் விவகாரத்தில் விழிப்புடன் இருக்க மேகாலயாவின் 12 மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
- கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடகிழக்கு பகுதி முழுவதிலும் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ இல்லை.
மேகாலயாவில் இன்று இரவு சுமார் 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து தென்கிழக்கே 49 கி.மீ தொலைவில் வங்காளதேச எல்லையில் உள்ள சில்ஹெட் அருகே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடகிழக்கு பகுதி முழுவதிலும், வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும், அண்டை நாடான வங்கதேசத்திலும் உணரப்பட்டன.
மேலும், நிலநடுக்கத்தின் எதிரொலியால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- பாலியல் உறவு பற்றி 16 வயது சிறுமி முடிவு செய்ய முடியும் என மேகாலயா ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
- மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஷில்லாங்:
மேகாலயா மாநிலத்தில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சிறுவன்மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை நீக்க கோரி மேகாலயா ஐகோர்ட்டில் சிறுவன் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில், சிறுவன் பல்வேறு வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது என்றும், சிறுவனின் மாமா வீட்டில் வைத்து இருவர் இடையே பாலியல் உறவு நடந்துள்ளது எனவும், பாலியல் தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த வழக்கு இல்லை. கருத்தொருமித்த செயலே ஆகும். சிறுமி தனது வாக்குமூலத்தில் மனுதாரரின் காதலி என்றும், கட்டாயம் எதுவுமின்றி உறவுக்கு ஒப்புதல் அளித்தது பற்றியும் கூறியுள்ளார் என வாதிட்டார்.
மேலும், சிறுவன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி இருவரும் காதல் உறவிலேயே இருந்துள்ளனர் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதி டபிள்யூ தீங்தோ வெளியிட்டுள்ள தீர்ப்பில், 16 வயதில் உடல் மற்றும் மனரீதியாக ஒருவர் நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பார். அவர்களது சுகாதார நலன் பற்றி, பாலியல் உறவில் ஈடுபடுவது உள்பட அவர்களுக்கு சுய நினைவுடனான முடிவை எடுப்பதற்கான தகுதியை அவர்கள் பெற்றிருப்பார்கள் என கருதுவது நியாயம். இதனால், சிறுமி வாக்குமூலம் மற்றும் மனுதாரரின் ஆவணங்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, சிறுமியின் வாக்குமூலம் மனுதாரருக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதனால் இதில் குற்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. எனவே மனுதாரருக்கு எதிரான எப்.ஐ.ஆர். பதிவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
- குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக தகவல்
- கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்து மேகாலயா மாநிலம் தெற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர். இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லை வேலியை ஒட்டி அந்த கிராமம் அமைந்துள்ளது.
அந்த வீரர்கள் துப்பாக்கி மற்றும் லத்திகள் வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களிடம் சென்று விசாரித்து அவர்களை திரும்பி செல்லும்படி கூறி உள்ளனர். அவர்கள் தயங்கியதைடுத்து கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் வீரர்கள் வந்த பாதையில் திரும்பிச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையிடம் (பிஜிபி), எடுத்துரைத்து, எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
எல்லைப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக துரத்தியபோது இந்திய கிராமத்திற்குள் தெரியாமல் நுழைந்ததாக வங்காளதேசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த கிராமம் எல்லை வேலிக்கு முன்னால் இருப்பதால், வங்காளதேச வீரர்கள் குற்றவாளிகளை துரத்தும்போது தாங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை உணரவில்லை. எல்லை விதிகளை மீறியது தொடர்பாக கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரப்பூர்வ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சம்பவத்தில் இந்தியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை" என்றார்.
- தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பாகு சௌஹானால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவரை தொடர்ந்து, தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
மேலும், தேசிய மக்கள் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள், பாஜகவை சேர்ந்த 3 எம்ஏஎல்ஏக்களும், ஹெச்எஸ்பிடிபியை சேர்ந்த ஒருவரும் சங்மாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அசாம் முதல்வரும், என்இடிஏ ஒருங்கிணைப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
- மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.
- வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.
ஷில்லாங்:
மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவர்களில் ஒருவரான மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில் போட்டியிட்டார்.
பா.ஜ.க.வை சேர்ந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாவை சங்மா நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் ஆதரவை பெற இந்த சந்திப்பு நடந்தது என கூறப்படுகிறது.
இதற்கிடையே, மேகாலயாவில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் சங்மாவின் கட்சி 26 இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், முன்னாள் துணை முதல் மந்திரி மற்றும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வான பிரெஸ்டோன் டின்சாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா வரும் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதன்படி, கட்சி தலைவர் கன்ராட் சங்மா முதல் மந்திரியாக பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.






