என் மலர்
நீங்கள் தேடியது "மேகாலயா"
- அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது
- பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
புதுடெல்லி:
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுயேட்சை எம்எல்ஏ மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியின் பெரிலின் சங்மா, பெனடிக் மரக் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ சாமுவேல் சங்மா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எச்.எம்.ஷாங்க்லியாங் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அடுத்த ஆண்டு மேகாலயாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 4 முக்கிய தலைவர்களின் வருகை பாஜகவிற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இதுபற்றி பாஜக தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா கூறுகையில், "மேகாலயாவில் முக்கியமான நான்கு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம் பாஜக வலுவடையும் என்றும், மேகாலயா மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.
- கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
ஷில்லாங்:
கடந்த 1972-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலம் உதயமானது. அப்போது முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது.
மத்திய அரசின் சமரசத்தால் கடந்த ஆண்டு இரு மாநில அரசுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருமாநில எல்லையில் மோதல் சம்பவங்கள் தொடர் கதையாய் உள்ளன.
இந்த நிலையில் மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்துக்கும் அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்துக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள லபங்காப் கிராமத்தில் நேற்று இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.
இருதரப்பினரும் வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். எனினும் இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
- கார்கலில், 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- மேகாலயாவில், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கி.மீ., ஆழகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 12 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரஞ்சி டிராபி தொடரில் இன்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மேகாலயா அணிக்கு தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி 2 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பிரிங்சாங் சங்மா- ஆகாஷ் சவுத்ரி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
பிரிங்சாங் 19 ரன்னிலும் ஆகாஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனிஷ் சரக் 17, ஹிமான் புக்கான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் ஷர்துல் தாகூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 5-வது மும்பை வீரராக ஷர்துல் சாதனை படைத்துள்ளார்.
மும்பைக்காக ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த வீரர்கள்:-
ஜஹாங்கீர் கோட் (மும்பை) vs பரோடா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1943-44)
உமேஷ் குல்கர்னி (மும்பை) vs குஜராத் - ஆனந்தில் சாஸ்திரி மைதானம் (1963-64)
ஏ.எம். இஸ்மாயில் (மும்பை) vs சவுராஷ்டிரா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1973-74)
ராய்ஸ்டன் டயஸ் (மும்பை) vs பீகார் - பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் (2023-24)
ஷர்துல் தாக்கூர் (மும்பை) vs மேகாலயா - மும்பையில் பி.கே.சி மைதானம் (2024-25)
மேகாலயா கவர்னராக பதவி வகித்த கங்கா பிரசாத், சிக்கிம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து திரிபுரா மாநில முன்னாள் கவர்னராக இருந்த ததாகதா ராய் மேகாலயா கவர்னராக கடந்த 21-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மேகாலயா மாநில தலைமை நீதிபதி முகமது யாகூப் மிர் முன்னிலையில் ததாகதா ராய் நேற்று கவர்னராக பதவியேற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்சியில் அம்மாநில் முதல்வர் கன்ராட் சங்மா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகளும் ததாகதா ராய் பதவியேற்பு நிகழ்சியில் பங்கேற்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர் மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக கடந்த 2001-2006 ஆண்டு வரை பதவி வகித்தார். ததாகதா ராய் பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TathagataRoy