என் மலர்
நீங்கள் தேடியது "AIDS"
- சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தாரா ஷிவ் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக லந்தூர் மாவட்டத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் கண்காணிப்பாளர், ஊழியர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து சிறுமி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். சிறுமி எழுதிய கடிதங்களை விடுதி நிர்வாகிகள் கிழித்து எறிந்தனர்.
சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர்.
சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி உரிமையாளர் ரவி பாபட்லா, கண்காணிப்பாளர் ரச்சனா பாபட்லா, ஊழியர்கள் அமித் மகாமுனி மற்றும் பூஜா வாக்மாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம்.
ஷில்லாங்:
மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும்."
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாநில துணை முதல்-மந்திரி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி கலந்துகொண்டார். கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை ஒரு சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
- எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ''நம் நலம் நம் செல்வம்'' என்ற தலைப்பில் செல்வ சுருதி கலைக்குழுவினரின் எய்ட்ஸ் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
சமூக ஆர்வலர் ரஹ்மத் ஜவஹர் அலிகான், சுகாதார அமைப்பை சேர்ந்த ராஜா, கோட்டையம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர். நாடகம், பாட்டு, கரகாட்டம், மேளக்கச்சேரி ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலூர்:
கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை மதினா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நோன்பு திறப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பொருளாளர் ராஜேந்திரன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பாலசுந்தர் மற்றும், விஜயலட்சுமி செந்தில், வட்ட செயலாளர்கள் நவ்ஷத் அலி, வெங்கடேஷ், ராஜேஷ், பகுதி அவைத் தலைவர் சண்முகம், மனோகர், தகவல் தொழில்நுட்ப அணி பிரவின், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
- கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கொல்லிமலையில் நடை பெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
- விழாவில் 437 பயனாளிகளுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடை பெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னி லையில் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலை குழுவினர் மற்றும் மாணவ, மாண வியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றி தழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.
தொடர்ந்து வல்வில் ஓரி அரங்கில் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலி யாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரத நாட்டியம், தெருகூத்து,
சேர்வை ஆட்டம், கொல்லிமலையில் சுற்றுலா முக்கியத்துவம் குறித்த நாடகம், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.
கொல்லிமலை வட்டம், செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் வருவாய் துறை சார்பில் 24 பயனாளி களுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளி களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.64.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி களையும், மகளிர் திட்டம் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.98.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.28.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.69,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.843/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.17,960/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், பழங்குடியி னர் நலத்துறை சார்பில் 45 பயனாளி களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 138 பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் ஸ்வெட்டர்க ளையும் என மொத்தம் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
மேலும், வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 17 பள்ளிகளை சேர்ந்த 427 மாணவ, மாண வியர்களுக்கும், 360 கலைஞர்க ளுக்கும், வல்வில் ஓரி அரங்கில் அமைக்கப்பட்ட 22 அரசுத்துறைகளின் பணி விளக்க கண்காட் சியில், சிறப்பாக அரங்கம் அமைத்த தற்காக முதல் இடம் ெபற்ற வனத்துறைக்கும், 2-ஆம் இடம் பெற்ற காவல் துறைக்கும், 3-ஆம் இடம் பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், தொடர்ந்து, வில்வித்தை போட்டி யில் வெற்றி பெற்ற போட்டியாளர்க ளுக்கும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிய ருக்கும் கலெக்டர் உமா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, நாமக்கல் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணன், வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, துணை இயக்குநர் தோட்டக்கலைத் துறை கணேசன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, பழங்குடியினர் திட்ட அலுவ லர்பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், உதவி இயக்கு நர் பட்டுவளர்ச்சி முத்துப்பாண்டி யன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) முரு கன், அத்மா குழுத்தலைவர் செந்தில் முருகன், கொல்லி மலை தாசில்தார் அப்பன்ராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
- 423 மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டில் தையல் எந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,400 மதிப்பீட்டில் திறன்பேசியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36,200 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
- எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட தலைவர் ஸ்ரீதர் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ் தொடக்க உரையாற்றினார்.
இதில் செயலாளர் மலர்விழி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தில் ராமாயி, ஜெயபாரதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியே உள்ளார்.
- சவுக்கு சங்கருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே உள்ள சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அக்டோபர் 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி நலம் பெற்று வீடு திரும்பினார் .
இதனிடையே சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது. திருடப்பட்ட மருத்துவ அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டு, நான் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இந்த மருத்துவ அறிக்கை போலியானது. நான் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கோபாலபுரத்தில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது.
- 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை அடுத்துள்ள எஸ்.கோபாலபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை 361 பயனாளிகளுக்கு வழங்கினார்.
கள்ளிக்குடி வருவாய்த்துறை உள்ளிட்ட 14 அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 361 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 66 லட்சத்து 44 ஆயிரத்து 975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் சௌந்தரியா, கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நீலாதேவி, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்தது. இதை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர்(பொறுப்பு) அருணாசலம் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) சத்யா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.ஐ.வி. கிருமியின் அளவை கணக்கீடு செய்யும் கருவியை கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் ஒன்றாக சேலம் மாவட்டமும் திகழ்கிறது. இருப்பினும் அவர்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை, எச்.ஐ.வி. தடுப்பு பணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்து வருகிறோம். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கீடு செய்யும் கருவி மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏ.ஆர்.டி. மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 94,858 பேர் எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர். இதில் 363 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 கர்ப்பிணிகள் அடங்குவர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.
சர்வதேச எய்ட்ஸ் நோய் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
அதில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அதுவும் புதிதாக இளைஞர்களை பெருமளவில் பாதித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் 20 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் 432 பேரை எய்ட்ஸ் தாக்கி இருந்தது. 2017-2018-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 554 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே 318 பேரை எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளது.
2015 முதல் 2016-ம் ஆண்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 435 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியிருந்தது. அது 2017-2018-ம் ஆண்டில் 536 ஆக அதிகரித்தது. தற்போது ஏப்ரல் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் புதிதாக 435 எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகியுள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் ‘செக்ஸ்’ மற்றும் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவது போன்ற காரணங்களால் 10 வயது சிறுவர்கள் முதல் 25 வயது இளைஞர்கள் வரை எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 1,12,778 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்களில் சென்னையில் தான் அதிக அளவில் இருக்கின்றனர் என பொது சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோயை தடுக்க சமூக வலை தளங்கள், உள்ளிட்ட பல ஊடகங்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #AIDS #TN






