என் மலர்
நீங்கள் தேடியது "Welfare Scheme"
- தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் விடுதியில் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பெண்கள் இல்ல விடுதியின் காப்பாளர்கள் எலிசபத் செலின்மற்றும் என்.சி.சி. மாணவர்கள் விடுதியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் விடுதியில் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலித்தீ ர்த்தால் குப்பம் காமராஜர் கலைக்கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கதிர்வேல் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை இளநிலை அதிகாரி சுனில்குமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு போர்வை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உபயோக பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பெண்கள் இல்ல விடுதியின் காப்பாளர்கள் எலிசபத் செலின்மற்றும் என்.சி.சி. மாணவர்கள் விடுதியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கி தி.மு.க. கொடியேற்றி வைத்தார்.
பின்பு, போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன்,
அரசு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரன், வழக்கறிஞர் அணி அன்பரசு, மாவட்ட மாணவரணி செந்தாமரை செல்வன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
- தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், ஜெ.கே.செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.
முடிவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக்கூறினார்.
- மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
- கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு கொடி நாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நாளில் தேசத்தின் குடிமக்களாகிய நாம் அனைவரும் முப்படை வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் நிதியினை வாரி வழங்கும் நாள்.
அடுத்த கொடிநாள் வரை முழு ஆண்டும் கொடிநாள் நலநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகை முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக கொடிநாள் நிதி வசூல் புரிவதில் தமிழ்நாடு முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது படைவீரர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் காட்டும் மதிப்பும் மரியாதையையும் அளவிடுகிறது.
மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர் , சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் ரூ.5,27,100 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
2021 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.68,44,000. அதில் ரூ.1,59,53,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 233.10 சதவீதம் ஆகும். கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு ரூ.72,29,000 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்வதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.15 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- போக்குவரத்துத்துறை அமைச்சர்
பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் துவக்கி வைத்தார்.மாநில அரசு நிதியுதவியின்கீழ், தரம் உயர்த்துதல் திட்டத்தின்கீழ், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையுள்ள 5 கி.மீ நீளமுள்ள மண் சாலையினை தரம் உயர்த்தி ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும், பரவாய் முதல் வரகூர் வரையுள்ள 4.5 கி.மீ நீளமுள்ள மெட்டல் சாலையினை தரம் உயர்த்தி ரூ.10.9 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக அமைக்கும் பணியினையும்,அந்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ், ரூ.13.79 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியினையும், வரகூர் ஊராட்சி வடக்கு தெருவில் ரூ.10.57 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சி தெற்கு தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.14.32 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், வரகூர் ஊராட்சியில் வரகூர் முதல் கொளப்பாடி வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பரவாய் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியினையும், சின்னபரவாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, கள்ளம்புதூர், ஆண்டிகுரும்பலூர் கிராமங்களில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லபிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்துச்செல்வி மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைசெயலாளர் துரைசாமி, வேப்பூர் தெற்கு ஒன்றியசெயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .சிவசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் .கருணாநிதி, .பாஸ்கர், நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் வடிவேல் (திருச்சி), உதவி கோட்ட பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் ஹரிகிருஷ்ணன் (பெரம்பலூர்), குன்னம் வட்டாட்சியர் அனிதா,வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சின்னபையன், செல்வகுமார், ஒன்றிய பொறியாளர் .ஆனந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன் வரவேற்றுப் பேசினார்.
- வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.
சென்னை:
சென்னை தெற்கு மாவட்ட தி.மு. க. சார்பில் செம்மஞ்சேரி 200-வது வட்ட செயலாளர் இரா. நாகராஜ் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவிந்த ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன், வரவேற்றுப் பேசினார்.
பகுதி துணை செயலாளர் வி.தனசேகரன், பொருளாளர் பி. ரவி, மாவட்ட பிரதிநிதி ஹரி, சங்கர், செந்தில்குமார், புஷ்பா, ராஜேந்திரன், ஆர். தேவேந்திரன், சேகர், எஸ். தேவேந்திரன், முனுசாமி, ராஜி, அருண், பிரகாஷ், பிரவீன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், மா. சுப்பிரமணியன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் மு. மனோகரன், 14 -வது மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி. ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜி. வெங்கடேசன், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே. ஏழுமலை, தா. பஷீர், ஆ. அரிகிருஷ்ணன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சி. பிரதீப், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் என். குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.
- புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே தி.மு.க. அரசின் சாதனை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதி சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில் 500 பேருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் ேபசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா கண்டதுதான் தி.மு.க.வின் சாதனை ஆகும். தி.மு.க. ஆட்சியில் புதியதாக எந்ததிட்டமும் கொண்டு வரவில்லை. எழுதாத பேனாவுக்கு சிலை வைக்க முடிவு செய்ததும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதும்தான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை ஆகும்.
ஈரோட்டில் தி.மு.க. வெற்றி பெற்றது தனிக்கதை. அங்கு அ.தி.மு.க. 44 ஆயிரம் வாக்குகள் பெற்றதுதான் உண்மையான வெற்றி. வாக்காளர்களையே அடைத்து வைத்து வாக்கு செலுத்த முடியாமல் செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், வரதராஜன், வேண்டு ராயபுரம் சுப்பிரமணி, அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமரன், முகம்மது நைனார், கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், கருப்பசாமி, டாக்டர் விஜயஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி செய்திருந்தார்.
- சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் இருந்தாலுல் தெரிவிக்கலாம்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரியாபர்வின் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.
கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவரம் முன்னிலை வைத்தனர்.
ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார்.
அப்போது சுகாதாரமான நீர் வழங்க வேண்டும்.சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடி தண்ணீர்களை வீணடிக்க கூடாது.
சிக்கனமாக பயன்படுத்த கொள்ள வேண்டும்.
குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அரசு நல திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தாலுல் தெரிவிக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.
- தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்தனர்.
ஊட்டி,
குன்னூர் கிரேஸ்டிரஸ்ட் காருண்யா டிரஸ்ட்டுடன் இணைந்து தி.மு.க பிரமுகரும், சமூக சேவகருமான கோவர்த்தனன் தலைமையில் தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் சண்முக மூர்த்தி, குன்னூர் நகர தி.மு.க பொருளாளர் ஜெகநாத் ராவ் மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி தஸ்தகீர், பால் பரமானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சீயோன் ரத்தப் பரிசோதனை நிலையம் சார்பில் அதன் நிறுவனர் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ரூபேஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொடுத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மு.க பிரமுகர்கள் கிப்சன் மற்றும் சேவியர் ஆகியோர் ெசய்திருந்தனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்தததை யொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று 365 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 93 ஆயிரத்து 372 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை கடந்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி சென்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதி ரியான முதலமைச்சராக, மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்ப டையில் மக்களாட்சியில் 3-வது ஆண்டை தொடங்கி யிருக்கும் முதல்- அமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட மக்களின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாக த்தால் சிறப்பான நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக சிவகங்கை திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில் குமார், ஆரோக்கிய சாந்தா ராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.
எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.
- ஆர். எஸ். மங்கலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
- அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள புல்லமடை ஊராட்சி தெற்கனேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத்திட்டங் கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான குடிநீர் வசதி முழுமையான அளவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சாலை வசதிகள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தனிநபர் பொரு ளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா, வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் கனிமொழி (புல்ல மடை), ஜெயபாரதி (சனவேலி), பூபதி (காவண கோட்டை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.