என் மலர்
நீங்கள் தேடியது "Persons with disabilities"
- மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார்.
- 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
திருப்பரங்குன்றம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு மற்றும் பல சரக்கு பொருட்களை மண்டல தலைவர் சுவிதா விமல் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் விமல், பெருங்குடி வசந்த், பிரபு, கார்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பழனிகுமார் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 27-ந் தேதிக்குள் பராமரிப்பு தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 3,790 மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, மாதம் ரூ. 2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை வழங்க ப்பட்டு வருகிறது.
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திற னாளிகள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிக ளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார், வங்கிக்கணக்கு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளி புகைப்படம், மாற்றுத்திறனாளியின் பாதுகாவ லர் புகைப்படம் ஆவ ணங்களில் அசல் மற்றும் நகலை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வருகிற 27-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே மாற்றுத் திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம், மேற்காணும் விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
- தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
- தேசிய அடையாள அட்டை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தததாவது, தமிழக அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் 31824 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்களில் தனித்துவம் வாய்ந்த 19439 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில்புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் வங்கி பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது.
மன வளர்ச்சி குன்றியோர், கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்டு செல்போன் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது பிரிவு திட்டத்தின்கீழ், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிலும் குறைகண் பார்வையுடைய மாணவ, மாணவியர்களுக்கு எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கிகள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி.
- மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ப ரிசுகள் மற்றும் சான்றிதழினை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் ( உதவி உபகரணங்களுடன்) 12 முதல் 14 வயதுடைய ஆண், பெண் காலிபர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்களுக்கான 50 மீ நடைபோட்டி , 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, நீளம் தாண்டுதல் போட்டி, 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் போட்டி, குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, பார்வைத் திறன் குறையுடையோருக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல்மா நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இதனை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அந்நாளில் ஊதா நிறத்தில் முக்கிய கட்டிடங்களில் ஒளியூட்டி பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.
இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழ்நாட்டிலும் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 நாட்கள் தமிழ்நாடு அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களையும் ஊதா நிறத்தில் ஒளியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலக பணியாளர்களையும் ஊதா நிறப்பட்டை அணிந்து, மாற்றுத்தி றனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்ரெங்கராஜன், எமாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.
- தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
சீர்காழி:
சீர்காழி நகர தி.மு.க. சார்பில்இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, பிறந்தநாளை யொட்டி, நகராட்சி 18-வது வார்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக நகர செயலாளர் ம.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சாமிநாதன், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை, இலக்கிய பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வ முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா.முருகன், சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, தி.மு.க. நிர்வாகிகள் முத்துகுபேரன், முருகன், ஜெ.கே.செந்தில், கோடங்குடி.சங்கர், மற்றும் பலர் பங்கேற்றனர்.
முடிவில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றிக்கூறினார்.
- சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
- சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.
வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (தரைதளத்தில்) மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமை ச்சாின் விரிவான மருத்துவ க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிறதுறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழ ங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18-வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகிய வற்றுடன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காதொலிக் கருவியை கலெக்டர் வழங்கினார்.
- மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு ரூ.30 ஆயிரம் மதிப்பில் 6 மாற்றுதிறனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் நவீன காதொலிக் கருவிகள், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஆகியவைகளை வழங்கினார். மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.
இந்த முகாமில் வங்கி கடனுதவி, உதவி உபகரணம், பராமரிப்பு உதவித்தொகை, உயர் ஆதரவு தேவைபடுவோருக்கான உதவித்தொகை மற்றும் பிற துறைகளின் மூலம் வழங்கப்படும் உதவி களுக்கென மாற்றுதிறனாளிகளி டமிருந்து 88 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக இளை யான்குடி வட்டத்திற்கு ட்பட்ட தன்னார்வலர் அப்துல்மாலிக் ஏற்பாடு செய்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு பனைவிதை மற்றும் மரக்க ன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல், வட்டாட்சியர் அசோக்கு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சியில் 21,240 மாற்றுத்திறானாளிகளுக்கு அடையாள அட்டைகள் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
- நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாமில் 279 பேர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத் திறானாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடை பெற்றது.
முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசிய தாவது:-
கடந்த 01.08.2021 முதல் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வட்டார அளவில் முகாம்கள் நடத்தப்பட்டு 8,435 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருங்கிணைந்த விழுப்புரம் அலுவலகம் மூலமாக 12,541 மாற்றுத் திறானாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடை யாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 279 ேபர் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றை சாளர முறையில் நேற்று 264 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 21,240 மாற்றுத்தி–றனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற்றிடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து சலுகை கட்டணம், மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன், அரசின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பெற்றிட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பயண்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரி உதவி மருத்துவ அலுவலர் (எலும்பு அறுவை சிகிச்சை) பிரவீன் பால் மற்றும் மாற்றுத்திறனாளி கள் பலர் கலந்து கொண்ட னர்.