என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Identity Card"
- சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
- கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார்.
மானாமதுரை
இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் தலைவர், செயல் அலுவலர் பதிலளித்தனர்.
கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூ ராட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பேரூராட்சிகள் இணை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும்.
தமிழக அரசின் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 131 தெருவோர வியாபாரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க அடையாள அட்டை வழங்கப்படும்.
பேரூராட்சிப் பகுதியில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந் தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
- ஏரளமானோர் கலந்துகொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் 21 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடை யாள அட்டைகள், 25 பேருக்கு பஸ் மற்றும் ரெயில் சலுகை பாஸ் உள்பட 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் வழங்கினார்.
இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறன் நல முட நீக்கு வல்லுனர் இனியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
- 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றிணைந்து 2018-ஆம் ஆண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் தரமான சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது .
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கியும், இத்திட்டத்தினை செயல்படுத்திய 2 அரசு ஆஸ்பத்திரி மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் பணியாற்றிய திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை காப்பீடு திட்ட பொறுப்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், பெரியகுளம் தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் குமார், மாவட்ட திட்ட அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், செல்லமணி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 247 பேர் தேர்வு செய்யப்பட்டனர்
- கலெக்டர் வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் 380 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் 247 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 247 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டைகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
மேலும் 162 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்கான பதிவும், 30 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளி களுக்கான மாதாந்திர உதவித் தொகை வேண்டி 13 பேரும், வங்கிக் கடனுதவி வேண்டி 22 பேரும்,வேலைவாய்ப்பு வேண்டி 32 பேரும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 12 பேரும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார்உள்பட மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
- முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நாசரேத்:
நாசரேத் நகர வணிகர் சங்க 23-வது ஆண்டுவிழா ஜோதி மஹாலில் நடந்தது. சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் பாபு செல்வன் வரவேற்றார். தொழி லதிபர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சங்க நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் கிருஷ்ணராஜ், ரஞ்சன், மாமல்லன், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் நாசரேத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகாவாக உருவாக்க அரசை கேட்பது, வணிகர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடை யாள அட்டை வழங்குவது, நாசரேத் ரெயில் நிலை யத்தை பொது மக்களின் நலம் கருதி விரிவுப்படுத்தி எஸ்கலேட்டரை விரைவில் அமைக்க ெரயில்வே நிர்வாகத்தை கேட்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து 2023- 2024-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஜெபஸ் திலகராஜ் தலைவராகவும், ஆறுமுகம் துணை தலைவராகவும், செல்வன் செயலாளராகவும், சித்திக் துணை செயலாளராகவும், அகிலன் பொரு ளாளராகவும், நோவா சாலமோன், ஜெபராஜ், செல்வாஸ் ஆகியோர் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச மருத்துவ பரிசோ தனை முகாம், மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் தலை மையில் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசுவா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ் மற்றும் குழுவினர் வணிகர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் செல்வன் நன்றி கூறினார்.
- தேசிய அடையாள அட்டை முகாம் 24- ந் தேதி நடைபெறுகிறது.
- 7- ந்தேதி அன்று வழக்கம்போல் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை முகாம் 24- ந் தேதி திருக்கோவிலூர் வட்டார வள மையத்திலும், 25- ந்தேதி ரிஷிவந்தியம் வட்டார வள மையத்திலும், 29- ந்தேதி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30- ந்தேதி திருநாவலூர் வட்டார வள மையத்திலும், 31- ந்தேதி உளுந்தூர் பேட்டை வட்டார வள மையத்திலும், செப்டம்பர் 1- ந் தேதி சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் 5- ந் தேதி கல்வராயன் மலை கரியலூர் டேனிஸ் மிஷன் ஆரம்பபள்ளியிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இவ்வாறு மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவதால் வியாழக்கிழமை தோறும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் நடைபெறும். முகாம் இன்று மற்றும் 31-ந்தேதி 2 நாட்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் செப்டம்பர் மாதம் 7- ந்தேதி அன்று வழக்கம்போல் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் இந்த சிறப்பு முகாமில் இது நாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
- தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
பள்ளியில் பயின்று வரும் 462 மாணவர்களுக்கு அடையாள அட்டை இல்லை. இதே பள்ளியில் படிக்கும் சகோதரர்களான 8-ம் வகுப்பு பயிலும் விஜய விஜேஷ்குமார், 10-ம் வகுப்பு பயிலும் விஜய விவேஷ்குமார் ஆகியோர் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது என முடிவு செய்தனர்.
இதுகுறித்து தனது பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விருப்பத்தை தெரிவித்தனர். ஓவியப்போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கேரம் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகளை கொண்டு சுமார் ரூ.10 ஆயிரத்தை சகோதரர்கள் சேமித்தனர்.
சேமித்து வைத்த பணத்தை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயார் செய்து தாங்கள் படித்து வரும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினர்.
மறைந்த சகோதரர்களின் தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி தலைமை ஆசிரியர் பாரி மற்றும் அடையாள அட்டை வழங்கிய மாணவர்களின் தாய் ப்ரீத்தி விஜயகுமார், ஆசிரியர்கள் அடையாள அட்டைகளை வழங்கினர்.
இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- ஏ. ஐ. டி. யு. சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
- சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது
அவினாசி:
திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை அவினாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வழங்கி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் தனலட்சுமி மற்றும் அவினாசி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதேபோல் அவினாசி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடமும் அவினாசி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஏ. ஐ. டி. யு. சி., சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்துகொண்டனர்.மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி நிர்வாகத்தினர், சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையினரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி (பொறுப்பு) சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர். அதன்படி 54 பேருக்கு அடையாள அட்டை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.
- இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும்
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்தி றனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம், இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் மற்றும் 3-ம்வார செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும்.
முதல் வார செவ்வாய் கிழமைகளில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.
எளிதில் வருவதற்கு ஏதுவாக அமைந்துள்ள மின்னல் ஊராட்சி என்.எல்.பி.திருமண மண்டபத்தில் நடைபெறும். 3 வார செவ்வாய்கிழமைகளில் கலவை,திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் எளிதில் வருவதற்கு ஏதுவாக,ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.
ஜூன் மாத முதல் வார செவ்வாய்கிழமையான வருகிற 6-ந் தேதி அன்று மின்னல் ஊராட்சியில் நடைபெறுகிறது.
அந்த சமயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறாது.
மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற, 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேசன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் வரவேண்டும்.
பழைய அடையாள அட்டை தவற விடப்பட்டிருப்பின் புதியதாக பெற வேண்டுமெனில் போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பெற்று வந்தும் விண்ணப்பித்தும் புது அட்டை பெற்றுக் கொள்ளலாம். பழைய அடையாள அட்டை இருப்பின் அதன் அசல் அவசியம் கொண்டு வர வேண்டும்.மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.