என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
    X

    ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

    • 36 பேருக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முகாமில் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 247 மாற்றத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    இதில் அடையாள அட்டை பெறாத 38 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 36 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

    மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் பேசினார்.

    மேலும் இந்த முகாமில் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவப்பிரகாசம், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×