search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ  காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5.31 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை
    X

    கோப்புபடம்.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5.31 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை

    • கொேரானா, இதயம், புற்றுநோய், முடநீக்கு, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
    • திருப்பூா் மாவட்டத்தில் 36 மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5.31 லட்சம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொேரானா நோய்த் தொற்று சிகிச்சை, இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம், முடநீக்கு அறுவை சிகிச்சை, கண் நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகள், 28 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 36 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 260 குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், 2021 ம் ஆண்டு மே 7 ந் தேதி முதல் 2023 ம் ஆண்டு மாா்ச் 14 -ந் தேதி வரையில் 18,555 நபா்களுக்கு ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் அட்டையாள அட்டை எடுக்காதவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குகீழ்) ஆகிய ஆவணங்களை தயாா் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளம் அறை எண் 3ல் வேலை நாட்களில் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×