search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning Workers"

    • கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி முதற் கட்டமாக தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு பணி நெல்லை மாநகராட்சி யில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

    கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மலக்கசடு கழிவு சேகரிப்பு, தொட்டியை சுத்தம் செய்தல்,பொது சமுதாய நிறுவன கழிப்பறை களை சுத்தம் செய்தல், கழிவுநீர், மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு மற்றும் பரா மரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய தூய்மை பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுவார்கள்.

    கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நெல்லையில் நடை பெறும் தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளார்.

    கணக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளவேண் டும் என அவர் கேட்டு கொண்டார்.

    தொடர்ந்து அவர் 13-வது வார்டு அலுவல கத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார். பின்னர் கணக்கெடுப்பு பணியா ளர்களுக்கு வுரை வழங்கி னார். தகுதி வாய்ந்த தூய்மை பணி யாளர்களை விடு படாமல் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

    இந்த ஆய்வில் மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்.
    • தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சிகளில், தனியார் நிறுவனத்தினர் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் (சி.ஐ.டி.யு.,) சங்கத்தின் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    அதனடிப்படையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-

    மாநகராட்சி, நகராட்சிகளில் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில், சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் சட்ட விதிப்படி பணி மேற்கொள்ளப்படுவதில்லை.ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட கூலி பிரதிமாதம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் வந்த வண்ணம் உள்ளது.

    ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், தினமும் வீடு, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். பஸ் நிலையம், சந்தை, சாலை மற்றும் வீதிகளில் தேங்கும் குப்பை, கழிவுநீர், கால்வாயில் தேங்கும் கசடு, மண் உள்ளிட்டவற்றை சேகரித்து மக்கும், மக்காத கழிவுகளை தனியாக பிரித்து நுண் உர மைய கூடம், உலர்க்கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய குப்பைகளை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும்.

    தினமும் சேகரிக்கப்படும் குப்பையில் மக்கும் குப்பை, மக்காத மறு சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய உலர் கழிவுகள், மக்காத எதற்கும் பயன்படாத பிற உலர் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் டயர், நாப்கின், பயன்படுத்தப்படாத மருந்து, மருந்து அட்டைகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை தனித்தனியே சேகரிக்க வேண்டும். தினசரி சேகரிக்கப்படும் ஒட்டு மொத்த திடக்கழிவிற்கான அளவை உரிய பதிவேட்டில், தினமும் பதிவு செய்ய வேண்டும்.

    நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வொரு பணிக்கும் செயல்திறன் கணக்கிட்டு அதன்படி தொகை கணக்கிட்டு நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டும். வீடு, கடை, வணிக வளாகம், சந்தைகளின் எண்ணிக்கை, அங்கு சேகரிக்கும் திடக்கழிவின் எடை, மக்கும் மற்றும் மக்காத குப்பையின் எடை, பஸ் நிலையங்களில் தினசரி சுத்தம் செய்யப்படும் நேர விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

    பணியாளர்களுக்குரிய சம்பள தொகையை பிரதி மாதம், 5ந்தேதிக்குள் ஒப்பந்ததாரருக்கு நிர்வாகங்கள் வழங்க வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்கு தொகையை பிடித்தம் செய்து, ஒப்பந்ததாரரின் பங்குத் தொகையுடன் சேர்த்து உரிய கணக்கில் செலுத்தி ரசீது பெற்ற பின் அதனை சரிபார்த்த பிறகே அந்தந்த மாதத்திற்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு விடுவிக்க வேண்டும்.

    திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அரசின் குறைந்தபட்ச கூலி சட்டம் 1948ன் படி வெளியிடப்பட்ட அரசாணை எண் 36ன் படி, குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.

    இவ்வாறு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் உள்ள கலைஞர் கூட்டமைப்பு அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல தலை வர்கள் பிரான்சிஸ், கதீஜா இக்லாம் பாசில்லா, கவுன்சி லர்கள் பவுல்ராஜ், இந்திரா மணி, சின்னத்தாய், ஆமீனா, சுப்பு லெட்சுமி, பேச்சி யம்மாள் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள் டெங்கு தடுப்பு களப் பணியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    முன்னாள் முதல்வர் கருணாநிதி 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் 2 வது வார்டு பகுதியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான செ.ராஜசேகரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவியாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் பல்லடம் நகர திமுக., செயலாளர் ராஜேந்திர குமார்,வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் குமார்,மற்றும் லாரி முருகசாமி, பரமசிவம், சிலம்பரசன், மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • நகராட்சி கமிஷனர் ஹரிஹரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்களும் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாலை மறியல்

    இந்நிலையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்டக்கூடாது, குப்பைகளை பெறும் பகுதிகளிலேயே குப்பையை அழித்துவிட வேண்டும், மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து கொண்டு வர வேண்டும் என நிர்பந்தம் செய்ததாக கூறப்படு கிறது.

    இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தூய்மை பணிகளை புறக்கணித்து விட்டு நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை

    தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்தி னர். இதன் பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் ஹரிஹரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் தூய்மை பணி யாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தூய்மை பணியாளர்கள் அதிகாரிகள் கெடுபிடி செய்வது, கூலி உயர்வு வழங்காதது, பணி பாதுகாப்பு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று காலையில் நகரில் தூ ய்மைப்ப ணிகள் மேற்கொள்ள ப்படாததால் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    • 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 750- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் பணியாற்றி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கங்களின் தலைவர் மோகன் தலைமை யில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்க தலைவர் மோகன் கூறியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதியில் 750- க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 15 வருடங்களுக்கு மேலாக சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாநகராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் சுயஉதவிக்குழு தூய்மை பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அப்படி செய்தால் அவர்களுக்கு முழுமையான ஊதியம் கிடைக்காது. எனவே தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இலஞ்சி பேரூராட்சியில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முகநாதன் விருது வழங்கி கவுரவித்தார்.

    தென்காசி:

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இலஞ்சி பேரூராட்சியில் இந்திய அரசியலமைப்பு முகப்புரையை உறுதிமொழியாக அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய 2 தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முகநாதன் விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், இலஞ்சி பேரூராட்சிக் கழக செயலாளர் முத்தையா பாண்டியன்,பேரூராட்சியின் செயல் அலுவலர் அமானுல்லா, இளநிலை உதவியாளர் சங்கர நாராயணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 107 தூய்மை பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    • மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் 107 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல்,பட்டா மாறுதல்,மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாத்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவிஆணையர் கலால் ராஜ மனோகரன், தாட்கோ மேலாளர் சுந்தரராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
    • சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகள் அனைத்தும் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    குப்பைகள் சேகரிப்பு

    மாநகரில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் தினந்தோறும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை மட்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணியும் நடைபெறுகிறது.

    இதற்காக வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளர்கள் என 3 வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    போராட்டம்

    இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 550 தூய்மை பணியாளர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தினந்தோறும் காலை 6.10 மணி முதல் தங்களது பணிகளான சாலைகளை சுத்தப்படுத்துதல், வீடுகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.

    ஆனாலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

    மாநகராட்சியில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் ஏற்படும் சிரமங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் விதமாக சுயஉதவிக்குழு பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வருகை பதிவு

    அவர்களிடம் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 200 பணியாளர்கள் வரை இன்று பணிக்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிக்கே சென்று காலை வருகையை பதிவு செய்துவிட்டு பணிக்கு சென்றுவிடுவார்கள்.

    இதனால் அவர்கள் சீக்கிரமாகவே வீடுகளுக்கு சென்று குப்பைகளை வாங்கி கொள்வார்கள். சில மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு சென்றதும், நேரடியாகவே அங்கு சென்று அவர்களின் வருகை பதிவு செய்யப்படும்.

    ஆனால் நெல்லை மாநகராட்சியில் மட்டுமே அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து வருகையை பதிவு செய்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். இதனால் அவர்கள் அந்தந்த பகுதிக்கு சென்று பணியை தொடங்க தாமதமாகிறது.இதனால் குப்பைகளை சேகரிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. அதற்குள் குப்பை லாரிகள் சென்றுவிடுகின்றது.

    இதனால் ஒரு சில இடங்களில் குப்பை சேகரிப்பவர்கள் அந்த குப்பைகளை தீவைத்து எரித்துவிடுவதாக புகார் வருவதால், மற்ற மாவட்டத்தில் உள்ள நடைமுறையை இங்கு அமல்படுத்தி உள்ளோம். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்.

    தூய்மை பணியாளர்களின் வீண் அலைச்சலை குறைக்கவே இந்த முறையை நடைமுறைப்படுத்தி உள்ளோம். தற்போது பணியாளர்கள் அதனை உணர்ந்து படிப்படியாக வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×