என் மலர்
நீங்கள் தேடியது "Honored"
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இலஞ்சி பேரூராட்சியில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முகநாதன் விருது வழங்கி கவுரவித்தார்.
தென்காசி:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இலஞ்சி பேரூராட்சியில் இந்திய அரசியலமைப்பு முகப்புரையை உறுதிமொழியாக அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய 2 தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முகநாதன் விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், இலஞ்சி பேரூராட்சிக் கழக செயலாளர் முத்தையா பாண்டியன்,பேரூராட்சியின் செயல் அலுவலர் அமானுல்லா, இளநிலை உதவியாளர் சங்கர நாராயணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவையா துணை ஜனாதிபதியிடம் விருது பெற்றார். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao
புதுடெல்லி:
மத்திய அரசு சார்பில் உலக முதியோர் தின விழா நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் நடந்தது. விழாவில் 2017-2018-ம் ஆண்டில் முதியோருக்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவையாவும் விருது பெற்றார். இவர் மதுரை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தபோது முதியோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர் சந்த் கெலாட், இணை மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, கிருஷ்ணா பால் குர்ஜர், விஜய் சாம்பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VicePresident #VenkaiahNaidu #VeeraRaghavaRao