துப்புரவு பணியாளர்களுக்கு நல உதவி

கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
Published on

பல்லடம்:

முன்னாள் முதல்வர் கருணாநிதி 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் 2 வது வார்டு பகுதியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான செ.ராஜசேகரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவியாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் பல்லடம் நகர திமுக., செயலாளர் ராஜேந்திர குமார்,வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் குமார்,மற்றும் லாரி முருகசாமி, பரமசிவம், சிலம்பரசன், மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com