என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார். அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.
பாளையில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
- தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பாளையில் உள்ள கலைஞர் கூட்டமைப்பு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல தலை வர்கள் பிரான்சிஸ், கதீஜா இக்லாம் பாசில்லா, கவுன்சி லர்கள் பவுல்ராஜ், இந்திரா மணி, சின்னத்தாய், ஆமீனா, சுப்பு லெட்சுமி, பேச்சி யம்மாள் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள் டெங்கு தடுப்பு களப் பணியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






