என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி பயிற்சி- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி பயிற்சி- கலெக்டர் தகவல்

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    • கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணினி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று தரப்படும். மேற்படி பயிற்சி கும்பகோணம் மற்றும் பட்டுகோட்டையில் நடத்தப்பட உள்ளது.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் பட்டுக்கோட்டை அல்லது கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பட்டுகோட்டை மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணினி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×