என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance redressal meeting"

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச தையல் மெஷின், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தர விட்டார்.

    பெறப்பட்ட 195 மனுக்க ளில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

    எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தெரி வித்தார்.

    தொடர்ந்து ஆதிதி ராவிடர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கியதுடன், தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தில் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசு தாரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா 9 பயனாளிகளுக்கு வழங்கி னர்.

    இந்த கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
    • காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதாக புகார்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.கோட்டாட்சியர் பாத்திமா தலைமை தாங்கினார்.

    வங்கி கடன்

    இதில் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- மத்திய மாநில அரசு விவசாயிகளுக்கு கடன் தர ஒப்புதல் அளித்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரிகள் அலைக்கழிக்க செய்கின்றனர்.

    பெருவளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக குளத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை வருவாய் துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்கு விவசாய நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது. இது சம்பந்தமாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    குறை தீர்வு கூட்டத்திற்கு அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், நெமிலி தாசில்தார் சுமதி, நேர்முக உதவியாளர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, நெமிலி தோட்டக்கலை உதவி அலுவலர் சுமதி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது.
    • அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றாத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்,

    மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபக ரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவ ட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.

    இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 30-ந் தேதி நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 30-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் (தரைதளத்தில்) மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமை ச்சாின் விரிவான மருத்துவ க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிறதுறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட ங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழ ங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18-வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகிய வற்றுடன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • டி.ஐ.ஜி, எஸ்.பி மனுக்களை பெற்றனர்
    • ஆலோசனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைவு முகாம் இன்று காலை நடைபெற்றது.முகாமிற்கு வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர்.

    பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

    குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒருவர் மனு அளித்தார். அந்த மனுவில் தனது சொந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க அருகில் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், அண்ணா கலையரங்கம் அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்புகளை லாரியில் கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கரும்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பலர் பாதிப்படைகின்றனர்.எனவே சற்று தொலைவில் பெரியார் பூங்கா அருகே அவர்கள் கரும்பு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களையும், சம்பந்தப்பட்ட கரும்பு வியாபாரிகளும் அழைத்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற வருகிற 31-ந் தேதி ( செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற வருகிற 31-ந் தேதி ( செவ்வாய்கிழமை) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
    • இருக்கன் துறை என்ற ஒரே கிராமத்தில் 28 கல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.

    67 சதவீதம் மழை குறைவு

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமார், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது ஷபீர் ஆலம் மற்றும் வேளாண்துறை இணை இயக்குனரகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 1,096 குளங்கள் உள்ளது. இதில் 730 குளங்கள் வறட்சியாக காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளையும் சேர்த்து 39.9 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 67 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பயிர்கள் பாதிப்பு

    பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெரும்படையார் பேசும் போது, போதிய அளவு நீர் இல்லாததால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்வாய் நீர்வரத்தும் இந்த ஆண்டு இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குறைவாக தண்ணீர் உள்ள பகுதிகளில் பயிர் நன்றாக வளராமல் திரட்சியாக காணப்படுகிறது.

    விவசாயிகள் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே பயிரிட்டுள்ளனர். எனவே நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசிற்கு பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய கலெக்டர் விஷ்ணு வறட்சி மாவட்டமாக அறிவிக்க பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். இதுகுறித்து ஆய்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ராதாபுரம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பேசுகையில், ராதாபுரம் அருகே உள்ள இருக்கன் துறை என்ற ஒரே கிராமத்தில் 28 கல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தில் இத்தனை கல்குவாரிகள் அமைக்க அரசு எப்படி அனுமதி வழங்கியது என்று தெரியவில்லை.

    விதிமுறைகளை மீறி இந்த குவாரிகள் செயல்பட்டு வருகிறது. வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் வீடுகள் இடிந்து விழும் நிலை காணப்படுகிறது.விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் குவாரிகள் செயல்படுவதால் அந்த கிராமமே மண்ணில் புதையும் நிலை உள்ளது.

    கல் ஏற்றி அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. எனவே இருக்கன்துறை கிராமத்திற்கு நேரில் வந்து கல் குவாரிகளை ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரிகளை மூட வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த கலெக்டர் விஷ்ணு விரைவில் சப்-கலெக்டர் மூலம் இருக்கன்துறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கொடுத்து வருகின்றனர்.

    நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திருப்பூர் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர். அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 638 மனுக்கள் பெறப்பட்டன.

    இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுத்தினாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • விருதுநகரில் வருகிற 24-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க வேண்டும்.
    • விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ( வெள்ளிக்கிழமை) காவை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியரக பெருத்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க வேண்டும்.

    எனவே, விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×