search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabilities"

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதுவை அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதுவை அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி களுக்காக வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறந்த அரசு துறை, தன்னாட்சி அமைப்பு, உள்ளாட்சி துறை, பொதுத்துறை நிறுவனங்கள் விருது, மாற்றுத்திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறந்த தனியார் நிறுவனங்கள் விருது, சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அரசு துறை, தன்னாட்சி அமைப்பு உள்ளாட்சி துறை, பொதுத்துறை நிறுவனங்கள் விருது, சிறப்பாக பணிபுரி யும் தனியார் நிறுவன மாற்றுத்திறனாளி ஊழியர்கள் விருது, சிறப்பாக சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி விருது வழங்கப்படும்.

    ஒவ்வொரு விருதுக்கும் சான்றிதழ் வழங்குவது மட்டுமில்லாமல் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். நடப்பு ஆண்டு மாநில விருதுகளுக்காக தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அல்லது நிறுவனங்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஆதார ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு ஏற்கப்படமாட்டாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் வாகன அங்காடி பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் வழங்கப்படுகிறது. இந் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாற்றுத்திறனா ளிகள் விண்ணப்பிக்கலாம்.

    மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க விண்ண ப்பிக்கும் உறுப்பினர்கள் சுய உதவிக்குழு உறுப்பி னராக இருக்க வேண்டும். முன்னு ரிமை அடிப்ப டையில் மகளிர் மாற்றுத்தி றனாளி கள், கணவரால் கைவிடப் பட்ட மாற்றுத்தி றனாளிகள், மாற்றுத்தி றனாளி விதவைகள், முதிர் கன்னி மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆண் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மட்டுமே வாகன விற்பனை அங்காடி வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சிறப்பு சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்கள் சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓரு ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும். வாகன அங்காடிக்கு வாடகை NRLM இணையதளத்தில் பதிந்து செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தி டமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை. வாகனத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பழுதை பயனாளிகளே மேற்கொள்ள வேண்டும். வாகனத்திற்கு பயனாளியே மின்னேற்றம் (Electric Charge) செய்து பயன்படுத்த வேண்டும். வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடம் வாகனத்தை எவ்வித பழுதுமின்றி ஒப்படைக்க வேண்டும்.

    விதிமுறைகளை மீறி செயல்படும் உறுப்பினரிடம் இருந்து வாகன அங்காடி திரும்ப பெறப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி திரும்ப பெறப்பட்டு தகுதியான வேறு பயனாளிக்கு வழங்கப்படும்.

    தகுதியுள்ள மாற்றுத்தி றனாளிகள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம் வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) நகல் களையும் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 19-ந் தேதி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பரமக்குடி உதவி ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள விருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது.
    • அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

    வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 26-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றாத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும்,

    மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
    • நிறுத்தப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, மாவட்டத் தலைவர் தவமணி, பொருளாளர் சின்ன கருப்பன், ஒன்றிய பொருளாளர் வீரையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசாணை எண் 41-க்கு எதிராக மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை நிறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுத்தப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளிடம் சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
    • கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் சார்பாக தாலுகா 3-வது மாநாடு நடந்தது. மயில்சாமி தலைமை தாங்கினார். மதன்குமார் முன்னிலை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாடசாமி, அழகர்சாமி, தங்கபாண்டி, முனியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், மாதத்திற்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணிநேர சட்ட கூலி ரூ.281-ஐ அனைத்து ஊராட்சிகளில் அமல்படுத்த வேண்டும்.

    கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பண்ருட்டி தலைவர் தனுஷ் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் விருத்தாச்சலம் தலைவர் அமரேசன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, நிர்வாகிகள் பாலமுருகன், கொளஞ்சிநாதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தலைவர் சதீஸ்பாபு தலைமையில் நடைபெற்றது. பகீரத நாச்சியப்பன் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி, வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    காலச் சூழலில் நீங்கள் எந்த நிலையிலும் உயரலாம். யாருக்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் உண்டு. நமக்கு நல்ல பழக்கவழக்கம், தன்னம்பிக்கை, நாணயம், நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம். மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

    நமது மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே மனையிடம் இருந்தால் அவர்களுக்கு வீடு கட்ட அரசு உதவி செய்யும். மாற்றுதிறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்ந்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் சரவணகுமார், பேராசிரியர் ஆனந்தசெல்வம், டாக்டர் தீபக், மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பிரபாகரன், பொருளாளர் லட்சுமணன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிகுமார், மோகன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மாற்றுத்திறனாளிகளை மேற்கோள்காட்டி அநாகரிகமாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MinisterRajendraBalaji
    அடையாறு:

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கு நேற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சுசீலா பொன்னுசாமி, சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 16-ந் தேதி நாகர்கோவிலில் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை, அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து” என மாற்றுத்திறனாளிகளை மேற்கோளிட்டு அநாகரிகமாக பேசினார்.

    இது என்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனதை காயப்படுத்தி, மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. #MinisterRajendraBalaji
    நாகையில் மாற்றுத் திறனாளிகள் 14 பேருக்கு தலா ரூ.4170 வீதம் ரூ.58,380 மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் 12 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 194 என மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் 1 பயனாளிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரணத் தொகை காசோலை, சமூகப்பாதுகாப்புத் திட்டம் சார்பில் 1 பயனாளிக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பேருக்கு தலா ரூ.4170 வீதம் ரூ.58,380 மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விக்டர் மரிய ஜோசப், உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குரூப்-4 ல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.

    தற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #TNPSC
    மாற்று திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் சலுகை கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    பழனி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு பேருந்து பணிமனை முன்பாக தமிழக அரசின் 2010-ம் ஆண்டு உத்தரவை நிறைவேற்ற கோரி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது அனைத்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள 4-ல் 1 பங்கு கட்டணத்தில் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இச்சலுகை இடைநில்லா பேருந்துகளுக்கும் பொருந்தும். உள்ளூர் மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் இக்கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சுமை கட்டணம் வசூலிக்க கூடாது.

    குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற வேண்டும் என்று தெரிவிக்காமல் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் பயணம் செய்ய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதிக்க வேண்டும்.

    கட்டண சலுகையில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளிடம் கண்ணியாமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×