search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 19-ந் தேதி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பரமக்குடி உதவி ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள விருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×