மாற்றுத்திறனாளிகள் மாநாடு

முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது. கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் மாநாடு
Published on

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் சார்பாக தாலுகா 3-வது மாநாடு நடந்தது. மயில்சாமி தலைமை தாங்கினார். மதன்குமார் முன்னிலை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாடசாமி, அழகர்சாமி, தங்கபாண்டி, முனியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், மாதத்திற்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணிநேர சட்ட கூலி ரூ.281-ஐ அனைத்து ஊராட்சிகளில் அமல்படுத்த வேண்டும்.

கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com