என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.
- நிறுத்தப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, மாவட்டத் தலைவர் தவமணி, பொருளாளர் சின்ன கருப்பன், ஒன்றிய பொருளாளர் வீரையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசாணை எண் 41-க்கு எதிராக மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை நிறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுத்தப்பட்ட உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளிடம் சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Next Story






