மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச தையல் மெஷின், வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து விரைந்து நடவ டிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தர விட்டார்.

பெறப்பட்ட 195 மனுக்க ளில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தெரி வித்தார்.

தொடர்ந்து ஆதிதி ராவிடர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கியதுடன், தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தில் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசு தாரர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா 9 பயனாளிகளுக்கு வழங்கி னர்.

இந்த கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com