என் மலர்
நீங்கள் தேடியது "petitions"
- பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
- இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுத்தனா்.
காங்கயம் :
காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில் நத்தக்காடையூா் உள்வட்டத்தைச் சோ்ந்த மறவபாளையம், கீரனூா், பாப்பினி, நான்கு சாலை, பரஞ்சோ்வழி, மருதுறை, நத்தக்காடையூா், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிகழ்வில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 110 போ் மனு கொடுத்தனா். இதில் பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.மோகனன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோபால் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
வெள்ளகோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த முத்தூா், சின்னமுத்தூா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகளுக்கு இன்று வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகாக்களிலும் கடந்த 16-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் பசும்பலூர் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட திருவாளந்துறை, அகரம், தொண்டபாடி, நெய்குப்பை மற்றும் அனுக்கூர் ஆகிய கிராமங்களிலும், குன்னம் தாலுகாவில் கீழப்புலியூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட சித்தளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு) மற்றும் ஒதியம் ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் தாலுகாவில் கொளக்காநத்தம் மற்றும் கூத்தூர் குறுவட்ட பகுதிகளுக்குட்பட்ட கொளத்தூர் (கிழக்கு), தொண்டபாடி, மேலமாத்தூர், அழகிரிபாளையம் மற்றும் ஆதனூர் (வடக்கு) ஆகிய கிராமங்களிலும் நடைபெற்றது.
வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 192 மனுக்கள் பெறப்பட்டன. குன்னம் தாலுகாவில் 76 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 26 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வேப்பந்தட்டை தாலுகாவில் 39 மனுக்களும், குன்னம் தாலுகாவில் 41 மனுக்களும், ஆலத்தூர் தாலுகாவில் 24 மனுக்களும் என மொத்தம் 104 மனுக்கள் ஏற்கப்பட்டன. 190 மனுக்களுக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பொதுமக்களிடம் இருந்து 621 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
- சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தாலுகாவில் கடந்த 9-ந் தேதி ஜமாபந்தி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கோட்டைக் குமார் தலைமை தாங்கினார்.
நேற்று நடந்த ஜமாபந்தியில் பன்னிகுண்டு, கொக்குளம், திருமங்கலம் டவுன் உள்ளிட்ட 3 பிர்காக்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.
இந்த ஜமாபந்தியில் மொத்தம் 621 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைபட்டா, இலவச வீட்டு பட்டா, முழு புலம், சப் டிவிஷன் என 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை ஆய்வு குழு அலுவலர் கோட்டைக்குமார் வழங்கினார்.
இதில் திருமங்கலம் தாசில்தார் சிவராமன், சர்வேயர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- வருகிற 19-ந்தேதி நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
- மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க நாள் அன்று பெரம்பூர் சரகத்திற்கும், வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வல்லம் சரகத்திற்கும், 17-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை சரகத்திற்கும், 18-ந்தேதி (வியாழக்கிழமை) ராமாபுரம் சரகத்திற்கும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
மொத்தம் 5 நாட்கள் நடைபெறும்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருவாய் தீர்பாய நாட்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இங்கு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்புகள் அடங்கிய விளம்பர பதா கையில் அமைக்க ப்பட்டிருந்தது.தனை பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்திமக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட தொகுப்புகளின் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து துறைகளின் முக்கியமான அறிவிப்புகளில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த தொகுப்பும், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அறிவிப்புகள், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பு, கோயில் நிலங்கள் மீட்பு, மகளிருக்கான இலவச பஸ் பயணம், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அறிவிப்பு, விவசாயி களுக்கான அறிவிப்பு, சாலை போக்குவரத்துக்கான அறிவிப்பு, பள்ளி கல்வி துறை அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியி டப்பட்ட அறிவிப்புகளின் புகைப்பட தொகுப்புகள் விளம்பர பதாகையில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.
பார்வையிட்ட அமைச்சர் பொது மக்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சியை சிறப்பாக அமைத்திருப்பதாக பாராட்டினார். இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும் பார்வை யிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சிவக்குமார், அனைத்து ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
- நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், திட்ட இயக்குனர் மணி, கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்கள் 348 மனுக்களை அளித்தனர். அதனை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் கருணா நிதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாக ராஜன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வ கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், அய்யம்மாள் ராஜேந்திரன், கோவிந்தம் மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகாவீர மணி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூரில் நடந்த முகாமில் மொத்தம் 283 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
- போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களிடம் இருந்து குறைகளை மனுக்களாக பெற்றனர்.
- மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைகள் தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
தஞ்சை சரக காவல்துறை தலைவர் ஜெய்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஜவகர் வரவேற்றார்.
முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை மனுக்களாக பெற்றனர்.
அந்த முகாமிலேயே மனுக்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
புகார் மனு கொடுத்த வந்தவர்களிடம் குறைகளை நேரடியாக விசாரணை செய்து அந்த முகாமிலேயே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் உரிய நேரங்களில் விசாரணை செய்ய பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் குறைகள் தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமு, தங்கவேல், டி.எஸ்.பி. சஞ்சீவ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பு தொடர்ந்து சிறந்த முறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசுகளும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசு தொகைக்காண காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரதீப் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்சபீர் பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தீர்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து மனுதாரர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.