search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievances"

    • ராமநாதபுரத்தில் கிராம மக்களை சந்தித்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
    • இப்பகுதிக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணியமர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சி களில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர், பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

    மேலும் மழைக்காலமாக உள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் களில் தண்ணீர் தேங்காமலும் தங்கள் பகுதிகளில் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

    மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய இந்த ஊராட்சிகளில் அவ்வப்போது அரசு துறை அலுவலர்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும். மேலும் இப்பகு திக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணிய மர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கடலாடி வட்டாட்சியர்ரெங்கராஜ், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உச்சி நத்தம் ஊராட்சி மன்றத்த லைவர் பாமா ருக்மணி, சேதுராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா ஆகியோர் உடனிருந்தனர்.

    • கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார்.
    • மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசிரவி துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி காந்த ரூபி வரவேற்றார்.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது,

    இக்கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆணை , கிராமத்தி்ல் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்கப்பட்டு ,பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு கலெக்டர் பேசினார் 

    இதில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜோதி , மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் பொன்னம்பலம், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, தாசில்தார் யுவராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி ,முபாரக் அலி பேக், வேளாண்மை உதவி இயக்குனர் கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், துணைத் தலைவர் கலா, ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமராவ், கஸ்தூரி பாண்டியன், கண்காணிப்பு குழு எத்திராசன், கல்வி மேலாண்மை குழு ராஜசேகர்,கணேசன் புகழேந்தி ,வேல்முருகன், மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மேல்மலையனூர்

    மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் தலைமைக தாங்கி பேசினார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணக்குமார் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன்,செல்வி ராம சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை நகராட்சியில் குறைகளை தீர்க்க அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் புகார் கூறப்பட்டுள்ளது.
    • கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், முனியசாமி ஆகியோர் பேசினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் மாரியப்பன் சென்னடி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மானாமதுரை வாரச் சந்தை, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்ட ணம் வசூலிக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள மிதிவண்டி நிறுத்தத்தில் கட்டணம் வசூலிக் கும் உரிமை உள்ளிட்டவற்றுக்கு நடத்தப்பட்ட பொது ஏலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மானாமதுரையில் குடி. நீர்த் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த கூடுதல் பணியா ளர்களை நியமிக்க ஒப்புதல் அளிப்பது, கீழப்பசலை, மாங்குளம், சூரக்குளம் பில்லறுத்தான், கல் குறிச்சி, செய்களத்தூர், கீழமேல் குடி ஆகிய ஊராட்சிகளில் நகர் பகுதியுடன் ஒட்டியுள்ள தேர்வு செய்யப்பட்ட விரிவாக்கப் பகுதிகளை மானாமதுரை நகராட்சி நிர்வாகத்துடன் இணைத்து அரசுக்கு கருத்துரு அனுப்பு வது உள்ளிட்ட 33 தீர்மானங்களுக்கு உறுப் பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கை களை முன் வைத்தனர். தி.மு.க . உறுப்பினர் மாரி கண்ணன் பேசுகையில், எனது வார்டில் இன்னும் புதிய தெரு விளக்குகளை பொருத்த வில்லை. நகராட்சி அலுவ லர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றார்.

    கவுன்சிலர்கள் தெய் வேந்திரன், முனியசாமி ஆகியோரும் பேசினர். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு ஆணையர் ரெங்கநா யகி பதிலளிக்கையில், தற்போது பணிபுரியும் அலுவலர்கள் நேரடியாக புதிதாக பணிக்கு வந்து உள்ளனர். அவர்களுக்கு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை எப்படி அனுகுவது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் புதிய வீடு கட்ட வரைபட அனுமதி, சொத்து வரி, பெயர் மாற்றத்துக்கான பணிகளை இன்னும் ஒரு மாத்துக்குள் பணிகளை முடிக்கத் தேவையான நட வடிகைகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். தலைவர் மாரிப்பன் கென்னடி பேசுகையில், தற்போது டெங்கு பரவி வருவதால் அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளை விரைவாகசெய்ய வேண்டும் என்றார்.

    • பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். அப்போது அரசின் திட்டங்கள் பெற்று கிடைக்கிறதா? என கேட்ட றிந்தார். மேலும் பல்வேறு துறையின் மூலம் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப் பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு அவர்களிடம் கலெக்டர் கேண்டு கொண்டார்.

    பின்னர் கிராமத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா?, ரேசன் கடைகளில் சரியாக பொருட்கள் வழங்கப்படு கிறதா? குடிநீர் விநியோகம் சரியாக இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

    கோரிக்கைகள் நிறை வேறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் தகவல் கொடுக்குமாறும், தொடர்புடைய அலுவ லர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விடப்படும் என்றும் அவர்களிடம் கலெக்டர் உறுதியளித்தார். மேலும் கிராம வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் கூறினார்.

    • மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
    • திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் தேனி மாவட்டத்தில் முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய பேரூராட்சியாக உள்ளது. பேரூராட்சி க்குட்பட்ட பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர்.

    இந்நிலையில் பல்வேறு தெருக்கள் மற்றும் குடியி ருப்பு பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளிகண்ணன் ராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    சாலை வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், அனைத்து அடிப்படை வசதிககள் மற்றும் பிற இடங்களில் சாலைகளை சீரமைத்து தருவதாகவும் உறுதியளித்த னர். மேலும் வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து பேரூராட்சி தூய்மை பணி யாளர் வாகனம் வரும்போது வழங்கும்படி பொது மக்களிடம் அறிவுறுத்தினர்.

    திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வருகிற 8-ந்தேதி( சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு செய்ய உள்ளாா்கள்.

    அவிநாசி வட்டத்தில் பழங்கரை, தாராபுரம் வட்டத்தில் நஞ்சத்தலையூா், காங்கயம் வட்டத்தில் வடுகபாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் கடத்தூா், பல்லடம் வட்டத்தில் அனுப்பட்டி, திருப்பூா் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல், திருப்பூா் தெற்கு வட்டத்தில் விஜயாபுரம், உடுமலை வட்டத்தில் சிந்திலுப்பு, ஊத்துக்குளி வட்டத்தில் மொரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.
    • மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 52 வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனை தற்போது ஓரளவு சீர்செய்யப்பட்டிருப்பதாகவும் அதே போல் சாக்கடையை அடிக்கடி தூர்வார வேண்டும் எனவும் தார் சாலை தரமற்றதாக போடப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

    உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்த எம்.எல்.ஏ., செல்வராஜ் பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். மேலும் முதியோர் உதவித் தொகை , மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என ஏராளமான பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பணிவுடன் கேட்டு அறிந்த எம்.எல்.ஏ., உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு சென்று அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கி ழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொ றியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை யில் நடைபெறுகிறது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரச ன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், தஞ்சை வடக்கு, திருக்கா னூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகையூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
    • கலெக்டர் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக விழுப்பு ரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்தார். அருளவாடி கிராமத்தில் 28 லட்சத்து 18 ஆயிரம் செலவில் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, மற்றும் ரூபாய் 5 லட்சத்து 51 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கும் பணி, ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் நூலகம் பழுது நீக்கம் பணி ரூ. 3 லட்சத்து 52 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் மினி பவர் பம்ப் கட்டும் பணி ஆகியவ ற்றையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிட த்தையும், வீரசோழபுரம் கிராமத்தில் ஊராட்சி ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் செலவில் நடை பெற்று வரும் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணியை யும் பார்வையிட்டதுடன் பணியை தரமாக வும் விரைவாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டார்.

    முகையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு திடீரென சென்ற மாவட்ட கலெக்டர் பழனி அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளி களிடம் குறைகள் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர்களிடமும் ஏதேனும் குறைகள் உள்ளதா என கலெக்டர் பழனி கேட்டார். அப்போது மருத்துவம னைக்கு சிகிச்சை க்கு வரும் நோயாளி களுக்கு கூடுதலாக ஒரு கழிவறை வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் பழனி அருகில் இருந்த முகையூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்களிடம் நோயாளிகளில் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவி ட்டார். ஆய்வின்போது முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் ,நாராயணன், கண்டாச்சி புரம் தாசில்தார் கற்பகம், உதவி பொறியாளர்கள் நாகராஜ் மற்றும் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி தீர்வு பெறலாம்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.கூட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி தீர்வு பெறலாம்.

    இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை செயற்பொறியாளர் மாறன் தெரிவித்துள்ளார்.

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோர்ட் சாலையில் உள்ள செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.

    எனவே தஞ்சை நகர கோட்டத்திற்குட்பட்ட தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகா லனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங்யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பா ளையம் சாலை, சிங்கபெரு மாள்கோவில், ஜெபமா லைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்து க்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
    • 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வாசலில் தூய்மை பணியா ளர்களின் குடியிருப்புகளை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒவ்வொரு குடியிருப்பாக சென்று தூய்மை பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.

    பின்னர் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தூய்மை பணியாளர்க ளுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது போல் மாநில அளவிலும் ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற ஆணையம் அமைக்க வேண்டும்.

    அவ்வாறு அமைக்கப்ப ட்டால் அனைத்து மாவட்டங்களும் சென்று ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும். நாங்கள் செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.

    அதேநேரம் பணி நிரந்தரம் செய்யப்ப டுவதில் சில பிரச்சனைகள் இருப்பதையும் உணர்ந்துள்ளோம். கர்நாடக மாநிலத்தில் நேரடி ஊதியம் கொடுக்கும் முறை உள்ளது.

    அதாவது நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் இருந்தாலும் ஊதியத்தை நகராட்சியோ, மாநகராட்சியோ நேரடியாக அளிக்கும். இதனால் சரியான ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்கும். பிஎஃப், இ.எஸ்.ஐ சரியான வகையில் இருக்கும். எனவே தமிழக அரசு இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டும்.

    விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது . கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் வேதனை அளிக்கிறது.

    இதனை தடுக்க தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு எந்திரங்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எந்திரம் உள்ளே நுழையா முடியாத அளவில் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களை இறக்கி பணியை செய்ய சொல்ல வேண்டும். அதுவும் கோர்ட் அறிவுரைகள் படி தொழிலா ளர்களின் உடல்நலம் பரிசோதித்து போதிய பாதுகாப்பு உபகரண ங்களுடன் தொட்டிக்குள் இறக்க வேண்டும். மேலே வந்த பிறகும் தொழிலாளர்களை உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.

    இது குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் ஜெய்சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×