search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் ஆய்வு
    X

    இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் ஆய்வு

    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை.
    • கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமத்தில் உள்ள முத்தரையர் தெருவுக்கு அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர்கள் சொந்த மனை பட்டா இல்லாமல் 60 குடும்பங்கள் இருந்து வருவதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் வருவாய் துறை அதிகாரிகளிடம் 15 நாட்களில் 60 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    வேட்டங்குடி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள–வர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா என்றும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் இருவகொல்லை கிராமத்தில் தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தங்கி உள்ளார்கள்.வேட்டங்குடி, நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

    தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், வழிகாட்டுதல் முறையை பின்பற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் வசதி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஆர்டிஓ அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் சரவணன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருண்மொழி, பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், செல்லசேது ரவிக்குமார், ஒன்றியகுழு உறுப்பினர் அங்குதன், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், விவசாய சங்க தலைவர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×