search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவில் தூய்மை பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும்
    X

    தஞ்சையில் தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டு அறிந்த தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன். அருகில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் உள்ளனர்.

    மாநில அளவில் தூய்மை பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும்

    • தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.
    • 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வாசலில் தூய்மை பணியா ளர்களின் குடியிருப்புகளை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒவ்வொரு குடியிருப்பாக சென்று தூய்மை பணியாளர்களின் நிறை, குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவரிடம் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்கள் அளித்தனர்.

    பின்னர் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தூய்மை பணியாளர்க ளுக்கு தேசிய அளவில் ஆணையம் உள்ளது போல் மாநில அளவிலும் ஆணையம் அமைக்கபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 11 மாநிலங்களில் மாநில அளவில் ஆணையம் உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற ஆணையம் அமைக்க வேண்டும்.

    அவ்வாறு அமைக்கப்ப ட்டால் அனைத்து மாவட்டங்களும் சென்று ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும். நாங்கள் செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.

    அதேநேரம் பணி நிரந்தரம் செய்யப்ப டுவதில் சில பிரச்சனைகள் இருப்பதையும் உணர்ந்துள்ளோம். கர்நாடக மாநிலத்தில் நேரடி ஊதியம் கொடுக்கும் முறை உள்ளது.

    அதாவது நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் இருந்தாலும் ஊதியத்தை நகராட்சியோ, மாநகராட்சியோ நேரடியாக அளிக்கும். இதனால் சரியான ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்கும். பிஎஃப், இ.எஸ்.ஐ சரியான வகையில் இருக்கும். எனவே தமிழக அரசு இதுபோன்ற முறையை பின்பற்ற வேண்டும்.

    விஷவாயு தாக்கி இறக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது . கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் விஷவாயு தாக்கி 225 பேர் இறந்துள்ளனர் என்ற தகவல் வேதனை அளிக்கிறது.

    இதனை தடுக்க தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு எந்திரங்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எந்திரம் உள்ளே நுழையா முடியாத அளவில் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களை இறக்கி பணியை செய்ய சொல்ல வேண்டும். அதுவும் கோர்ட் அறிவுரைகள் படி தொழிலா ளர்களின் உடல்நலம் பரிசோதித்து போதிய பாதுகாப்பு உபகரண ங்களுடன் தொட்டிக்குள் இறக்க வேண்டும். மேலே வந்த பிறகும் தொழிலாளர்களை உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.

    இது குறித்து போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், கவுன்சிலர் ஜெய்சதீஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×