search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleaning staff"

    • தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.
    • போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங்பவுடர் போன்ற தூய்மை பொருட்களால் அடிக்கடி தூய்மை பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். எனினும் தொடர்ச்சியாக அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபடும் தங்களை இதுவரை ஆஸ்பத்திரி நிர்வாகம், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தனர். போராட்டம் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
    • மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியில் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகரில் தேங்கி இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என பலதரப்பட்ட குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    தொடர் மழையிலும் பணி செய்த தூய்மை பணியாளர்களை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் அந்த வார்டு குடியிருப்போர் நல சங்கத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் 20 பேரை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலர் நீலகண்டன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் மழை கோட் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவம், குடியிருப்போர் சங்கத்தினர், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர்.
    • தஞ்சை அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தரஅசைவ உணவகத்துக்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த ஞாயிறு அன்று கோலாகலாமாக கொண்டப்பட்டது.

    தஞ்சாவூரில் போடப்பட்டி ருந்த தற்காலிக கடைகள் மூலமாகவும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும் ஆங்காங்கே தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மொத்தத்தில் தஞ்சாவூர் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் குப்பைகள் தேங்கியதை தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர் .

    இந்நிலையில் போர்கால நடவடிக்கையாக விரைந்து குப்பைகளை அகற்றி நகரை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

    இதன்படி சுமார் 100 தூய்மை பணியாளர்கள் அவர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட தனி வாகனத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் உயர்தர அசைவ உணவகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவர்களுக்கு தலைவாழையிலையில் மட்டன், முட்டையுடன் ஆவிபறக்க பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது .

    தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் வகையிலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து பரிமாறி மரியாதை செய்ததாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர் .

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கு உயர்தர அசைவ உணவகத்தில் அதுவும் குளிரூட்டப்பட்ட அறையில் சுடச்சுட ஆவி பறக்க அசைவ விருந்து பரிமாறப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது.

    தங்களது பிள்ளைகளை கூட இது போன்ற ஹோட்ட லுக்கு அழைத்து வரவில்லை.

    இந்த ஓட்டலை நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.

    ஆனால் குப்பை வாரும் எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் உணவு அளித்து நல்ல மரியாதை அளித்த ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்துக்கு நன்றி என்றனர்.

    முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது .

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .

    • தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
    • தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சா கமாக கொண்டாடப்பட்டது.

    மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

    தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.

    அதனை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை மாநகராட்சியில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சியை பொறுத்தவரை வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 100 முதல் 120 டன் குப்பை வரும். 51 வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு தரம் பிரிக்கப்படும். கடந்த சில நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது.

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தது மற்றும் துணிமணிகள் விற்பனை பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வழக்கமாக சேகரமாகும் குப்பைகள் என தஞ்சை மாநகராட்சியில் மட்டும் இன்று 120 டன் குப்பைகள் குவிந்து இருந்தன.

    இதில் பட்டாசு கழிவுகள் மட்டும் சுமார் 20 டன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் 600 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் பட்டாசுக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு மேற்கொள்ள ப்பட்டது.

    கழிவுகளை கொண்டு செல்வதற்காக 40 கனரக வாகனங்கள் பயன்ப டுத்தப்பட்டன.

    • சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    சாமளாபுரம்:

    கலைஞரின் நூற்றாண்டு விழா - தீபாவளி பண்டிகையையொட்டி சாமளாபுரம் தி.மு.க. பேரூர் செயலாளரும், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 5-வது வார்டு கவுன்சிலருமான பி.வேலுச்சாமியின் ஏற்பாட்டில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை - இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி ெதாடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11-வது வார்டு கவுன்சிலர் வினோஜ்தயாளன், 2-வது வார்டு பட்டீஸ்வரன், 10-வது வார்டு கனகசபாபதி, 4-வது வார்டு பிரதிநிதி கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. 

    • பேரணியை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தொடங்கி வைத்தார்.
    • முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்வாணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.

    பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது. அப்போது சுகாதாரத்தை பேணி காப்போம், தூய்மையான ஊராட்சிகளை பாதுகாப்போம். சுத்தமான குடிநீர், குப்பை இல்லா ஊராட்சி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட சேவைகளை துரிதமாக செயல்ப டுத்துவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காளி பாபு, மாநிலத் துணைச் செயலாளர் கொக்கூர் வீரமணி துணைத் தலைவர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்திரா, ராஜசேகர், கலியபெருமாள், செல்வராஜ் , மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றிய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
    • தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான நலவாரியப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் பேசியதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலி எவ்வளவு வழங்கப்படுகிறது. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் ரூ.10, ரூ.20 வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்துக்கு காரணம் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனா். இது மிகவும் தவறானதாகும்.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக ஊதியம் வழங்கக்கூடாது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தில் சோ்த்து அடையாள அட்டையின் எண்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் காப்பீடு செய்ய வேண்டும். கா்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், திரிபுரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் மாநில தூய்மைப் பணியாளா் ஆணையம் உள்ளது.

    இந்த மாநிலங்களில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, தமிழகத்திலும் மாநில தூய்மை பணியாளா் ஆணையத்தை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.

    ஒப்பந்த முறையால் சரிவர ஊதியம் வழங்குவதில்லை.பி.எப்., இ.எஸ்.ஐ.கட்டுவது, காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. ஆகவே ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யும்போது அவா்களது வாழ்வாதாரம் உயரும். அனைத்து தொழிலாளா்களையும் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று அரசு நினைத்தால் கா்நாடகம், ஆந்திரத்தில் உள்ளது போன்று அரசு சாா்பில் நேரடியாக அவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். உதாரணமாக திருப்பூா் மாநகராட்சியே ஒப்பந்த தொழிலாளா்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த முறை இல்லாவிட்டால் தொழிலாளா்களுக்கு சரியான முறையில் ஊதியம் சென்றடைவதுடன், தூய்மைப் பணியாளா்க ளுக்கான பிரச்னைகளும் தீரும். ஆகவே, தமிழக அரசு இத்தகைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றாா்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் லட்சுமணன், மாநகராட்சி உதவி ஆணையா்கள், நகராட்சி ஆணையா்கள், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, பேரூராட்சி செயல் அலுவலா்கள், மாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி, பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் குறித்தும்,கழிவுநீர் குழாய் பராமரிப்பு, பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.

    தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.

    இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

    • 1000 பேர் பங்கேற்பு
    • பணிகள் பாதிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களிலும் 1200 பெண் பணியாளர்களும் 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணியா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

    இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்காமல் பழையபடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் நேற்று முன்தினம் வரை அவகாசம் கேட்டனனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    இதனால் ஒப்பந்த பணியாளர்கள் பகுஜன் சமாஜ் ஒப்பந்த பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் இன்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ பிஎப் அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    இ.எஸ்.ஐ.பி.எப். தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூலியை உயர்த்து வழங்க விட்டால் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.
    • பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா்

    அவிநாசி:

    அவிநாசியில் பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி நடைபெற்றது.பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி தலைமை வகித்தாா்.இதில் அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா். தூய்மைப்பணியாளா்களின் விவரங்களை சேகரிப்பது, முக்கிய தூய்மைப் பணியாளா்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அவிநாசி, குன்னத்தூா் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சிகளின் பரப்புரையாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் பயிற்சி பெற்றனா்.

    • தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 714 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 1 நபருக்கு தூய்மை பணியின் போது ஒரு கை பாதிப்படைந்த நிலையில் நலவாரியத்தின்கீழ் நிவாரண நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் 8 தூய்மைபணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஆணைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்டஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித்குமார், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்க உபதலைவர் கனிமொழி பத்மநாபன், தமிழ்நாடு தூய்மைபணியாளர் நலவாரிய உறுப்பினர் மோகன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×