மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி-சேலை

மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார்.தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.
தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கிய காட்சி. 
தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கிய காட்சி. 
Published on

மங்கலம்:

மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மங்கலம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவப்படுத்தும் வகையாக இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காஜா ஹுசைன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹாநசீர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி ,சேலைளை மனிதநேய தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.நிஷாத் அகமத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சாதிக், மனித நேய தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, ஒன்றிய பொருளாளர் சிக்கந்தர் பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ஹக்கீம், ஒன்றிய துணை செயலாளர் சதாம் உசேன், மங்கலம் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் , பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கலத்தில் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com