search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
    X

    கோப்புபடம். 

    தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

    • டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    திருப்பூர்:

    நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில் தூய்மை பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் பேசியதாவது:-

    அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.

    இதன் நோக்கம் நாட்டின் கடைகோடி மக்களுக்கு அரசின் நிா்வாகத்தை கொண்டு செல்லும் விதமாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்தல் மற்றும் இணையதளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தீா்வு காணுதல், நல்ல நிா்வாகம் நடைபெற நடைமுறைகளை செயல்படுத்த நாட்டின் குடிமக்களை மையப்படுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பதே நமது நோக்கம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

    முன்னதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளை 100 பணியாளா்களுக்கு வழங்கினா்.இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×