search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tender"

    • தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
    • க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.

    சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

    இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். 

    • ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    • 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கற்பித்தல் முறையில் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியக்கப்படுகிறார்.

    இண்டர்நெட் வசதியுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

    இதைப் போல 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது.

    திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும்.

    இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும் திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம்.

    அந்த அடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வருகிற கல்வியாண்டில் செயல்படுத்த டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தொடக்க கல்வித் துறை யின் தரத்தை உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வருகிற கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    • சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
    • தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.

    இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

    தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கோவையில் போக்குவரத்து அமைச்சர் பேசினார்
    • மகளிர் இலவச பயணத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை.

    கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சுங்கம் கிளையில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி மற்றும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் 3 மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது.

    இதில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணி ஆணைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    பணிக்காலத்தில் உயிரிழந்த, பணி ஓய்வு பெற்றவர்கள் என 5881 குடும்பங்களுக்கு ரூ.1582 கோடி 3 கட்டமாக ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகின்றது.

    முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வருகின்றார் .

    மகளிருக்கான கட்டணமில்லா பயணம் விடியல் பயணம் என முதல்வர் அறிவித்து இருக்கின்றார். மகளிர் பயணத்திற்காக ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தொகை ஒதுக்கீடு செய்து இருப்பதால்தான் போக்குவரத்து துறை சிரமம் இல்லாமல் செயல் படுகின்றது. ஒரு புறம் மகளிர் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்படுவதுடன், இன்னொரு புறம் போக்குவரத்து துறை வளர்ச்சி பெறுகின்றது.

    தேர்தல் நேரத்தில் சொன்னவற்றை முதல்வர் செய்து வருகின்றார். பல மாநிலங்களில் போக்குவரத்து துறையில் சம்பளம் கொடுக்கப்படாத நிலை இருக்கின்றது.

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் பணியாளர்கள் ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறை இரு தினங்களில் தொடங்கப்பட இருக்கின்றது .

    கோவைக்கு கூடுதல் பஸ்கள் வேண்டும் என்ற கோரிக்கையினை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வைத்திருக்கின்றனர். இவை நிறைவேற்றபடும்.

    வேலைக்கு வரும் போது என்ன ஆர்வத்துடன் வருகின்றீர்களோ, அதே ஆர்வத்துடன் பணியாற்ற வேண்டும் .

    ஏழைகளுக்காக போக்குவரத்து துறை செயல்படுகின்றது என்பது இங்குதான். தமிழகத்தினை போல எல்லா கிராமத்திற்கும் போக்குவரத்து பிற மாநிலங்களில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்களுக்கான மகளிர் விடியல் பயணம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் விலையில்லா பேருந்தில் பயணம் செய்வது 40 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    முதல் 100 மின்சார பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு, சென்னையில் சோதனை ஒட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    புதிதாக 4 ஆயிரம் பஸ்கள் வர உள்ளது. சீக்கிரம் பிரச்சனைகள் தீர்வு அடையும். அரசின் மஞ்சள் நிற பேருந்துகளும், பள்ளி வாகனங்களுக்கும் வேறு வேறான மஞ்சள் நிறம் இருக்கும். இரண்டையும் வேறு வேறாக வித்தியாசப்படுத்தும் வகையில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்

    நிலக்கடலை காய் 41.76 1/2 குவிண்டால் எடை கொண்ட 120-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.67-க்கும், சராசரி விலையாக ரூ.78.04-க்கும் என ரூ 3 லட்சத்து 16ஆயிரத்து 855-க்கு விற்பனையானது.

    • கீழக்கரையில் டெண்டர் பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது.
    • டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கீழக்கரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் திற்கு அரசு திட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசு சார்பாக நியமிக்கப் பட்டுள்ளதை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்கிறோம்.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திட்ட பணிகளில் அதிக அளவு தேக்க நிலையில் இருக்கிறது டெண்டர் எடுத்த பணிகள் ஒப்பந்தக்காரர்கள் விரைந்து முடிப்பதில்லை யாரும் முறையான ஆய்வு செய்வதில்லை. பல இடங்களில் டெண்டர் எடுத்த பணிகள் குறைபாடு இருக்கிறது.

    கழிவுநீர் பைப் லைன் போட்ட இடங்களில் கழிவுநீர் வெளியே ஓடுகிறது.இதனால் மக்கள் வரி பணமும் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கு முன்பு என்னென்ன டெண்டர் எடுத்த பணிகள் எல்லாம் குறைபாடு இருக்கிறது என்பதை ஆராய்ந்து மீண்டும் அதை முறைப்படுத்தி ஒப்பந்தம் எடுத்தவர்களை சரி செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

    மேலும் தமிழக அரசு சார்பாக எந்த வித திட்டப் பணிகளும் கீழக்கரையில் அமல்படுத்தவில்லை. உதாரணமாக கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையை நம்பி உள்ளனர். ஆனால் அரசு சார்பில் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நிதி ஒதுக்கி கீழக்கரை மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும்.

    கீழக்கரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வேகமாக அமைக்க வேண்டும். கீழக்கரை கடற்கரையில் கழிவுநீர் சேராமல் தடுக்க சுத்திகரிப்பு திட்டம் அல்லது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சரியாக வருவதில்லை. அதனால் புதிய மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் முறையாக கிடைக்கச் செய்ய வேண்டும்.

    புதிதாக தண்ணீர் தொட்டிகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். எரியாத நிலையில் உள்ள மின்விளக்கு களை மாற்றி புதிதாக வாங்கப்பட்ட எல்.இ.டி.விளக்குகளை பொருத்த வேண்டும். திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
    • குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 5.13 1/2 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

    • கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து.
    • இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்து. இதில், விவசாயிகள் சுமார் 185 மூட்டை தேங்காய் பருப்புகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

    இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் 7 மூட்டை தேங்காய் பருப்புகள் கிலோ ஒன்று ரூ.108 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போது ஏலத்தில், முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7190 முதல் ரூ.8230 வரை விற்பனையானது.

    இரண்டாம் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.5575 முதல் ரூ.6486 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்து 561 மதிப்பிலான தேங்காய் பருப்பு விற்பனையானது.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில், அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல் பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61½ குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை காய் விற்ப னைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.20-க்கும் என ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

    • சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
    • சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திடீரென கால வரையறை யற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக எங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

    தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருந்தால் அதற்கான நகலை காண்பி க்க வேண்டும், இந்த மாதம்5ம் தேதி இந்த சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கவுன்சி லர் சதாசிவகுமார் தலைமை தாங்கினார்.

    இந்த திடீர் போராட்ட த்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகராட்சி பொறுப்பு ஆணையர் குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் ஞாயிற்றுக்கிழமை அன்று டெண்டர் எடுத்த நபர் நேரில் வந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என உறுதி அளித்தார்.

    அதன் பிறகு போராட்டக்காரர்கள் அதுவரை தாங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இந்த டெண்டர் முறை தவறானது என்றும், ஒருவேளை சட்டப்படி டெண்டர் விடப்பட்டி ருந்தாலும் அதற்கான எந்த உத்தரவும் தங்களிடம் காண்பிக்கப்படவில்லை என்றும் கூறினர்.

    மேலும் எந்த உத்தரவும் இல்லாமல் டெண்டர் எடுத்த நபர் என கூறிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்வைஸர்கள் தங்கள் மீது அதிகாரம் செலுத்துவதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர்.

    பின்னர் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்பொழுது நகராட்சி அலுவலகத்திற்குள் பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் தொட ர்பாக கூறி சென்றுள்ளனர்,தொடந்து அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    • வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    முதல் தர பருப்பு மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்திலும், 2, 3-ம் தர பருப்பு, மறைமுக ஏலத்தி லும் விவசாயி களிடம் இருந்து கொள் முதல் செய்யப்பட்டது.

    மறைமுக ஏலத்தில் 1.30 டன் தேங்காய் பருப்பு ரூ.78 ஆயிரத்துக்கு விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.65.65 வரையும், 3-ம் தரம் ரூ.58.05 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், வெள்ளக் கோயில் மற்றும் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள், வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து, மத்திய அரசின் ஆதரவு விலை பெறலாம்.

    நேரடியாக வியாபாரி களிடம் ஏல முறையில் விற்பனை செய்து பயன் பெறலாம் என, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    ×