என் மலர்

  நீங்கள் தேடியது "renovation work"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  செய்துங்கநல்லூர்:

  தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் திருமூலநாதர் எனும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது.

  கோவில் மிகவும் பழுதடைந்து காண ப்பட்டதால் கோவிலை புனரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வல்லநாடு திருமூலநாதர் கோவில் சீரமைப்பு பணிக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  மேலும் இக்கோ விலுக்காக தன்னா ர்வலர்கள் இணைந்து ரூ.2 கோடி செலவு செய்ய முன் வந்துள்ளனர். எனவே ரூ.3 கோடி ரூபாய் செலவில் கோவில் சீரமைப்பு பணி தொடங்க உள்ளது.

  இதற்காக முதல் கட்டமாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய கொடிமரம், புதிய தேர் செய்யவும், 700 மீட்டரில் சுற்றுசுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.1 கோடியை கொண்டு கோவில் பணிகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

  இந்த நிலையில் வல்லநாடு திருமூலநாதர் திருக்கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. சுப்பிரமணியன், தாசில்தார் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, பாக்கியலீலா, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, பாரதி பள்ளி தாளாளர் சங்கரலிங்கம், வட வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் பேபி சங்கர், நங்கமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

  வல்லநாடு திருமூலநாதர் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்த காட்சி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
  • பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர்.

  பல்லடம்:

  பல்லடம் வடுகபாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பெருமைக்குரிய இந்தப்பள்ளியின் கட்டடம் ஒன்று மிகுந்த சேதமடைந்து இருந்தது.

  இதனை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் கட்டடத்தை சீரமைக்க முன் வந்தனர். இது குறித்து கடந்த மாதம் முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ரூ.30 லட்சம் செலவில் அரசுப் பள்ளி கட்டடத்தை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றி தரைத்தளத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிப்பது, அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

  இப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, சத்தியமூர்த்தி, ரமேஷ்குமார், மோகனகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர தி.மு.க.பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சசிரேகா ரமேஷ்குமார்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள்,மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
  ஏற்காடு:

  சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையினால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. பின்பு அது சரிசெய்யப்பட்டு 4 நாட்களுக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

  கனரக வாகனங்கள் மற்றொரு மலைப்பாதையான குப்பனூர் பாதையில் சென்று வந்தன. கடந்த வாரம் இந்த பாதையிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழியாகவும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

  இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏற்காட்டில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மேலும் கொண்டயனூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கொண்டயனூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மஞ்சகுட்டை, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

  இதைப்போல் ஏற்காடு மலைப்பகுதியில் மின்கம்பிகள் மீது மரம் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேரம் ஏற்காடு முழுவதும் இருளில் மூழ்கியது. ஏற்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

  இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு ஏற்காடு-சேலம் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே ராட்சத பாறைகள் உருண்டு வந்து விழுந்தன. இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் ராஜசேகர் மற்றும் சாலை ஆய்வாளர் ரமேஷ் உள்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

  பொக்லைன் எந்திரத்தை கொண்டு, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கியது. எனினும் ராட்சத பாறைகளை உடனடியாக அகற்ற முடியவில்லை. இதையடுத்து இன்று காலை கம்பரசர் கொண்டு கற்கள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டன.

  வழக்கமாக ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை மாலையே ஏற்காட்டில் குவியும் மக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தங்கி இருந்து இயற்கையை ரசிப்பார்கள்.

  தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் ஏற்காட்டில் உள்ள கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோதண்டராமர் கோவிலில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது நரசிம்மர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
  செஞ்சி:

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்அடிப்படையில் கோவிலின் முன்பு மண்டபம் அமைப்பதற்காக நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

  அப்போது 2 கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திய 2 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த நரசிம்மர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைபார்த்த திருப்பணிக்குழு நிர்வாகி துரைபாரதிராஜா, அருணகிரி ஆகியோர் நரசிம்மர் சிலையை எடுத்து கோவில் வளாகத்தில் வைத்தனர். அதன்பிறகு அந்த சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து நரசிம்மர் சிலையை பார்வையிட்டு வணங்கி சென்றனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள கிராமப்புற பகுதிகளில் ஓடை உள்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  திருவள்ளூர்:

  சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 2 ஆயிரத்து 544 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும்.

  கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து பேபி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

  தற்போது பருவமழை பொய்த்து போனதாலும், நீர்வரத்து குறைந்து போனதாலும் பூண்டியில் நீர் இருப்பு மிகவும் குறைந்து போனது.

  ஆந்திர அரசு கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலமாக பூண்டி ஏரிக்கு வழங்கும் தண்ணீரை கொண்டே சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் குடிநீர் ஆதாரத்தை பெருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.

  அதன்படி பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ள காரணி கைவண்டூர், சென்றான் பாளையம், எல்லப்பன் நாயுடு கண்டிகை,‌ பாண்டூர், ராமஞ்சேரி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஓடை உள்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

  பெரும்பாலான நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி உரியமுறையில் கால்வாய்கள் அமைத்து வருகின்றனர்.

  மேலும் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் சீரமைப்பு பணிக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவர்கள் மீது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது,

  கால்வாய் சீரமைப்பு பணி சுமார் ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும்.

  பூண்டி நீர்தேக்கத்தை சுற்றியுள்ள 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடை உள்வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பட்சத்தில் மழை காலத்தில் நீர் வீணாகாமல் இந்த ஓடை வழியாக பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைய வாய்ப்பு இருக்கிறது.

  இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சிபுரத்தில் சோமஸ்கந்தர் சிலை சீரமைப்பு பணியில் பொன்மாணிக்கவேல் தலைமையில் 30 பேர் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் உற்சவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது.

  இந்த சிலை செய்ததில் தங்கம் முறைகேடுகள் நடந்ததாக பக்தர்கள் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலையினை ஆய்வு செய்து அதில் கடுகளவு தங்கம் கூட கலக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

  அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ விழா தொடங்கியுள்ளது. இதில் பழைய சிலையினை வைத்து வீதி உலா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

  ஆனால் விழாவையொட்டி நேற்று சுவாமி திருவீதி உலா வரவில்லை. இதனால் பழைய சிலையினை சீரமைக்க அறநிலையத்துறையினர் தாமதம் செய்வதாக பக்தர்கள் கோவிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே மாமல்லபுரத்தில் இருந்து ஸ்தபதி குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்கள் முன்னிலையில் பழைய சோமஸ்கந்தர் சிலையை சீரமைத்தனர். ஏற்கனவே சிலைக்கு பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்து இருந்தது.

  நேற்று காலை கோவிலுக்கு வந்த பொன்.மாணிக்கவேல் சிலை சீரமைப்பு பணியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது பழைய சிலையினை சீரமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நாளை (இன்று) முதல் பழைய சிலை வீதி உலா நடைபெறும்.

  ஒரு ஏ.டி.எஸ்.பி. மற்றும் 30 பேர் கொண்ட எனது தலைமையிலான குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்” என்றார்.

  இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் கூறும்போது, “கோர்ட் உத்தரவுப்படி முறையாக சிலையினை சீரமைக்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது” என்றார்.

  கோவில் பிரம்மோற்சவ விழாவின்போது சுவாமிகள் நகரில் உள்ள 4 ராஜவீதிகள் வழியாக வலம் வருவது வழக்கம். 3-ம் நாள் திருவிழாவில் நேற்று மட்டும் உற்சவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் எழுந்தருள்வார். ஆனால் 3ம் நாள் திருவிழாவான நேற்று சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு சுவாமி வராததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குந்தா அணையில் இருந்து கெத்தை அணைக்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதையில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  மஞ்சூர்:

  நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டங்களின் கீழ் 12 நீர்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நீர்மின் நிலையங்களில் தினமும் மொத்தம் 834 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி நீர்மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் மின் உற்பத்திக்கு பிறகு அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குந்தா நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு 60 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும். பின்னர் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு 150 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரளி மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 180 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

  இதற்கிடையில் குந்தா, கெத்தை மற்றும் பரளி நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக குந்தா மற்றும் கெத்தை அணைகள் உள்ளன. ஆனால் இந்த அணைகளை தூர்வாராததால் சேறு தேங்கி உள்ளது. அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும்போது கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து மண், மரம், செடி, கொடிகள் தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. இவ்வாறு குந்தா மற்றும் கெத்தை அணைகளில் 50 சதவீதத்துக்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கி உள்ளன.

  இதனால் குறைந்தபட்ச மழை பெய்தாலே அணைகள் நிரம்பி விடுகிறது. மேலும் சேறு, சகதியால் குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

  இந்த நிலையில் அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் குந்தா மற்றும் கெத்தை அணைகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

  இதை தொடர்ந்து 2-வது கட்டமாக குந்தா அணையில் உள்ள சுரங்கப்பாதையை சீரமைக்க மின்வாரியம் முடிவு செய்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு குந்தா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று மின்வாரிய அதிகாரிகள் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணையில் இறங்கி சுரங்கப்பாதையை சுற்றி தேங்கி உள்ள சேறு, சகதி மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

  சுரங்கப்பாதை சீரமைப்பு பணி காரணமாக கெத்தை, பரளி மற்றும் குந்தா நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் மீண்டும் கனமழை பெய்ததால் சீரமைப்பு பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. #gajacyclone #heavyrain

  கொடைக்கானல்:

  கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் நகர், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு கொடைக்கானல்- வத்தலக்குண்டு, பழனிசாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மேல்மலை கிராமங்களுக்கும் போக்குவரத்து தொடங்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் காய் கறிகளை கிடைத்த விலைக்கு மதுரை மற்றும் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

  கடந்த 4 வருடங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

  பல ஏக்கர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. மேலும் அழுகல் நோய் தாக்கத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொடைக்கானல் நகர்பகுதியில் 75 சதவீதம் மின்வினியோகம் தரப்பட்டுள்ளது. மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 2 நாட்களில் மின்வினியோகம் சீரமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

  நேற்றிரவு சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கனமழையாக நீடித்தது. இதனால் சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மலை கிராமமக்கள் கடந்த 7 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உறவினர்களது வீடுகளுக்கு சென்று செல்போன் சார்ஜ் மற்றும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.

  இருந்தபோதும் மலை கிராமங்களில் இயல்புநிலை திரும்ப சில நாட்களாகும் என வேதனையுடன் தெரிவித்தனர். #gajacyclone #heavyrain

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோரதாண்டவமாடிய கஜா புயலால் மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கி நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. #GajaCyclone
  அறந்தாங்கி:

  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரதாண்டவமாடிய கஜா புயலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு துண்டிப்பால் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக மாறியுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட்ட கஜா புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில கிடப்பதால் மாவட்டம் முழுவதிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மரங்கள் வீடுகளில் சாய்ந்ததால் 100க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம், வருவாய், காவல்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பலத்த காற்று வீசியதால் வீட்டின் மேல்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

  கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, மாங்காடு , கொத்தமங்கலம்,கீரமங்கலம், அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா, வாழை, கரும்பு, காய்கறி பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.

  திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமணப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. கணினி, மின்சார வயர்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட 60விசைப் படகுகள் என்னஆனது என தெரியவில்லை. அதனை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  கட்டுமாவடி, முத்துக்குடா, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், பிள்ளையார் திடல், அந்தோணியார்புரம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி உள்ளிட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாவல் ஏரி பகுதியில் குடிசை வீட்டில் இருந்த 27 நரிக்குறவர் குடும்பங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மேலும் மாவட்டம் முழுவதும் சேத மதிப்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதோடு, மின்கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் சீரமைப்பு பணியும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் சேதமான பகுதிகளை சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #GajaCyclone
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. #VandaloorPark #ButterflyPark
  வண்டலூர்:

  வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா 2.7 ஹெக்டேர் பரப்பளவில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது, குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே இவை வருகை தரும். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

  தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவிற்குள் புதிதாக செடிகள் நடப்பட்டு உள்-அரங்கமும் சீரமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர தொடங்கியுள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிக்கு ராசி புரம் குவாரி கற்கள் பயன்படுத்தப்பட உள்ளது. #MaduraiMeenakshiTemple
  மதுரை:

  மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது:-

  மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவிலின் வீரவசந்தராயர் மண்படம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அதை மீண்டும் பழைய நிலையிலேயே புதுப்பித்து சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  மண்டப சீரமைப்புக்கான கற்களை தேர்வு செய்வதற்கு தமிழகத்தின் 16 இடங்களில் உள்ள குவாரிகளில் மாதிரிக் கற்கள் சேகரிக்கப்பட்டு அவற்றின் உறுதித்தன்மை, ஆயுள் போன்றவற்றை அறிய சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

  பரிசோதனை முடிவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டிணம் எனும் இடத்தில் உள்ள குவாரி கற்களே தேர்வாகியுள்ளன. அங்கிருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மண்டபத்துக்கு தேவையான 1 லட்சம் கனஅடி கற்கள் எடுக்கப்படவுள்ளன.

  அதில் சேதமடைந்தது போக 70 ஆயிரம் கன அடி கற்கள் பயன்படுத்தப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படும்.

  பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளில் மண்டபம் சீரமைக்கப்பட்டு விடும். கோவிலின் பொற்றா மரைக்குளத்தின் தெற்கு பகுதி மண்டபம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கிழக்கு பகுதி மண்டப சீரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. 2 மாதங்களில் பணிகள் நிறைவடையும்.

  இவ்வாறு அவர் கூறினார்.  #MaduraiMeenakshiTemple
  ×