search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flats"

    • பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
    • பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அருவங்காடு:

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.

    பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.

    அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.
    • ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

    சென்னை:

    பழமைவாய்ந்த எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடியில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    இந்த மறுசீரமைப்பு பணிகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் பணிகளை செய்து வருகிறது.

    இதையொட்டி முதல் கட்டமாக ரெயில் நிலையத்தை அளவீடு செய்து காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரெயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி சாலையில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து ரெயில்வே கட்டிட சிவில் என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-

    மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி சாலையில் 120-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

    1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டரில் கட்டிடம் அமைய உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன காப்பகங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது.

    ரெயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரெயில்வே பார்சல் பகுதி ரெயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது.

    இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது. இந்த பணிகள் 3 வருடத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    • பயனாளிகளை உறுப்பினர்களாக இணைத்து குடியிருப்பு நலச்சங் கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • விரைவில் வீடுகளில் குடியேறி விடுங்கள் எனஅறிவுறுத்தி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டங்களின் போது மக்கள் அளிக்கும் மனுக்களில் பெரும்பாலானவை மனை மற்றும் குடியிருப்பு கோரிக்கையாகத்தான் இருக்கும். ஆயிரக்கணக்கில் மனுக்கள் அளிப்பவர்கள் இருந்தாலும் தங்களுக்கு எப்படியாவது குடியிருப்போ, மனையோ ஒதுக்கப்பட்டு விடாதா என்ற ஏக்கம் பலரது கண்களிலேயே தெரியும். இது யதார்த்தம் என்றாலும் திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் 30 சதவீதம் பேர் வீடுகளை பெற்றும், குடியேறாமல் இருக்கின்றனர்.

    மாவட்டத்தில் நெருப்பெரிச்சல், வீரபாண்டி, அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட இடங்களில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் 3,744 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப் பட்டுவிட்டது.

    குடியிருப்போர் நலச்சங்கங்கள் அமைத்து குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என வாழ்விட மேம்பாட்டு வாரியம் வழிகாட்டியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும், பயனாளிகளை உறுப்பினர்களாக இணைத்து குடியிருப்பு நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    குடியிருப்புகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது, திடக்கழிவுகளை அகற்றுவது, குடிநீர் வினியோகம் செய்ய பணியாளர்களை நியமிப்பது, சுற்றுப்புறங்களில் தெருவிளக்கு பொருத்தி அதை பராமரிப்பது, குடியிருப்புகளை உரிய இடைவெளியில் புனரமைப்பது குடியிருப்பு வளாகத்தில் பூங்கா அமைத்து பராமரிப்பது பாதுகாப்புக்கென கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பல பணிகளை நலசங்கங்கள் ஏற்க வேண்டும்.

    இப்பணிகளை மேற்கொள்ளவும் அப்பணிக்கென நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்ய ஒவ்வொரு குடியிருப்புகளில் இருந்தும் 250 ரூபாய் வரை மாத சந்தா வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடியிருப்புகளை பெற்ற பயனாளிகள் பலர், வீடுகளை பூட்டி விட்டு குடியேறாமல் உள்ளனர். அந்த வகையில் 30 சதவீத வீடுகள் காலியாக உள்ளது என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சந்தா தொகையையும் செலுத்துவதில்லை. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியால், சங்கத்தை செயல்படுத்த முடியாமல் நலச்சங்க நிர்வாகிகள் திணறுகின்றனர். குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறங்களை சரிவர பராமரிக்க முடியாமல் திணறுகின்றனர்.

    இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு கூறியதாவது:-  அடுக்குமாடி குடியிருப்புகளை பராமரிக்கும் பொறுப்பு, குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியிருப்புகளை பெற்ற நாளில் இருந்து அவர்கள் சந்தா தொகையை செலுத்த வேண்டும்.

    சிலர் போக்கியத்திற்கு இருக்கும் வீடுகளை உடனடியாக காலி செய்துவிட்டு வர முடியாது. பிள்ளைகளின் படிப்பு முடிந்தவுடன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வருகிறோம். பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு வராமல் உள்ளோம் என பல காரணங்களை கூறி, இனியும் குடியேறாமல் உள்ளனர். விரைவில் வீடுகளில் குடியேறி விடுங்கள் எனஅறிவுறுத்தி வருகிறோம்.

    குடியிருப்போர் நலச்சங்கங்களின் செயல்பாடுகளுக்கு, குடியிருப்புவாசிகள் ஒத்துழைப்பு வழங்கினால் தான் குடியிருப்புகளின் பராமரிப்பு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றை சிரமமின்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார். 

    • திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.
    • மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

    அவிநாசி :

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி, சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு பலரும் குடியேறிவிட்டனர்.

    திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.இருப்பினும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற்றுத்தருவதாக கூறி சில அரசியல் கட்சியினர், தனி நபர்கள் சிலர் மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

    இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பூண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ,வீரபாண்டி, திருக்குமரன் நகர், பாரதி நகர், ஜெயா நகர், பூண்டி, அவிநாசியில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 3,744 வீடுகளுக்கும், மாவட்ட கலெக்டர் மற்றும் வாரியத்தின் ஒப்புதலுடன், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.புதிதாக மனுக்கள் எதுவும் பெறப்படாது என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.அவிநாசி சூளையில் அடுக்குமாடி குயிருப்பு உள்ள இடத்துக்கு, சோலை நகர் எனவும், திருமுருகன்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்துக்கு, பூண்டி நகர் எனவும் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தினர் பெயர் சூட்டியுள்ளனர்.

    • பாளை மனக் காவலம் பிள்ளை நகரில் உள்ள அம்பேத்கர் காலனியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பில் சுமார் 366 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் தற்காலிகமாக குடியிருப்பு அமைத்து தந்தால் மட்டுமே தற்போது வசிக்கும் இடத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாளை மனக் காவலம் பிள்ளை நகரில் உள்ள அம்பேத்கர் காலனியில் குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.

    இங்கு சுமார் 366 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் அவ்வப்போது கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்தது.

    அந்த குடியிருப்பை முற்றிலுமாக அகற்றிவிட்டு புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அந்த குடியிருப்பை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி ரூ.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள பொதுமக்கள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு செல்லுமாறும் அதற்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வாடகை தொகை தருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் தற்காலிகமாக குடியிருப்பு அமைத்து தந்தால் மட்டுமே தற்போது வசிக்கும் இடத்திலிருந்து வெளியேறு வதாக தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமூக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை அந்த குடியிருப்பு பகுதியில் மண் பரிசோதனை செய்வதற்காக அதிகாரிகள் தலைமையில் பணியா ளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் விரைவாக பணிகள் தொடங்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    408 வீடுகள்

    தற்போது கட்டப்பட உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பில் 408 வீடுகள் கட்டப்பட உள்ளது. இது தவிர 60 குடும்பங்கள் அந்த பகுதியில் குடிசை அமைத்து தங்கி இருப்பதாகவும், மாநகராட்சி குடியிருப்பு கட்டிடத்தில் வாடகைக்கு 30 குடும்பங்கள் உள்ளதாகவும் அவர்களுக்கும் குடியிருப்பில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தங்களது வீடுகள் அமைய உள்ள வரைபடத்தை காட்டுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
    • பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் ஏழை- எளிய மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.வரும் காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    75சதவீத கட்டுமான பணி முடிந்து விட்டது. மீதம் உள்ள பணிகள் முடிந்ததும் பயனாளிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
    • தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை, தலைமைச் செயலகத்தில் 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    4,880 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, பிளாட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பட்ஜெட், அது அமைந்துள்ள இடம், அளிக்கப்பட்டுள்ள வசதிகளான குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, விஷேச நிகழ்ச்சிகளை நடத்தும் ஹால், பாதுகாப்பு வசதிகள், தோட்டம், லிப்ட் வசதி மற்றும் குடிநீர் ஆகிய நிலைகளை பொறுத்து அமைந்திருக்கும். பட்ஜெட் தவிரவும், ஒரு சில விஷயங்களை பிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியதாக உள்ளது. அவற்றில் முக்கியமான 5 விஷயங்கள் பற்றி ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் குறிப்பிட்டதாவது ;

    1. வீடுகளை சுற்றிலும் மற்றும் முன்பக்கம் ஆகிய இடங்களில் சரியான அளவில் காலி இடம் இருக்கவேண்டும்.

    2. கட்டுமான திட்டத்தில் உள்ள அனைத்து பிளாட்-களுக்கும் UDS என்ற பிரிக்கப்படாத மனையின் பங்கு சரியான முறையில் பிரித்து தரப்பட்டிருக்கவேண்டும்.

    3. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தக்க பார்க்கிங் வசதி இருப்பதோடு, கார்களை பார்க்கிங் செய்ய சுமாராக 300 சதுர அடி அளவுள்ள இடமாவது இருக்க வேண்டும்.

    4. பிளாட்டுகளின் மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வழக்கமாக அளவுக்குள் இருக்கவேண்டும்.

    5. பெரும் மழை, அதிகப்படியான வெள்ளம் ஆகியவற்றால் பிளாட் மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லாமல் இருப்பது அவசியம். 
    ×