search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teak Tree"

    • பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
    • பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அருவங்காடு:

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.

    பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.

    அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவராகவும், விவசாய முன்னேற்ற கழக தலைவராகவும் இருப்பவர் செல்ல.ராசாமணி.

    இவர் ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.

    இது தொடர்பாக கூட்டுறவு துறை சார்பாக அளித்த தகவலின்பேரில் வருவாய்துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அப்போது பதவி வகித்து வந்த சங்க செயலாளர் பொன்னுசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என சங்க உறுப்பினர் நாச்சிமுத்து என்பவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தேக்கு மரங்களை வெட்டுவதற்கு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும், முறையாக அனுமதி பெறாமல் வெட்டப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிரடியாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×