search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal Office"

    • கலந்தாய்வு கூட்டம் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
    • வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வாங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும், வார்டுகளில் வாறுகால் சுத்தம் செய்யும்படியும் சேர்மன் உமா மகேஸ்வரி, தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நகராட்சியில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
    • குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள்,மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. உரிய உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிட்டுள்ளபடி நேரம்,வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்ட படி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யா விட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் குற்றவியல் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர்.
    • அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கான வரியினங்களை நிர்வாகத்தினர் தீவிரமாக வசூலிப்பதற்காக அனைத்து வார்டு பகுதிகளிலும் மைக் மூலம் வரியினங்களை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வரி செலுத்தாதவர்களின் வீடு தேடி சென்று தீவிரமாக வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த 91 வயதான ராஜாமணி என்ற மூதாட்டி நடக்க முடியாத நிலையிலும் கையில் கம்பு ஊன்றியபடி அவினாசி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து தனது வீட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தி ரசீது பெற்று சென்றார். இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபணத்தை அந்தந்த காலகெடுவுக்குள் கட்டுவது நமது கடமை. அதை கட்டாமல் இருந்தால் பெரும் குறையாக எனக்கு தோன்றும். வரித்தொகையை கட்டிமுடித்ததில் நான் திருப்தியடைந்தேன் என்று கூறி அங்கிருந்த அலுவலர்களை இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து புறப்பட்டு சென்றார். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் வரியினங்களை செலுத்த காலம் கடத்தும் நிலையில் நடை தளர்ந்த நிலையிலும், அலுவலகத்திற்கு நேரில் வந்து வரி செலுத்திய மூதாட்டியை பலரும் பாராட்டினர்.

    • பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க கோரி வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விசுவநாதன் தலைமையில் பெண்கள் காலிக்குடங்க ளுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர்.

    இது குறித்து தகவலறித்த அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அந்தியூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முற்றுகை யிட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடுயின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
    • திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி பேரூராட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் நகராட்சி பணிகளில் தொய்வு ஏறபட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகராட்சி தலைவர் குமார் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித்துறை நிர்வாக இயக்குனர் பொன்னையனை சென்னையில் சந்தித்து நகராட்சிக்கு தேவையான வசதிகள் குறித்து கோரிக்கை மனு வழங்கி இருந்தார்.

    இந்த நிலையில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் ராஜன், யுவராஜ், மதிவாணன், சுப்பிரமணியம், நடராஜ் உள்பட மேலும் ஒரு சில கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர், அதிகாரிகள் நியமனம், சாலை, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாக்கடை கால்வாய் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்காக இயக்குனர் ராஜனிடம் கோரிக்கைகளாக வைத்தனர்.

    மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளிலும் இந்த பிரசசினை இருப்பதாகவும், அடுத்த சனிக்கிழமைக்குள் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    • ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது.

     ஊட்டி

    ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரசபை தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் காந்திராஜன், துணைத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ஜாா்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில், இருந்த கால்வாயை மறைத்து ஏற்கனவே ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இரு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தில் கால்வாயை மறைத்து கட்டிடங்கள் கட்டுவதற்கு எவ்வாறு நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது?

    மேலும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கிய போதிலும், பணி செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளதால், நகரில் எந்த ஒரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். நகராட்சியே அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்:

    ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் 1,500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஊட்டி நகராட்சியிலேயே அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேல் கட்டிடங்கள் கட்ட மற்ற துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஆனால், ஊட்டி நகரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    அதன்பின் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. எனவே 1,500 சதுரடிக்குள் கட்டிடங்கள் கட்ட நகராட்சியே அனுமதி அளிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கவுன்சிலா்களும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும், மாஸ்டா் பிளான் சட்டத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.

    முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட பட்பயா் நிலத்தை டைடல் பாா்க் அமைக்க மாவட்ட நிா்வாகத்துக்கு ஒப்படைக்க கூடாது. இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சி மாா்க்கெட் கட்டிடங்களை இடித்து கட்டும்போது, தற்போது அங்கு கடை வைத்துள்ளவா்களுக்கே மீண்டும் கடைகள் வழங்க வேண்டும்.

    ஆணையா் காந்திராஜன்: ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டின் ஒரு பகுதி ரூ.29 கோடியில் இடித்து கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் கடைகளும், மேல் தளத்தில் பாா்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

    தம்பி இஸ்மாயில் (திமுக): எனது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும். மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், எனது வாா்டில் நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    அபுதாகீா் (மநேம): ஊட்டி நகராட்சிப் பணியாளா்களுக்கு காந்தல் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இவை மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் பணியாளா்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த குடியிருப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

    ரஜினி (காங்கிரஸ்): எனது வாா்டுக்கு உள்பட்ட அலங்காா் பகுதியில் மழை நீா் செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு விவாதங்கள் நடந்தது. தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • ராம பட்டினம் கிராமத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
    • 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அருகே ராம பட்டினம் எனும் கிராமத்தில் சுமார் 2500க்கும்மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், அங்கன்வாடி பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அங்கன்வாடி பள்ளி சமையலறையை ஒட்டி கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு புறக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகின்றன .அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் , குழந்தைகளுக்கு தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் பரவும். ஆகையால் மாற்று இடங்களில் கட்ட வேண்டுமென வலியுறுத்தினர். கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவி ஆகியோரிடம் வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து பேரூராட்சி வளாகம் முன்பு இன்று பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை வசதி அமைக்க கோரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து ஐ.யூ.டி.எம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து சாக்கடை கால்வாய் அமைக்க ஆக்கிரம்புகள் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் குடியிருப்புகள் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை எந்த பணியும் செய்யாமல் இருப்பதால் குடியிருப்புகள் முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் செய்ய முடியாமல் அவதியில் உள்ளனர்.

    நேற்று அப்பகுதி மக்கள் காடையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலர் மயில்வாகனத்திடம் கால்வாய் அமைக்க மனு வழங்கினர். பேரூராட்சி தலைவர் குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×